பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் ஊக்கமருந்து சோதனையின் எண்ணிக்கை, வரலாற்றில் மிக அதிகமாகும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் Rogge 6ம் நாள் Azerbaijan தலைநகர் Bakuவில் தெரிவித்தார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் ஊக்கமருந்து சோதனையின் எண்ணிக்கை, முந்திய 3500லிருந்து 4500 ஆக அதிகரிக்கும். அதேவேளையில் தொடர்புடைய வாரியங்கள், ஊக்கமருந்து குறித்த கண்காணிப்பை வலுப்படுத்தும் என்று Baku நகரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, வரலாற்றில் மிகத் தூய்மையான போட்டியாக மாறச் செய்வது, இந்நடவடிக்கையின் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டிக்கான மொழித் துறையிலுள்ள தன்னார்வத் தொண்டர்களுக்கான தேர்வு மற்றும் சோதனை பணி, நடைபெற்று வருகிறது. தற்போதைய பெயர் பதிவு நிலைமை பார்த்தால், 55 மொழி தன்னார்வ சேவை தேவையானவை.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டிக்கு, சுமார் மொழித் துறையிலான 1000 தன்னார்வத் தொண்டர்கள் தேவைம். ஓய்வு பெற்றுள்ள நிபுணர்கள், பெய்ஜிங்கிலுள்ள அன்னிய மாணவர்கள் முதலியோர் பெயர் பதிவு செய்துள்ளனர். 12வது ஜிம்னாஸ்டிக் புகழ் மண்டபம் உள்ளூர் நேரப்படி 9ம் நாள் அமெரிக்க Oklahoma நகரில் நடத்தி விழாவில், சீனாவின் முதல் மகளிர் ஜிம்னாஸ்டிக் உலக சாம்பியனியரும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சாம்பியனியருமான ma yan hong உள்ளிட்ட 5 பேரை, இம்மண்டபத்தில் இணைத்து பெருமைப்படுத்துவது அறிவிக்கப்பட்டது. Li ningனை அடுத்து, ஜிம்னாஸ்டிக் புகழ் மண்டபத்தில் சேர்க்கப்பட்டு பெருமைப்படுத்தப்படும் சீனர், இவராவார். 1979ம் ஆண்டு உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்பட்ட போட்டியின் சமனற்றகம்பிகள் போட்டியில் அவர் சாம்பியன் பட்டம் பெற்றார். சீனாவின் முதல் ஜிம்னாஸ்டிக் உலக சாம்பியனாகவும் அவர் மாறினார்.
1984ம் ஆண்டு Los Angeles ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சமனற்றகம்பிகள் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றார். ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் தங்க பதக்கம் பெற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக ma yan hong மாறினார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி காலத்தில் பெய்ஜிங்கின் காற்று தரத்தை உத்தரவாதம் செய்யும் வகையில், பெய்ஜிங், tian jin, hu bei, shan xi, nei meng gu, shan dong ஆகிய 6 மாநிலங்கள், ஒத்துழைத்து, பிரதேச கூட்டு கட்டுப்பாட்டு அமைப்பு முறையை மேம்படுத்தி, உத்தரவாத நடவடிக்கைகளை நடைமுறைபடுத்தும். அண்மையில் சீனத் தேசிய சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆணையம் இவ்வாறு தெரிவித்தது. அண்மையில், சீன சுற்றுச் சூழல் பாதுகாப்பு வாரியம், காற்றுத் தரத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை வகுத்துள்ளது. மிகவும் சாதகமற்ற வானிலையில், பெய்ஜிங் அரசு, முன்னெச்சரிக்கை திட்டத்தை மேற்கொள்ளும்.
|