• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-31 11:38:44    
2008ம் ஆண்டில் தமிழ்ப் பிரிவின் நிகழ்ச்சியில் சீர்த்திருத்தம்

cri
கலை.....வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம்.
தமிழன்பன்........கலையும் நானும் உங்களுக்கு இந்நிகழ்ச்சி வழியாக சேவை புரிந்து பல தகவல்கள் வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.
கலை......இன்றைய நிகழ்ச்சியின் முதல் பகுதியில் சிறுநாயக்கன்பட்டி கே. வேலுச்சாமி கேட்ட கேள்விக்கு பதிலளிக்க போகின்றோம்.
தமிழன்பன்........அவர் என்ன கேள்வி எழுப்பியுள்ளார்?
கலை.......2008ம் ஆண்டில் தமிழ்ப் பிரிவு நிகழ்ச்சிகளில் ஏதாவது மாற்றம் உண்டா என்று அவர் கேட்டுள்ளார்.
தமிழன்பன்.......அப்படியிருந்தால் நாம் அவர்களுக்கு நம்முடையி திட்டங்கள் பற்றி விளக்கிக் கூறலாமே.
கலை.......ஆமாம். அப்படியே செய்யலாம்.


தமிழன்பன்..........சென்ற ஆண்டில் நமது வானொலி நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரலின் படி ஒலிபரப்பட்டன அப்படித்தானே.
கலை......ஆமாம். ஏற்கனவே 23 நிகழ்ச்சிகள் உள்ளன. மேலும் அதிகரிக்க வேண்டுமென்னால் நன்றாக ஆலோசனை செய்ய வேண்டும்.
தமிழன்பன்.......நீங்கள் சொல்வது சரிதான்.
கலை....... இப்போதைய நிகழ்ச்சிகளில் திபெத் பற்றிய நிகழ்ச்சி இல்லை. இந்த ஆண்டில் வாய்ப்பு இருந்தால் திபெத் இனம் பற்றி கூடுதலாக அறிந்து கொள்ள அதற்கான நிகழ்ச்சியை தொடங்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம்.
தமிழன்பன்........அப்படியானால் நாம் அதற்காக ஆயத்தப் பணிகளை செய்ய முயற்சிக்க வேண்டும் தானே.
கலை.......ஆமாம். 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் ஆண்டாகும். இதற்காக பெய்ஜிங் மாநகர மக்கள் சுறுசுறுப்பாக ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்.


தமிழன்பன்........ நிச்சயமாக நாமும் பெய்ஜிங் ஒலிம்பிகிற்காக சிறப்பு பணிகள் செய்ய வேண்டும்.
கலை......கண்டிப்பாக. பெய்ஜிங் ஒலிம்பிக் நடைபெறும் வரை ஒலிம்பிக் பற்றி நாம் சிறப்பு நிகழ்ச்சி நடத்தலாம்.
தமிழன்பன்........பெய்ஜிங் ஒலிம்பிக் பற்றிய நல்ல செய்திகளை அறிவிக்கலாமே. அப்படியானால் நாள்தோறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கென 5 நிமிட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யலாம்.
கலை......நீங்கள் முன்மொழிந்துள்ளதை கருத்தில் கொள்ளலாம். நல்லது தான். அப்போது நாள்தோறும் 5 நிமிடம் ஒலிம்பிக் சிறப்பு நிகழ்ச்சி நடத்தலாம் என தீர்மானம் செய்வோமா.
தமிழன்பன்........சரி. ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் தமிழ் ஒலிபரப்பின் 45வது ஆண்டு நிறைவை வரவேற்கின்றது. அந்த நல்ல தருணத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் வண்ணம் நாம் ஏதாவது செய்ய வேண்டும்.
கலை.......அதை கொண்டாடும் வகையில் இந்த கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி மூலம் "நானும் தமிழ் ஒலிபரப்பின் 45 ஆண்டுகளும்" என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டி அதிகாரப்பூர்வமாக துவக்கியதை இப்போதே அறிவிக்கின்றோம்.


தமிழன்பன்........ ஆவ. இதனால் நேயர் நண்பர்கள் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள் நேயர்களே. கடிதத்தின் வலது பக்கத்தில் 45ம் ஆண்டு நிறைவு என்ற சொற்களை எழுதி தமிழ் ஒலிபரப்பின் 45வது ஆண்டு நிறைவுக்கான கட்டுரையை அனுப்புங்கள்.
கலை.......ஏப்ரல் திங்கள் முதல் நாம் கட்டுரைகளை சிறப்பு நிகழ்ச்சியில் ஒலிபரப்ப ஏற்பாடு செய்வோம்.
கலை.......இதனை மீண்டும் உறுதிப்படுத்துகின்றோம். ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் தமிழ் ஒலிபரப்பின் 45வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் இந்த கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி மூலம் "நானும் தமிழ் ஒலிபரபின் 45 ஆண்டுகளும்" என்னும் கட்டுரைப் போட்டி அதிகாரப்பூர்வமாக தொடங்கியதை அறிவிக்கின்றோம்.
தமிழன்பன்........ கடிதத்தின் வலது பக்கத்தில் "45ம் ஆண்டு நிறைவு" என்ற சொற்களை எழுதி தமிழ் ஒலிபரப்பின் 45வது ஆண்டு நிறைவுக்கான கட்டுரையை அனுப்புங்கள்.


தமிழ்ப் பிரிவின் பணிச் சுமையை குறைக்கும் வகையில் வசதி கொண்ட நேயர்கள் கனிணியில் தட்டச்சு செய்து மின்னஞ்சல் மூலம் கட்டுரையை அனுப்பினால் நலமாக இருக்கும் என்பதையும் தெரிவித்து கொள்கின்றோம்.
கலை......கட்டுரையை பெற்றவுடன் நாங்கள் சரிபார்த்து விட்டு அதனை ஒலிபரப்ப ஏற்பாடு செய்வோம்.
தமிழன்பன்.......நேயர்களே இந்த நிகழ்ச்சியை கேட்டவர்கள் அனைவரும் உடனே கட்டுரையை எழுத தொடங்கலாம். இக்கட்டுரை போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்கள்.