• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-04 09:30:05    
ஆஸ்திரேலிய டென்னி்ஸ் போட்டி

cri

2008ம் ஆண்டு ஆஸ்திரேலிய டென்னிஸ் போட்டி, 27ம் நாள் முடிவடைந்தது. ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் 20 வயதான செற்பிய வீரர் Djokovic 3-1 என்ற ஆட்ட கணக்கில் பிரான்ஸ் வீரர் Tsongaவை தோற்கடித்து, சாம்பியன் பட்டம் பெற்றார்.
அதற்கு முன் முடிவடைந்த கலப்பு இரட்டையர் இறுதி போட்டியில் சீன வீராங்கனை sun tiantian, செற்பிய வீரர் Zimonjic இருவரும், 2-0 என்ற ஆட்ட கணக்கில் இந்திய சானியா மிஸ்ரா-மகேஷ் பூபதி இணையை தோற்கடித்து, சாம்பியன் படத்தை பெற்றனர்.
Zheng jie/yan zi 2006ம் ஆண்டு ஆஸ்திரேலிய வின்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் கலப்பு இரட்டையர் சாம்பியன் பட்டங்களை பெற்ற பிறகு, சீன வீராங்கனை, கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் சாம்பியன் பட்டம் பெறுவது இது 3வது முறையாகும்.

இத்தாலி கால்பந்து தொடர் போட்டியி்ன் 20வது சுற்று போட்டிகள், 28ம் நாள் விடியற்காலை முடிவடைந்தன. Inter Milan அணியும், Udinese அணியும், வெற்றி புள்ளிகளை எடுக்காமல் சம நிலையில் உள்ளன. இவை தரவரிசையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றன.
2வது இடத்தை வகித்த AS ROMA அணி, palermoஅணியை வென்று, 2வது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டது.
அண்மையில், பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் நுழைவுச்சீட்டு விவகார மையம், சீட்டெடுப்பு மூலம், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சீனாவில் விற்பனை செய்யப்பட்ட நுழைவுச்சீட்டு வினியோக முடிவை அறிவித்துள்ளது. 1 இலட்சத்து 23 ஆயிரம் பேர், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், ஊனமுற்றோர் விளையாட்டு போட்டியின் துவக்க மற்றும் நிறைவு விழா ஆகியவற்றின்4 இலட்சத்து 50 ஆயிரம் நுழைவுச்சீட்டுகளை வெற்றிகரமாக முன்பதிவு செய்துள்ளனர். விண்ணப்பம் செய்தவர்களில் 10.6 விழுக்காடு பேர் நுழைவுச்சீட்டுகளை பெற்றனர்.

இம்முறை நுழைவுச்சீட்டுக்கான சீட்டெடுப்பு வினியோகம், 29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி கண்காணிப்பு ஆணையம், பொதுச் சான்று உறுதி வழங்கும் நிறுவனம், பல செய்தி ஊடகங்கள் ஆகியவற்றின் கண்காணிப்பில் முடிவடைந்தது.
ஸ்பெயின் கால்பந்தாட்ட மன்றங்கிடை போட்டியின் 21வது சுற்று போட்டிகள் 28ம் நாள் விடியற்காலை முடிவடைந்தன. Real_Madrid அணி, இச்சுற்றில் வெற்றி பெற்ற பிறகு, தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை வகித்தது.
Robinho, Sneijder இருவரும் அடித்த 3 கோல்களை கொண்டு, உபசரிப்பு அணியான Real_Madrid 3-2 என்ற கோல் கணக்கில் Villarreal அணியை வென்றது.
இச்சுற்று போட்டிகளுக்கு பிறகு, Real_Madrid அணி, 53 புள்ளிகளுடன் கொண்டு, தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.