• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-31 16:47:14    
மேற்கு மலைகள் (இ)

cri

இலையுதிர்காலப் பிற்பகுதியில் இரண்டு மூன்று வாரங்களுக்குச் சுகந்த மலைச் செந்தளிர்களைக் கண்டுகளிக்கலாம். அதே வேளையில் இம்மரங்கள், வசந்த, இலையுதிர்காலங்களில் தொலைப் பார்வைக்குப் பனிப்புகார் போல் தோன்றும் இறகு போன்ற சிறிய காவி மலர்களைப் பூக்கின்றன.


இந்தப் பூங்காவில் மிக நேர்த்தியான, அழகிய மாதிரியில் அமைந்த ஒரு சிறு சோலையும் உள்ளது. அதன் மத்தியில், மூன்று பக்கங்களிலும் தாழ்வாரங்களுடைய வட்டக் குளம் ஒன்று இருக்கின்றது. கல்லில் செதுக்கிய வேதாளத்தின் வாயிலிருந்து கள கள என்று பாயும் ஊற்று நீரானது, அமைதியான அக்கண்ணாடிக் குளத்தில் பாய்கிறது. அதே வேளையில், நீர்க் கொடிகளுடன் மீன்கள் வாழும் அக்குளத்தில், படித்தலம், மணிமண்டபம், செய் குன்றுகள், பைன், சைப்பிறஸ் மரங்கள் ஆகியவற்றின் பிரதிபிம்மங்கள் கண்ணுக்கு விருந்து அளிக்கின்றன.


சுகந்த மலைப்பூங்காவை அடுத்து, 1321 இல் கட்டப்பட்ட நீல முகில் ஆலயம் இருக்கிறது. 508 பெளத்த சீடர் உருவங்களைக் கொண்ட இந்த மிங் வம்ச காலச் சிற்பங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இச்சிற்பங்கள் ஒவ்வொன்றும் வேறுபட்ட கோலத்திலும் வெவ்வேறு முகபாவத்துடனும் செதுக்கப்பட்டுப் பழங்கால சீனக் கலைஞர்களின் கற்பனை வளத்தையும் படைப்பு திறமையும் துல்லியமாகத் தெரிவிக்கின்றன.