• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-31 11:18:50    
திபெத்தின் தேசியப் பொருளாதாரம்

cri
2007ம் ஆண்டு, சீனாவின் திபெத்தில் தேசியப் பொருளாதாரம், நிதானமாகவும் விரைவாகவும் வளர்ந்து, சீரான நிலையை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது. 2007ம் ஆண்டு, திபெத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 3 ஆயிரத்து 400 கோடி யுவான் ரென்மின்பிக்கு மேலாகும். தொடர்ந்து 7 ஆண்டுகளில் அதிகரிப்பு வேகம், 12 விழுக்காட்டுக்கு மேலாக இருந்து வந்துள்ளது.

நேற்று, திபெத்தின் லாசாவில் நடைபெற்ற திபெத் தேசியப் பொருளாதாரத்தின் செயல்பாடு நிலை பற்றிய செய்தியாளர் கூட்டத்தில், இத்தகவல் கிடைத்தது.

2007ம் ஆண்டு, திபெத்தின் வேளாண் துறையின் ஒட்டுமொத்த உற்பத்தியாற்றல், தொழிற்துறையின் உற்பத்தி ஆகியவை, சீரான முறையில் உயர்ந்துள்ளன. வெளிநாட்டு வர்த்தக ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் மொத்தத் தொகை, சுமார் 40 கோடி அமெரிக்க டாலர் ஆகும்.