• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-30 09:22:02    
சீனாவின் நீர் கன சதுர விளையாட்டரங்கு கட்டி முடித்தது

cri

பெய்ஜிங் 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சிறப்பு வாய்ந்த அரங்குகளில் ஒன்றான நீர் கன சதுர விளையாட்டரங்கு, அதிகாரப்பூர்வமாகக் கட்டி முடிக்கப்பட்டு, பயன்படுத்தப்படத் துவங்கியது.
அது, பெய்ஜிங் ஒலிம்பிக் பூங்காவின் மையப் பிரதேசத்திலுள்ள தென் பகுதியில் அமைந்துள்ளது. போட்டி நடைபெறும் போது, அதன் கட்டிட நிலப்பரப்பு, சுமார் 80 ஆயிரம் சதுரமீட்டராகும். 17 ஆயிரம் இருக்கைகள் உள்ளன.
அதிஷ்டமுள்ள பெய்ஜிங் என்ற 2008 சீன நீச்சல் வெளிப்படையான போட்டி, முதல் போட்டியாக, ஜனவரி திங்கள் 31ம் நாள், இங்கு நடைபெறும்.
இப்போது வரை, பிரேசிலின் 152 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் தகுநிலைகளை பெற்றுள்ளனர் என்று பிரேசில் ஒலிம்பிக் அமைப்பு குழு 28ம் நாள் அறித்தது
கைபந்து, கால்பந்து, ஜிம் நாஸ்டிக், வள்ள ஓட்டப் பந்தயத்தின் நிகழ்ச்சி உள்ளிட்ட போட்டிகளில் அவர்கல் கலந்துகொள்வர்.

29வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தேவையை நிறைவு செய்யும் வகையில், பெய்ஜிங், 31 விளையாட்டரங்குகளையும் பயிற்சியரங்குகளையும் கட்டியமைக்கும். இது வரை, தேசிய விளையாட்டரங்கு ஆக்கப்பணி, முடிவடைய உள்ளது. இதர 30 விளையாட்டரங்குகள், 44 பயிற்சியரங்குகள் முடிவடைந்தன என்று பெய்ஜிங்கின் துணை தலைவரும் 2008ம் ஆண்டு ஆக்கப்பணி தலைமையகத்தின் தலைவருமான chen gang 28ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
2008ம் ஆண்டு ஐரோப்பிய ஆடவர் கை எறி பந்து சாம்பியன் போட்டியின் இறுதி போட்டி, 28ம் நாள் விடியற்காலை நார்வேயில் முடிவடைந்தது. டென்மார்க், 24-20 என்ற கோல் கணக்கில் கிரோஷியாவை தோற்கடித்து, சாம்பியன் பட்டம் பெற்றது. இதனால் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் தகுதியை அது பெற்றுள்ளது.

இதர போட்டியில், கடந்த சாம்பயினான பிரான்ஸ் 36-26 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வென்று 3வது இடம் வகித்தது.
அடுத்த ஐரோப்பிய ஆடவர் கை எறி பந்து சாம்பியன் போட்டி, 2010ம் ஆண்டு ஆஸ்திரியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பயணம் மேற்கொண்டு வரும் கஸாகஸ்தான் நாடாளுமன்றத்தின் மேல் அவையின் தலைவர் Tokaevவும் அவருடன் இணைந்து வந்த குழுவினரும் இன்று பெய்சிங் வெளிநாட்டு மொழி பயிற்சிப் பள்ளியைப் பார்வையிட்ட போது, 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அருமையான வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
பண்பாடு மற்றும் விளையாட்டுத் துறையில் இரு நாட்டு மாணவர்களுக்கிடையில் நட்புப்பூர்வ பரிமாற்ற நடவடிக்கைகளை மேலும் அதிகமாக மேற்கொள்ள தாம் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.