முன்பு, "ஓடி வரும் சிற்றோடை நீர்" எனும் பாடலை நேயர்களுக்கு வழங்கினோம். இன்று Yan Wei Wen பாடிய இப்பாடல் வருகின்றது. கேட்கலாமா? தென் மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்தில், 20க்கு அதிகமான சிறுபான்மைத் தேசிய இனங்கள் வாழ்கின்றன. இனிமையான நாட்டுப்புறப்பாடல்கள் பல இங்கு பரவியுள்ளன. இப்பாடல்களில், "ஓடி வரும் சிற்றோடை நீர்" என்னும் பாடல் ஒன்றாகும். ஓவியம் போன்ற எழில் மிக்க காட்சிகள் இப்பாடலில் பிரதிபலிக்கின்றன. "நிலா தோன்றுகிறது, பளபளக்கிறது. என் காதலர் மலையில் இருப்பதை நினைக்கின்றேன். என் காதலர் நிலா போல் மலையின் கீழே சிறு ஆறு தெளிவாக ஓடுகிறது" என இப்பாடல் ஒலிக்கின்றது.
|