சிங்கியாங் இயற்கை வாயு அனுப்புதல்
cri
புள்ளி விபரங்களின் படி, இயற்கை எரிவாயுவை மேற்கிலிருந்து கிழக்கிற்கு அனுப்புவது என்ற திட்டப்பணி உற்பத்தியில் இறங்கிய பின், வட மேற்கு சீனாவில் உள்ள Talimu எண்ணெய் வயல், சீனாவின் கிழக்கு பகுதிக்கு 3 ஆயிரம் கோடி கன மீட்டர் இயற்கை வாயுவை அனுப்பியுள்ளது. இதன் மூலம் சிங்கியாங், சீனாவின் இதர மாநிலங்களுக்கு மிக அதிகமான இயற்கை வாயுவை அனுப்பும் மாநிலமாக மாறியுள்ளது. சிங்கியாங்கில் உள்ள அதிகமான இயற்கை வாயு மூலவளத்தை, கிழக்கு சந்தையுடன் "இணைக்கும்" பொருட்டு, 2002ஆம் ஆண்டு "இயற்கை எரிவாயுவை மேற்கிலிருந்து கிழக்கிற்கு அனுப்பும் திட்டப்பணி" துவங்கியது. 2004ஆம் ஆண்டு அது வணிக இயக்கத்தில் இறங்கியது. இத்திட்டப்பணியின் துணையுடன், சிங்கியாங்கின் இயற்கை வாயு உற்பத்தி அளவு விரைவாக அதிகரித்துள்ளதோடு, பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படும் இயற்கை வாயு அளவும் அதிகரித்துள்ளது. தற்போது, நாள்தோறும் குழாய் மூலம் 4 கோடி கன மீட்டர் இயற்கை வாயு அனுப்பப்படுகின்றது. கிழக்கு பகுதியில் உள்ள 12 மாநிலங்களில் சுமார் 20 கோடி நகரவாசிகளுக்கு இந்த இயற்கை வாயு வினியோகிக்கப்படுகிறது.
|
|