• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-01 09:38:38    
இளைய பாடகி சூ ஹைய்

cri

இன்றைய சீன மகளிர் நிகழ்ச்சியில், இளைய பாடகி சூ ஹைய் என்பவரை அறிமுகப்படுத்துகிறோம்.
சூ ஹைய், 1976ம் ஆண்டு, சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள ஆன் ஹூய் மாநிலத்தில் பிறந்தார், சிறு வயதில் இசையில் அதிக அக்கறையையும் திறமையையும் அவர் வெளிக்காட்டியுள்ளார். உள்ளூர் இடைநிலை பள்ளியில் அவர் ஒரு புகழ்பெற்ற மாணவ பாடகியாக இருந்தார். 1991ம் ஆண்டு, சீன இசை கல்லூரியைச் சேர்ந்த இடைநிலை பள்ளியால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மூன்று ஆண்டுகளுக்கு பின், சீன இசை கல்லூரியின் இசை இளங்கலை பட்டத்துக்கான வகுப்பில் சேர்ந்தார்ய நுழைந்து பயின்றார். மொத்தம் 7 ஆண்டுகால சிறப்புப் பயிற்சி பெற்ற பின், அவர், சீன ஆடல் பாடல் குழுவில் நுழைந்தார். 2003ம் ஆண்டு, சீன மக்கள் விடுதலை படையின் பொது அரசியல் அலுவலகத்தின் ஆடல் பாடல் குழுவின் ஒரு உறுப்பினராக மாறினார்
சூ ஹையின் குரல் புத்துணர்வுச்சி வாய்ந்தது. இனிமையானது. சீனாவின் நாட்டுப்புற பாடலுக்கு பொருந்தியது. பாடல் பாடுகின்ற போது, அவர் தனது தனிச்சிறப்பை வெளிக்கொணர்ந்ததோடு, நாட்டுப்புறப்பாடலின் புத்தாக்கத்திலும் கவனம் செலுத்தினார்.

நாட்டுப்புற பாடலையும் பாப் பாடலையும் இணைத்து, தெளிவான தனிச்சிறப்பை அவர் உருவாக்கினார். அவருடைய இப்பாடல் பாணி, ரசிகர்களுக்கு மிக பிடித்துள்ளது. இதை பற்றி பேசுகையில், சூ ஹைய் கூறியதாவது
நல்ல குரல் இருப்பினும் பாடுவதில் பல பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன். ஒரு பாடல் பாடும் போது, உணர்வு மிக முக்கியமானது. சொந்த கருத்து, மனத்திலான புரிந்துணர்வு ஆகியவற்றை, பாடலில் முழுமையாக வெளிக்காட்ட வேண்டும்.அதிஷ்டம் வருவது என்ற பாடலில் ஒவ்வொரு ஆண்டுக்கு தாய்நாட்டுக்கு அதிஷ்டம் இருக்க வேண்டும் என்று மக்கள் மகிழ்ச்சியுடனும், இனிமையுடனும், வாழ்த்து தெரிவிக்கின்றனர். இப்பாடல், சீன பொது மக்களின் மனதில் உள்ள கருத்தை வர்ணிக்கிறது.

1995ம் ஆண்டு, அவர் தனது முதலாவது ஒலி நாடாவை வெளியிட்டார். இது வரை, மொத்தம், 15 ஒலி நாடாக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவர் பாடிய யாருக்காக சேவை வழங்குவது, என்னுடைய ஊர் சீனாவில் இருக்கிறது. மகிழ்ச்சியான மலை, நல்ல அதிர்ஷ்டம் வருவது, முதலிய பாடல்கள் பல ரசிகர்களை ஈர்த்து பரவாகியுள்ளன.
நீங்கள் வாய்ப்பு இருந்தால், தொடர்புடைய இணையம் மூலம், அவருடைய பாடல்களை கேட்கலாம்.