• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-01 20:45:47    
சிங்காய் மாநிலத்தில் சிறுபான்மை தேசிய இன மக்கள் செல்வமடையும் வழிமுறை

cri
24 வயதான திபெத் இன நடன ஆசிரியர் Tsekong Thar, பீடபூமியில் உள்ள கால்நடை வளர்ப்புப் பிரதேசத்தில் பிறந்து, வளர்ந்தவர். பின்னர், சிறந்த நடனத் திறனைக் கொண்டு, அவர் தலைசிறந்த நடனக்கலைஞராக மாறினார். தற்போது, உள்ளூர் பிரதேச அரசு, கல்வி வாய்ப்பு அளித்து, ஆயர்களின் குழந்தைகளுக்கு வெவ்வேறான தொழில் நுட்பப் பயிற்சிகளை வழங்கியுள்ளது.

இக்குழந்தைகளுக்கு நடனத் திறனை கற்றுக்கொடுக்கும் அதே வேளையில், தத்தமது தேசிய இன நடனக் கலை மீதான புரிந்துணர்வை உயர்த்துவதில் ஆசிரியர் Tsekong Thar அவர்களுக்கு வழிகாட்டியுள்ளார். நடனத்தைச் சார்ந்து, தத்தமது குடும்பங்களின் வருமானத்தை அதிகரிப்பதோடு, தலைசிறந்த தேசிய இனப் பண்பாட்டை மாணவர்கள் பரவல் செய்ய வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:


"நடனத்தைக் கற்று தேர்ச்சி பெற்றப் பின், அவர்கள் கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்குச் சென்றனர். தத்தமது தேசிய இனங்களின் பண்பாட்டைக் கொண்டு, பிற நகரங்களுக்குச் சென்று, மேலதிக மக்கள் திபெத் இனத்தைப் புரிந்து கொள்ளச் செய்து, பண்பாடு உள்ளிட்ட தேசிய இனங்களுக்கு சொந்தமாயிருக்கும் அனைத்தையும் பிரச்சாரம் செய்வதன் மூலம், தத்தமது பெருமை உணர்ச்சியை வலுப்படுத்த முடியும்" என்றார், அவர்.


ஆசிரியரின் ஊக்கத்துடன், பயிற்சி வகுப்புகளின் மாணவர்கள் எதிர்காலத்தின் மீது முழு நம்பிக்கை கொள்கின்றனர். Tang Gu La மலையடிவாரத்தில் வளர்ந்த திபெத் இன மங்கை Chimo Tso நம்பிக்கையுடன் செய்தியாளருக்கு கூறியதாவது:
"என் கனவு, உலகில் உள்ள அனைவரிடமும் எனது தேசிய இனத்தின் நடனத்தை அறிமுகப்படுத்துவதாகும். எனது அனுபவங்கள் மற்றும் உணர்வை, என் ஊரின் மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன். அவர்கள் இங்கு வந்து பயிற்சி பெற வேண்டும் என்று விரும்புகின்றேன். மேலதிக திபெத் இன மக்கள், என்னைப் போல், தமது தலைவிதியை மாற்ற வேண்டும் என்று விரும்புகின்றேன்" என்றார், அவர்.


தவிர, சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்த உள்ளூர் விவசாயிகள் மற்றும் ஆயர்கள், கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடுவதற்கு சிங்காய் மாநில அரசு ஆக்கப்பூர்வமாக ஊக்கமளித்து, வழிகாட்டியுள்ளது. ஓவியம், சிற்பம், பூத்தையல் வேலை, காகிதக் கத்தரிப்பு உள்ளிட்ட பல்வகை தேசிய இனக் கலை வடிவங்கள், உள்ளூர் பிரதேசத்தின் சிறுபான்மை தேசிய இன மக்கள் செல்வமடைய நாடும் நல்ல தொழில்களாக மாறியுள்ளன. புள்ளி விபரங்களின் படி, சிங்காய் மாநிலத்தில் உள்ள கிராமங்களிலும், கால்நடை வளர்ப்புப் பிரதேசங்களிலும் "பண்பாட்டின் மூலமான வருமான அதிகரிப்பு" என்ற நடவடிக்கையில், சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் மற்றும் ஆயர்கள் பங்கெடுத்துள்ளனர். நபர்வாரி நிகர வருமானம், 2200 யுவானை எட்டியுள்ளது. சிங்காய் மாநிலத்தின் பண்பாட்டுத் துறைத் தலைவர் Cao Ping அம்மையார் பேசுகையில், "பண்பாட்டின் மூலமான வருமான அதிகரிப்பு" என்ற நடவடிக்கைக்கு அரசு பல்வகை ஆதரவையும், உதவித்தொகையையும் வழங்கியுள்ளது என்றார். அவர் கூறியதாவது:


"ஆண்டுதோறும், விவசாயிகளும், ஆயர்களும் தமது பொருட்களை காட்சி வைப்பதற்கு அரசு மேடையை வழங்குகிறது. ஆண்டுதோறும் கலை மற்றும் கைவினைப் பொருட்காட்சிகள் நடத்தப்படுகின்றன. காட்சி அரங்கு செலவை அரசு வழங்குகிறது" என்றார், அவர்.
அரசின் ஆதரவு, விவசாயிகள் மற்றும் ஆயர்களின் ஆக்கப்பூர்வ பங்கெடுப்பு ஆகியவற்றுடன், சிங்காய் மாநிலத்தின் பண்பாட்டுத் தொழில் மென்மேலும் விரைவாக வளர்ந்துள்ளது. "பண்பாட்டின் மூலமான வருமான அதிகரிப்பு", விவசாயிகள் மற்றும் ஆயர்கள் செல்வமடையும் முக்கிய வழிமுறையாக திகழ்கின்றது. இது மட்டுமல்ல, கிராமப்புறங்கள் மற்றும் கால்நடை வளர்ப்புப் பிரதேசங்களின் அடி மட்ட பண்பாட்டின் ஆக்கப்பணியைத் தூண்டி, இவ்விரு பிரதேசங்களுக்கிடை இசைவான வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் இது ஆக்கப்பூர்வ பங்காற்றியுள்ளது. சிங்காய் மாநிலத்தின் துணைத் தலைவர் Ji Di Ma Jia, யி இனத்தைச் சேர்ந்தவர். அவர் கூறியதாவது:

"பண்பாட்டுத் தொழிலின் வளர்ச்சியின் மூலம், தலைசிறந்த சிறுபான்மை தேசிய இனப் பண்பாடு கையேற்றப்படும் அதே வேளையில், விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வருமானமும் அதிகரித்துள்ளது. சந்தையுடன் தொடர்பு கொள்ளும் சிறந்த சூழற்சி அமைப்பு முறை உருவாகியுள்ளது. சிங்காய் மாநிலத்தின் பண்பாட்டுத் துறையின் வளர்ச்சி, அடுத்த கட்டப் பொருளாதார வளர்ச்சிப் போக்கில் மேலதிக பங்காற்றும்" என்றார், அவர்.