• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-13 19:34:25    
"XIAO MAI"என எங்களால் அன்புடன் அழைக்கப்படுகின்ற Michael

cri
இவ்வாண்டு 38 வயதான MICHAEL, தமிழ் நாட்டிலுள்ள சென்னை மாநகரத்திலிருந்து பெய்ஜிங் மாநகருக்கு வந்திருக்கிறார். செய்தி ஊடகத் துறையில் சுமார் 16 ஆண்டுகளாக வேலை செய்து அனுபவம் பெற்றுள்ள அவர், கடந்த ஆண்டு ஜுலை திங்களில், வேலையின் தேவைக்கிணங்க, தனது மனைவியுடன் இணைந்து, சீனாவுக்கு வந்து, பெய்ஜிங்கில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றார். இதுவரை, நமது தமிழ்ப் பிரிவில் அவர் சுமார் ஆறு திங்களாக பணிபுரிந்துள்ளார். அவரது கருத்தில், பெய்ஜிங் மாநகரம் ஈர்ப்பு ஆற்றல் மிக்க நகரமாகும். நமது பிரிவில், அவர் "XIAO MAI"என எங்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். பெய்ஜிங்கிலுள்ள வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுகையில் MICHAEL கூறியதாவது—
"நான் பெய்ஜிங் வந்து ஆறு திங்கள் காலம் நிறைவு பெற்றுள்ளது. பெய்ஜிங்கும் இந்நகரின் அழகும், காலநிலையும் மிக அருமையாக உள்ளது. எனக்கு நன்றாக பிடித்திருக்கிறது. நான் இங்கு வந்த பிறகு நிலா விழா, தேசிய விழா, ஆங்கில புத்தாண்டு விழா ஆகிய விழாக்கள் நல்லமுறையில் கொண்டாடப்பட்டன. நானும் அதில் சேர்ந்து மிகவும் மகிழ்ந்தேன். இந்த விழாக்களை மக்கள் கொண்டாடிய விதங்கள் எனக்கு மிக்க மகிழ்ச்சி தந்தன."
சீனாவில் ஆறு மாதங்களே வாழ்ந்திருக்கிறார் என்ற போதிலும், சீனாவின் விழாக்கள் பற்றி அவர் அதிகமாக அறிந்து கொண்டுள்ளார். வசந்தகாலத்தின் தொடக்கமும் சீனப் புத்தாண்டும் ஒன்றாக கொண்டாடப்படுவது, புத்தாண்டு முழுவதும் மங்களகரமான தொடக்கமாக இருக்கட்டும் என்ற பொருளைத் தருவதாக அவர் கருதுகிறார். தை திங்களில் பொங்கலைச் சிறப்பிக்கும் தமிழ் மக்களுக்கு வசந்த காலத்தை வரவேற்று கொண்டாடும் சீன மக்களின் உணர்வுகள் நன்றாகவே புரியும் என்றும் அவர் கூறினார்.


சீனாவின் விழாக்களைத் தவிர, எலி, மாடு, புலி உள்ளிட்ட 12 விலங்குகளை முறையே பயன்படுத்தி ஆண்டுகளை எண்ணும் வழிமுறையின் மீதும் MICHAEL பேரார்வம் கொள்கிறார். தாம் கோழி ஆண்டில் பிறந்த தமிழர் என அவர் எங்களிடம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது—
"பொன் பன்றி ஆண்டு முடிவு பெற்று, புத்தாண்டு எலி ஆண்டாக இருக்கப் போகிறது. புத்தாண்டு விடுமுறையாக 7 நாட்கள் கிடைக்கின்றன. அப்போது நான் இதுவரை பார்த்திராத பல இடங்களை சுற்றி பார்க்கத் திட்டமிட்டுள்ளேன். தி ஆன் மென் சதுக்கம், பா தா லிங் சீனப் பெருஞ்சுவர் ஆகியவற்றை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். கட்டிட தோட்டக் கலைகளில் சிறந்த YI HE YUAN எனப்படுக்கின்ற கோடை அரண்மனை, மிகவும் பாதுகாக்கப்பட்ட மர வீடுகளையும் தொன்மையும் கொண்ட GU GONG என்ற forbidden நகரம், மனம் மகிழ்ந்திருக்க அமைதியான பகுதியான TIAN TAN GONG YUAN எனப்படுகின்ற Temple of heaven, XIANG SHAN எனப்படுகின்ற நறுமண குன்றுகள், BAI YUN GUAN எனப்படுகின்ற White Cloud Daoist கோவில் ஆகியவற்றைப் பார்க்கத் திட்டமிட்டுள்ளேன். இந்த விடுமுறைகளில் இவற்றை மட்டுமே சுற்றிபார்க்க நேரம் இருக்கும் என்று நினைக்கின்றேன். விருந்துகள் மற்றும் புத்தாண்டு காலப்பொருட்கள் வாங்குதல், ஓய்வு போன்றவற்றிற்கு நேரம் ஒதுக்கினால் எல்லாம் சரியாக இருக்கும்."
MICHAEL அவர்களின் புத்தாண்டுக்கான திட்டங்கள் இவ்வளவு அதிகம் மட்டுமல்ல, சீன மொழியை எழுதி படித்த முழுமுயற்சியுடன் கற்றுக் கொள்ளவும் அவர் திட்டமிட்டுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்ற போதிலும், சீன மொழியைக் கிரக்கித்துக் கொள்வது அவருக்கு எளிதானதல்ல. ஆனால், சீன எழுத்துக்களை நன்றாக எழுதுவதில் அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.


புதிய ஆண்டில், MICHAEL அவர்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள், பாரம்பரிய சீன விழாக்களின் பண்பாட்டு சாரத்தை உணர்வது, பெய்ஜிங் மாநகரில் சுற்றுப் பயணம் மேற்கொள்வது ஆகியவை மட்டுமே அல்ல. 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீனாவில் நடைபெறும் போது, பெய்ஜிங்கில் சிறந்த விளையாட்டுப் போட்டிகளைக் கண்டு ரசிக்க முடியும் என்பது, அவருக்கு மேலும் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக பெய்ஜிங் மாநகராட்சி மேற்கொண்டுள்ள முயற்சிகளின் மூலம், மனித முதன்மை ஒலிம்பிக், பசுமை ஒலிம்பிக், அறிவியல் ஒலிம்பிக் என்ற முழக்கத்தின் உண்மையான உள்ளடக்கத்தை அவர் தெளிவாக அறிந்து கொண்டுள்ளார். அவர் கூறியதாவது—
"இவ்வாண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் ஆண்டாகும். அப்போது மிகவும் நல்லதொரு சேவையை நான் பணிபுரியுமிடம் வழங்க என்னால் முடிந்த அனைத்தையும் நான் ஏற்று செய்வேன். இந்த ஆண்டு சீனாவிலுள்ள பல பண்பாட்டு மையங்களுக்குச் சென்று பார்க்க திட்டமிட்டுள்ளேன். சீனா பாண்பாட்டு செழுமை கொண்ட பரந்த நாடு. இங்குள்ள மக்களை முழுவதுமாக அறிந்து கொள்ள பண்பாட்டை அறிய முயற்சிப்பது முக்கியம் என கருதுகிறேன். எனவே பண்பாட்டு தளங்களைத் தெரிவு செய்து அந்த இடங்களை முக்கியமாக சுற்றிபார்க்க நினைத்துள்ளேன்."
தற்போது, பெய்ஜிங்கிலுள்ள வெள்ளை பகோடா கோயில், HU TONG எனப்படும் சீன சிறுவீதிகள், TAN ZHE கோயில், NIU JIE மசூதி, DA GUAN YUAN பூங்கா முதலிய பிரதிநிதித்துவம் வாய்ந்த மனித சமுதாயத்தின் பண்பாட்டுக் காட்சித் தலங்களை தனது சுற்றுப் பயணத் திட்டத்தில் MICHAEL சேர்த்துள்ளார். மேலும், சீனப் பண்பாடு மீது தனித்தன்மை வாய்ந்த கருத்துக்களைக் கொண்டுள்ளதால், சீன நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களின் வரவேற்பையும் நட்புறவையும் அவர் பெற்றுள்ளார். MICHAEL அவர்களுடன் நன்றாக பழகிய செல்வி DING DING எங்களிடம் கூறியதாவது—


"MICHAEL அழகான வெளிதோற்றம் கொண்டவர். அவர் எங்களுடன் நட்பார்ந்து பழகுகிறார். நாங்கள் அனைவரும் அவரை விரும்புகின்றோம்" என்றார் அவர்.
சுற்றுப் பயணம் மேற்கொள்வதைத் தவிர, பாடல் பாடுவதையும் MICHAEL விரும்புகிறார். அலுவலகத்தில் அவர் பாடிய தமிழ்ப் பாடலைக் கேட்பதுண்டு. அண்மையில், மலரும் அன்பு என்ற சீனப் பாடலை அவர் கற்றுக் கொண்டார். இனி, சீன மொழியில் அவர் பாடிய இப்பாடலைக் கேட்டு ரசியுங்கள்.


மகிழ்ச்சி தரும் உயிரோட்டமான பாடலில், புத்தாண்டு மீதான MICHAEL அவர்களின் எதிர்பார்ப்பை நாம் உணரலாம். சீன சக பணியாளர்களைப் போல் விடுமுறை நாட்களில் வீடு திரும்பி விழாவைக் கொண்டாட முடியவில்லை என்ற போதிலும், அவரைப் பொறுத்த வரை, சீனாவில் பாரம்பரிய தனிச்சிறப்புமிக்க எலி ஆண்டை கொண்டாடுவது, மேலும் பெரும் மகிழ்ச்சி தரக் கூடியது. சீன மக்களுக்கு அவர் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
"சீனப் புத்தாண்டின் போது வெளிநாடுகலில் வாழும் சீனர்கள் உள்ளிட்ட அனைத்து சீன மக்களுக்கும் இந்த புத்தாண்டு மகிழ்வில் உணர்வுபூர்வமாக பங்கேற்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்."