• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-31 12:12:26    
உலகின் மீக நீண்ட ரோலர் கோஸ்டர்

cri

உலகின் மீக நீண்ட ரோலர் கோஸ்டர்
கேளிக்கை பூங்காக்களில் மேலெழும்பி கீழே உருண்டு மீண்டும் வளைந்து நெளிந்து ஓடும் தொடர் வண்டி போன்ற வாகனத்தை பார்த்திருப்போம். ஆங்கிலத்தில் இதை ரோலர் கோஸ்டர் என்று கூறுகின்றனர். கேளிக்கை உருளை வாகனம் என்று நாம் தற்போதைக்கு அழைக்கலாம். உலகின் மிக நீண்ட கேளிக்கை உருளை வாகனம் தற்போது சீனாவின் குவாங்துங் மாநிலத்தில் தலைநகரான குவாங்சோவிலுள்ள ஒரு கேளிக்கை பூங்காவில் விரைவில் பயன்பாட்டில் இறங்கவுள்ளது. ஸ்விஸ் நாட்டு வடிமைப்பில் உருவான இந்த கேளிக்கை உருளை வாகனம் வரும் பிப்ரவரி 7 சீனப் புத்தாண்டு நாளில் 80 மீட்டர் உயரத்திலிருந்து கீழே சர்ரென்று இறங்கும் அனுபவத்தை அளிக்கத் துவங்கும். ஒரே நேரத்தில் 30 பேர் அமர்ந்து செல்லக்கூடிய வசதி கொண்ட இந்த கேளிக்கை வாகனத்தின் அதிக பட்ச வேகம் மணிக்கு 120 கி மீட்டராகும். மணிக்கு 120 கி. மீ வேகத்தில் 30 அடுக்கு மாடியிலிருந்து கீழே குதிப்பது போன்ற அனுபவம் பெற விரும்புவோர் குவாங்சோவுக்கு செல்லலாம்.

குலுக்கல் சீட்டில் 21 மில்லியன் யுவான்
சீனாவின் வூஹான் நகரைச் சேர்ந்த ஒருவருக்கு அண்மையில் குலுக்கல் சீட்டில் 20.85 மில்லியன் யுவான் பரிசு கிடைத்துள்ளது.
சீன நலவாழ்வு குலுக்கல் சீட்டு நிறுவனத்தால் நடத்தப்பட்ட குலுக்கலில் 10 யுவான் செலுத்தி வாங்கிய சீட்டில் இந்த நபர் இலட்சாதிபதியாகியுள்ளார். 7 சோடி இரட்டை எண்களை தேர்ந்தெடுத்த இந்த நபர் வழமையான 2 யுவான் செலுத்தி சீட்டு வாங்காமல் 10 யுவான் செலுத்தியதால், பரிசுத்தொகை 5 மடங்கானது. உண்மையில் முதல் பரிசு 4.15 மில்லியன் மட்டுமே ஆனால் 5 மடங்காகி 20.85 மில்லியன் யுவான் தொகை பெறவுள்ளார்.

அளவு குறையும் வீடுகள்
ஷாங்காய் மக்கள் இனிமேல் வீடு வாங்கும்போது, பல அறைகள் கொண்ட, ஆடம்பர வீடாக வாங்கவேண்டும் என்றெல்லாம் அதிகம் யோசிக்க தேவையில்லை. ஷாங்காய் மாநகராட்சி வரும் 2010ம் ஆண்டு முதல் புதிதாக கட்டப்படும் அனைத்து அடுக்கு மாடி குடியிருப்புகளிலும் வீடுகளின் அளவு தற்போதுள்ளதை விட 15 விழுக்காடு சிறியதாக இருக்கவேண்டும் என்று விதிக்கவுள்ளது. 65 விழுக்காடு எரியாற்றல் சேமிக்கும் வகையிலும் கட்டப்படவேண்டிய வீடுகளின் இந்த புதிய மாற்றம், நகரத்தின் தொடரவல்ல வளர்ச்சி பங்காற்றும் என்று நம்பப்படுகிறது. ஷாங்காய் நகரம் நில பற்றாக்குறை பிரச்சனையை எதிர்கொண்ட நகரமாகும்.

உலகின் மிகப் பெரிய நீச்சல் குளம்
உலகின் மிகப்பெரிய நீச்சல் குளம் எங்கிருக்கிறது தெரியுமா? சிலி நாட்டின் தென் கடலோர நகரான அல்காரோபோ என்ற நகரில்தான். இந்நகரிலுள்ள சான் அல்ஃபோன்சோ டெல் மார் என்ற தனியார் உல்லாச விடுதியில் உள்ள இந்த நீச்சல் குளம், 1013 மீட்டர் நீளத்தில் மொத்தம் 20 ஏக்கர் பரப்பளவில் சிறு படகு மூலம் பயணிக்கக் கூடிய அளவில் பிரம்மாண்டமாக உள்ளது. இந்த நீச்சல் குளத்தில் உள்ள மொத்த நீரின் அளவு 25 கியுபிக் மீட்டராகும். கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் உலகின் மிகப் பெரிய நீச்சல் குளம் என்ற சாதனையில் இக்குளம் பதிவாகியுள்ளது.

சாரைப்பாம்பை ஏமாற்றும் அணில்கள்
பாம்புகளை மகுடி ஊதி மயக்கும் வித்தையை நாம் பார்த்திருப்போம். காதுகள் இல்லாத பாம்பை எப்படி மகுடியால் மயக்கமுடியும் என்பது வேறு கதை. அதை விடுவோம், பாம்புகளுக்கு வாசம் காட்டி மோசம் செய்யும் அணில்களை பற்றிய ஒரு சுவையான தகவல் உங்களுக்காக. சாரைப்பாம்புகளுக்கு அணில்கள் என்றால் அல்வா சாப்பிடுவது போல. ஆனால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று பாம்புகளின் வாசனையை பயன்படுத்தியே சாரைப்பாம்புகளிடமிருந்து தப்பித்து அணில்கள் அல்வா கொடுப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாம்புகள் தோலுரித்து புதுத்தோல் போர்த்திக்கொள்கின்றன அல்லவா. அப்படி அவை உரித்து போடும் தோலை மென்று அந்த சாற்றை தமது உடலெங்கும் பூசியும், பாம்புகள் தங்கும் இடத்தில் உருண்டு பிறண்டு மண்ணில் குளித்தும் இந்த அணில்கள் பாம்புகளின் வாசனையை தங்கள் மேனியில் ஏற்றிக்கொள்கின்றன. காதுகள் இல்லாத பாம்புகளின் கண்களின் பார்வையும் மந்தமானதே. ஆனால் அவற்றின் நாசி நன்றாக வாசனையை அறியக்கூடியது. ஆக வாசனையால் இரையை உணரக்கூடிய வாய்ப்பேயில்லாதபடி இந்த அணில்கள் தந்திரம் செய்து தப்பித்துக்கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது.


பறவை பாட்டி
அம்மா வழி பெற்றோரோ, அப்பாவழி பெற்றோரோ, தாத்தா பாட்டியின் அரவணைப்பில், அன்பில் வளராத சிசுக்கள் குறைவே. தான் பெற்ற பிள்ளையின் பிள்ளையை கைகளில் ஏந்தி கொஞ்சி மகிழ்வதே ஒரு தனி ஆனந்தம். இதெல்லாம் பொதுவாக மனிதர்களிடத்தில் காணப்படும் பண்புநலன்கள் அல்லவா. மனித இனத்தை தவிர மற்ற உயிரினங்களில் இது போல் உண்டா ? சிஷெல்ஸ் வார்ப்லர் என்ற பறவையினம் இதுபோல தாத்தா பாட்டி கடமைகளை செய்வதாக அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இந்த பறவையினத்தின் பெண்பறவைகள் மகப்பேற்றை புறக்கணித்து தங்களது பெண்களின் மகப்பேற்றுக்கும், புதிதாக பிறக்கும் தங்கள் பேரக்குஞ்சுகளுக்கு உதவுகின்றதாக கண்டறியப்பட்டுள்ளது. அடைகாப்பது, குஞ்சுகளுக்கு உணவளிப்பது என மூத்த பறவைகள் நல்ல பாட்டிகளாக நடந்துகொள்வதை காணமுடிகிறதாம். மூத்த பறவைகளில் மூன்றில் இரண்டு பங்கு பறவைகள் கருத்தரிப்பதை மறுத்து தங்களது பெண்களுக்கு உதவுவதில் ஈடுபடுகின்றன. ஆனால் இது இந்த பெண் பறவைகளின் சொந்தத் தெரிவா அல்லது ஆண் பறவைகள் இவற்றை மூப்பு காரணம் ஒதுக்கியதால் ஏற்பட்ட தெரிவா என்பது தெரியவில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். எது எப்படியோ கதை சொல்லி சோறூட்ட ஒரு பாட்டி இருப்பது பறவைக்குஞ்சுகளுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும் என்பது எமது நம்பிக்கை.