வாணி -- இன்று கோழி இறைச்சி,கஷ்கொட்டை ஆகியவை இடம்பெறும் ஒரு சீன உணவு வகை பற்றி நேயர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றேன்.
க்ளீட்டஸ் -- கஷ்கொட்டை பழமா? இலையுதிர்காலத்திலும் கோடைக்காலத்திலும் பெய்ஜிங்கின் பெரிய சிறிய சாலைகளில் சர்க்கரை கலந்த கஷ்கொட்டை விற்பனை செய்யபடுகின்றது. மிகவும் சுவையானது.
வாணி -- நீங்கள் சொன்னது சரி. கஷ்கொட்டையை உட்கொள்வது இரைப்பை, மண்ணீரல் ஆகியவற்றுக்கு நன்மை தரும். கோழி இறைச்சியில் புரத ஊட்டச்சத்து அதிகம். மனித உடலில் எளிதாகச் சேர்க்கப்படலாம். இவ்விரண்டையும் சேர்த்து சமைத்தால், இவற்றின் ஊட்டச்சத்து பயன் உயர்த்தப்படும்.
க்ளீட்டஸ் -- இது மட்டுமல்ல, மிகவும் சுவையான உணவு இதுவாகும்.
வாணி -- சரி, இப்போது, இந்த உணவு வகையின் தயாரிப்புக்கு தேவைப்படும் பொருட்களைக் கூறுகின்றேன்.
முதலில், கோழி ஒன்று
காய்ந்த காளாண் 10
கஷ்கொட்டை 200 கிராம்
மாவாக்கப்பட்ட பூண்டு 2 தேக்கரண்டி
வெங்காயம் போதிய அளவு
கோழி சூப் 500 மில்லி லிட்டர்
சர்க்கரை 2 தேக்கரண்டி
சோயா சாஸ் ஒரு தேக்கரண்டி
சமையல் மது ஒரு தேக்கரண்டி
உப்பு 5 கிராம்
சமையல் எண்ணெய் 200 மில்லி லிட்டர்
க்ளீட்டஸ் -- முதலில், கஷ்கொட்டை பழங்களை நன்றாக சுத்தம் செய்து, இவற்றின் வெளிப்புறத்தில் குறுக்கும் நெடுக்குமாக சிறு கோடு போடுங்கள். வெந்நீரில் சுமார் 20 நிமிடங்களாக வேகவிட்ட பின், இவற்றின் வெளிப்புறத்தை நீக்கலாம்.
வாணி -- காய்ந்த காளாண்களை தண்ணீரில் வைத்து, அரை மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். பிறகு, இவற்றை சுத்தம் செய்யவும்.
கோழியின் தலை, கால் ஆகியவற்றை நீக்கலாம். எஞ்சிய பகுதியை நன்றாக சுத்தம் செய்து, 3 செண்டி மீட்டர் அளவுடைய துண்டுகளா நறுக்கிக் கொள்ளுங்கள்.
க்ளீட்டஸ் -- அடுப்பின் மீது வாணலியை வைத்து, சமையல் எண்ணெயை ஊற்றவும்.
வாணி -- கோழி இறைச்சித் துண்டுகளை எண்ணெயில் வைத்து, நன்கு வறுக்கவும். இபைத்தி பொன்னிறமாகிய பின் வெளியே எடுக்கலாம். மற்றொரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை இவற்றில் வைத்து, மணம் வரும் வரை வதக்கவும். பிறகு, காளாண், கோழி இறைச்சி துண்டுகள், கஷ்கொட்டை ஆகியவற்றையும் இதில் கொட்டலாம்.
க்ளீட்டஸ் -- பின்னர், சமையல் மது, சர்க்கரை, சோயா சாஸ், கோழி சூப் முதலியவற்றை இதில் சேர்க்கலாம். நன்றாக கலக்கவும். நல்ல சூட்டில் வேகவைத்த பின், மெதுவான சூட்டில் சுமார் 25 நிமிடங்கள் வேக வையுங்கள்.
வாணி -- கடைசியில், உப்பை சேர்த்தப் பிறகு, இந்த கோழி இறைச்சி, கஷ்கொட்டை உணவு தயார்.
க்ளீட்டஸ் -- ஊட்டச்சத்து மிகுந்த இந்த சீன உணவு வகையை நீங்கள் வீ்ட்டில் எளிதாகத் தயாரிக்கலாம். சுவையானது.
வாணி -- நவம்பர் திங்கள், தமிழகத்தில் பயணம் மேற்கொண்ட போது, இந்தியாவிலுள்ள சீன உணவு வகைகளின் விலை அதிகம் என்று பல நண்பர்கள் தெரிவித்தனர். உண்மையில், சீனாவிலுள்ள இந்திய உணவு வகைகளின் விலை உயர்வானது தான்.
க்ளீட்டஸ் -- நீங்கள் சொன்னது சரி.
வாணி -- ஆனால், எங்கள் சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியை அடிக்கடி கேட்ட நேயர்கள், எமது செய்முறையின் படி, வீட்டில் சீன உணவு வகைகளைத் தயாரிக்கலாம். செலவு குறைவானது.
க்ளீட்டஸ் -- ஆமாம், இதுமட்டுமல்ல, சீன வானொலி தமிழ் இணையத்திலும் சீன உணவு வகைகளை அறிமுகப்படுத்தும் கட்டுரைகள் உள்ளன. பார்க்கலாம்.
|