• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-13 09:50:12    
களிமண் சிலையும், பீச் மரச் சிலையும்

cri
ச்சி நாட்டின் அதிகாரக்குடியில் பிறந்தவன் மெங்சாங். ச்சின் வம்சக்காலத்தின் துவக்கத்திற்கு முன்பான போரிடும் நாடுகள் காலத்தில் வாழ்ந்தவர்தான் இந்த மெங்சாங். அப்போது சின், ச்சி உட்பட 7 நாடுகள் இருந்தன. ச்சின் என்பது அரசன் ஒருவனால் ஆளப்பட்ட ஒரு நாடு என்றால் மற்றவை அனைத்தும் அரச குடும்பத்தினர் அல்லது அதிகாரக்குடியினரின் கட்டுப்பாட்டில் இருந்தவை. அரசன் என்றும் கோமகன் என்றுமாக இவர்கள் தங்களை அழைத்துக்கொண்டனர். அதிகாரக்குடியில் பிறந்த மென்சாங் தனது சொந்த நாடான ச்சி நாட்டிலிருந்து ச்சின் நாட்டிலான ஒரு அரசப்பதவியை ஏற்க மெங்சாங் முடிவெடுத்தான்.
இதை அறிந்த அனைவரும் மென்சாங்கை அவரது முடிவை மாற்றிக்கொள்ளுமாறு செய்ய பலவற்றை கூறி அறிவுறுத்தினர். ஆனால் எவர் சொன்னதையும் காதில் வாங்காத மென்சாங், தனது முடிவின் படி ச்சின் நாட்டுக்கு கிளம்புவதில் தீவிரமானான்.
இதன்போது, புத்திசாலித்தனமாக பேசி நயமாக கருத்துக்களை எடுத்துரைத்து மற்றவரை இணங்கச் செய்வதில் வல்லவரான சூ ஜின் என்பவர் மென்சாங்கின் முடிவை மாற்ற விரும்பி அவரை சந்திக்கச் சென்றார்.
அவரைக் கண்ட மென்சாங் " மனித மூளைக்கு தோன்றக்கூடிய அனைத்து வாதங்களையும் நான் கேட்டாகிவிட்டது. இப்போது குறையாக இருப்பது சித்தி நிறைந்த தருக்கம் மட்டுமே" என்றான்.
இதைக் கேட்ட சூ ஜின், மனித விவகாரங்களை பற்றி பேச நான் இங்கு வரவில்லை. அதீத ஆற்றல்கொண்ட, இயற்கை விதிகளுக்கு அகப்படாதவை பற்றி பேசவே உங்களிடம் வந்தேன் என்றார்.
இதைக் கேட்டதும் மென்சாங் கொஞ்சம் வினோதமாக பார்த்தபடி அவரை தொடர்ந்து பேச சொன்னான். சூ ஜின், மெதுவாக பின் வரும் கதையை சொல்லத் தொடங்கினார்.
இங்கே வருவதற்காக புறப்பட்டு வரும் வழியில் நான் சு ஆற்றின் வழியாக வர நேர்ந்தது. ஆற்றை கடந்து வருகையில் மண்ணால் செய்யப்பட்ட ஒரு சிறு உருவச்சிலை ஒன்றும், பீச் மரத்தால் செய்யப்பட்ட ஒருவம் ஒன்றும் பேசிக்கொண்டிருந்ததை நான் செவிமடுத்தேன். பீச் மரத்தால் செய்யப்பட்ட உருவம் மண்ணால் செய்யப்பட்ட உருவச்சிலையை பார்த்து, "நீ ஆற்றின் மேற்கு கரையைச் சேர்ந்த களிமண்ணாக இருந்தவன். இப்போது நீ ஒரு சிலையாக உருவாக்கப்பட்டிருக்கிறாய். ஆனால் ஆண்டின் எட்டாம் மாதத்திலான பெருமழையில் ஆறு பெருக்கெடுத்து ஓடுகையில் நீ நிச்சயம் அழிக்கப்படுவாய்"என்றது.
அதற்கு களிமண்ணால் செய்யப்பட்ட உருவச்சிலை, அதற்கு என்ன இப்போது. நான் மேற்கு கரையைச் சேர்ந்தவன் தான். நான் அழிந்தாலும் மீண்டும் மண்ணாகி மேற்கு கரையில் அங்கமாகிவிடுவேன்.
ஆனால் நீயோ இந்நாட்டின் கிழக்கு பகுதியிலிருந்தான பீச் மரத்தால் உருவாக்கப்பட்டவன். பெருமழை வந்து ஆற்றின் வெள்ளம் உயர்ந்தால், நீ ஆற்றின் போக்கில் அடித்துச் செல்லப்படுவாய். அதற்கு பின் நீ என்ன செய்வாய்" என்றது. அதைப்போல நீங்கள் ச்சின் நாட்டுக்கு செல்வதாக முடிவெடுத்துள்ளீர்கள். ச்சின் நாடு அனைத்து பக்கமும் வலிமையான அகழிகளும், கணவாயும் நிறைந்த நாடு. ச்சின் நாட்டினுள்ளே நுழைவதென்பது, புலியின் வாய்க்குள் தலையை நுழைப்பதற்கு சமம். ஒருமுறை நீங்கள் ச்சின் நாட்டிற்குள் சென்றால் மறுபடி அங்கிருந்து வெளியேறுவது கடினம் என்றே நான் அஞ்சுகிறேன் என்றார் சூ ஜின்.
சூ ஜின் சொன்ன கதையையும், அதன் மூலம் அவர் கூறிய தர்க்கவாதத்தையும் ஏற்றுக்கொண்ட மென்சாங், ச்சின் நாட்டுக்கு செல்லும் தன் முடிவை கைவிட்டான்.