சீனாவில் சிறு நகர மற்றும் நகர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி
cri
கடந்த ஆண்டு, சீனாவில் சிறு நகர மற்றும் நகர தொழில் நிறுவனங்கள் சீராக வளர்ந்து வருகின்றன. அவை பெற்ற கூட்டு மதிப்பு, 6 இலட்சத்து 80 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது. இது 2006ஆம் ஆண்டில் இருந்ததை விட 14 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது. இன்று சீன வேளாண் துறை அமைச்சகத்திலிருந்து கிடைத்த தகவல் இவ்வாறு தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு முழுவதும், சீனாவின் சிறு நகர் மற்றும் நகர தொழில் நிறுவனங்களில் சுமார் 41 இலட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றனர். கடந்த ஆண்டு அவற்றின் ஏற்றுமதித் தொகை, 2006ஆம் ஆண்டில் இருந்ததை விட சுமார் 19 விழுக்காடு அதிகமாகும். இது, இத்தகைய தொழில் நிறுவனங்களின் விரைவான வளர்ச்சியைத் தூண்ட, குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது. தற்போது, சிறு நகர மற்றும் நகர தொழில் நிறுவனங்கள், சீனப் பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரத் தூண்களாக மாறியுள்ளன. தவிர, உழைப்பு ஆற்றல் அதிக கொண்ட கிராமங்களில் வேலை வாய்ப்பு வழங்கும் பிரச்சினையைத் தீர்க்க இத்தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன.
|
|