• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-01 17:04:44    
ஆழமாக வளரும் பண்பாட்டுப் பரிமாற்றம்

cri

சீனப் பெருநிலப்பகுதி தொடர் தூண்டுதல் மற்றும் இரு கரை உடன்பிறப்புகளின் கூட்டான முயற்சியுடன் தைவான் நீரிணையின் இரு கரை பண்பாட்டுப் பரிமாற்றமும் ஒத்துழைப்பும் தொடர்ந்து ஆழமாகி வருகின்றன.
புள்ளிவிபரங்களின்ப்படி, 2007ம் ஆண்டின் இறுதி வரை, இரு கரை பண்பாட்டுப் பரிமாற்ற நடவடிக்கைகள் 5 ஆயிரத்தைத் தாண்டின. 2007ம் ஆண்டின் முதல் 10 திங்களில், அவற்றுக்கிடையிலான பண்பாட்டுப் பரிமாற்ற நடவடிக்கைகளின் எண்ணிக்கை 438 ஆகும். தற்போது, இலக்கியம், ஓவியம், இசை, நாடகம், நடனம், ஆக்ரோபேடிக்ஸ் எனப்படும் கழைக்கூத்து, தொல் பொருள், இலக்கிய கல்வி, நூலகம், பண்பாட்டு நிர்வாகம் முதலிய துறைகளில் இரு கரைகளின் பண்பாட்டுப் பரிமாற்றம்,மேற்கொள்ளப்பட்டுள்ளது.

9வது சாங்காய் சர்வதேச கலை விழாவில், சீனாவின் பாரம்பரிய நாடக பாணியில் இயற்றப்பட்ட qiyuanbao என்ற நிகழ்ச்சி உள்ளிட்ட நாடகங்களை, தைபெய் கலைக் குழு அரங்கேற்றியது. இந்நாடகம், பொது மக்களால் ஆரவாரமாக வரவேற்கப்பட்டது. இக்கலைக் குழுவின் உறுப்பினர்கள், இரு கரை பண்பாட்டுப் பரிமாற்றங்களை முழுமையாக வெளிப்படுத்திகினர். இதுவே தைபெயில் முதலாவது பண்பாட்டுப் பரிமாற்றக் குழுவாகும். இரு கரையின் பண்பாட்டுப் பரிமாற்றம் நன்றாக வளர்ந்து வருகிறது. கலை, பரஸ்பர கல்வி உணர்வு பரிமாற்றம் ஆகியவை இரு கரைகளுக்கும் இன்றியமையாதவை. தைபெய் கலைக் குழுவுக்கும் தமது கலைக் குழுவுக்குமிடையில் நன்றாக ஒத்துழைப்பு ஏற்பட்டு, மீண்டும் ஒன்றாக செயல்பட தான் விரும்புவதாக இந்நாடகத்தின் பெருநிலப்பகுதியைச் சேரந்த ஒரு நாயகர் libaochun என்பவர் தெரிவித்தார்.

நாடகத் துறையில், இரு கரைகளும் கூட்டாகத் தயாரிப்பது மற்றும் அரங்கேற்றுவது மிகவும் பரவலாக காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, தைவானின் புகழ்பெற்ற படைப்பாளர் baixianyong, suzhou நகரத்தின் kun நாடகக் குழுவுடன் பியோனி Pavilion என்ற நாடகத்தைக் கூட்டாகப் படைத்து, இரு கரைகளுக்கிடையில் வெற்றிகரமாக அரங்கேற்றியுள்ளார் என்று libaochun கூறினார்.

நண்பர்களே, ஆழமாக வளரும் பண்பாட்டுப் பரிமாற்றம் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.