• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-01 09:08:29    
சீனாவின் qiang இனம்

cri

சீனாவின் இன மக்கள், முக்கியமாக Sichuan மாநிலத்தின் மேற்கு பகுதியிலான wenchuan, lixian, heishui முதலிய இடங்களில் வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகை 1 இலட்சத்து 98 ஆயிரமாகும். qiang இன மக்கள் தங்களை er ma என்று அழைக்கின்றனர். இதற்கு, உள்ளூர் மக்கள் என்பது பொருள். qiang இனத்தின் வரலாறு 3000 ஆண்டுகளுக்கு மேலானதாகும்.

Qiang இனத்துக்கு சொந்த எழுத்துக்கள் இல்லை. பொதுவாக சீன மொழியின் எழுத்துகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்களுக்கு சொந்தமான மொழி உண்டு. இது, சீன-திபெத் மொழி குடும்பத்தின் திபெத்-மியன்மர் கிளையைச் சேர்ந்தது. இது வடக்கு, கிழக்கு என இரண்டு வட்டார மொழிகளைப் பிரி்க்கப்பட்டது.

Qiang இன மக்கள் வாழ்கின்ற மலைப் பிரதேசங்களில், panda, நரி, குரங்கு முதலிய அரிய விலங்குகள் காணப்படுகின்றன. அங்கு தாள் உற்பத்தி, மரம் துண்டு செய்தல், காரை, இரசாயன உரம் முதலிய தொழிற்துறைகள் நிறுவப்பட்டுள்ளன. பூத்தையல் வேலையும் நெசவுத்தொழில் ஆகியவை, qiang இன மக்களின் பாரம்பரிய தொழில்களாகும்.

Qiang இன மக்கள் வீடுகளில் நாளுக்கு 2 வேளை உணவு சாப்பிடுகின்றனர். காலை உணவு சாப்பிட்ட பின், உழைக்கத் தொடங்குகின்றனர். உழுகின்ற நிலத்திலேயே மதிய உணவு சாப்பிடுவது வழக்கம். இது "dajian" என்று கூறப்படுகிறது. மாலையில் வீட்டுக்குத் திரும்பி இரண்டாம் உணவு சாப்பிடுகிறார்கள்.

விழா, திருமணம், ஈமச்சடங்கு, வழிபாடு, கூட்டம், விருந்தினர் வரவேற்பு ஆகியவற்றின் போது, அதிக உணவுகளோடு, மதுபானம் மிக இன்றியமையாதாக அருந்தப்படுகிறது.

சீன சந்திர நாட்காட்டின்படி, 10ம் திங்களின் முதல் நாள், qiang இனத்தின் புத்தாண்டு விழா. அப்போதைய விருந்து, அறுவடை விருந்து என்றும் பெயர் பெறுகிறது. இவ்விழாவின் போது, முழு கிராமத்தின் மக்களும் தேவன் என கருதப்படும் காடுகளுக்குச் சென்று, சாம்பிராணி நெருப்பிட்டு மூதாதையார்களையும் கடவுள்களையும் வழிபாடு செய்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர். அறுவடையைக் கொண்டாடும் மலை வழிபாடு, அனைத்து கிராம மக்களும் கலந்து கொள்கின்ற முக்கிய வழிபாடாகும். திருமணம் ஆன பெண்களைத் தவிர, அனைவரும் மதுபானங்களையும் இறைச்சியையும் கொண்டு சென்று இவ்வழிபாட்டில் கலந்து கொள்கிறார்கள்.