• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-01 09:10:49    
வேல்ஸ் ஸ்னூக்கர் போட்டி

cri
2008ம் ஆண்டு வேல்ஸ் ஸ்னூக்கர் போட்டியின் 2வது சுற்று தகுதி போட்டிகள் உள்ளூர் நேரப்படி 27ம் நாள் முடிவடைந்தன. சீன வீரர்கள் liang wen bo, tian peng fei இருவரும் தமது எதிராளிகளை தோற்கடித்து, 3வது சுற்றில் நுழைந்துள்ளனர்.
5 சீன வீரர்கள், இத்தகுதி போட்டியில் கலந்துகொண்டனர் என்று தெரிய வருகிறது.

அண்மையில், பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் நுழைவுச்சீட்டு விவகார மையம், சீட்டெடுப்பு மூலம், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சீனாவில் விற்பனை செய்யப்பட்ட நுழைவுச்சீட்டு வினியோக முடிவை அறிவித்துள்ளது. 1 இலட்சத்து 23 ஆயிரம் பேர், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், ஊனமுற்றோர் விளையாட்டு போட்டியின் துவக்க மற்றும் நிறைவு விழா ஆகியவற்றின்4 இலட்சத்து 50 ஆயிரம் நுழைவுச்சீட்டுகளை வெற்றிகரமாக முன்பதிவு செய்துள்ளனர். விண்ணப்பம் செய்தவர்களில் 10.6 விழுக்காடு பேர் நுழைவுச்சீட்டுகளை பெற்றனர்.
இம்முறை நுழைவுச்சீட்டுக்கான சீட்டெடுப்பு வினியோகம், 29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி கண்காணிப்பு ஆணையம், பொதுச் சான்று உறுதி வழங்கும் நிறுவனம், பல செய்தி ஊடகங்கள் ஆகியவற்றின் கண்காணிப்பில் முடிவடைந்தது.
29வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தேவையை நிறைவு செய்யும் வகையில், பெய்ஜிங், 31 விளையாட்டரங்குகளையும் பயிற்சியரங்குகளையும் கட்டியமைக்கும்.

இது வரை, தேசிய விளையாட்டரங்கு ஆக்கப்பணி, முடிவடைய உள்ளது. இதர 30 விளையாட்டரங்குகள், 44 பயிற்சியரங்குகள் முடிவடைந்தன என்று பெய்ஜிங்கின் துணை தலைவரும் 2008ம் ஆண்டு ஆக்கப்பணி தலைமையகத்தின் தலைவருமான chen gang 28ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
சீனாவில் பயணம் மேற்கொண்டு வரும் கஸாகஸ்தான் நாடாளுமன்றத்தின் மேல் அவையின் தலைவர் Tokaevவும் அவருடன் இணைந்து வந்த குழுவினரும் இன்று பெய்சிங் வெளிநாட்டு மொழி பயிற்சிப் பள்ளியைப் பார்வையிட்ட போது, 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அருமையான வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
பண்பாடு மற்றும் விளையாட்டுத் துறையில் இரு நாட்டு மாணவர்களுக்கிடையில் நட்புப்பூர்வ பரிமாற்ற நடவடிக்கைகளை மேலும் அதிகமாக மேற்கொள்ள தாம் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
இத்தாலி கால்பந்து தொடர் போட்டியி்ன் 20வது சுற்று போட்டிகள், 28ம் நாள் விடியற்காலை முடிவடைந்தன. Inter Milan அணியும், Udinese அணியும், வெற்றி புள்ளிகளை எடுக்காமல் சம நிலையில் உள்ளன. இவை தரவரிசையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றன.

2வது இடத்தை வகித்த AS ROMA அணி, palermoஅணியை வென்று, 2வது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டது.
ஸ்பெயின் கால்பந்தாட்ட மன்றங்கிடை போட்டியின் 21வது சுற்று போட்டிகள் 28ம் நாள் விடியற்காலை முடிவடைந்தன. Real_Madrid அணி, இச்சுற்றில் வெற்றி பெற்ற பிறகு, தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை வகித்தது.
Robinho, Sneijder இருவரும் அடித்த 3 கோல்களை கொண்டு, உபசரிப்பு அணியான Real_Madrid 3-2 என்ற கோல் கணக்கில் Villarreal அணியை வென்றது.
இச்சுற்று போட்டிகளுக்கு பிறகு, Real_Madrid அணி, 53 புள்ளிகளுடன் கொண்டு, தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.