• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-15 15:03:14    
சீனாவின் ஷே இனம்

cri
சீனாவின் ஷே இன மக்கள், தங்களை shan ha என்று அழைக்கின்றனர். shan ha என்றால், மலைகளில் வாழ்பவர் என்று பொருள்படுகிறது. ஷே இன மக்கள், முக்கியமாக fujian மாநிலத்தின் fuan, zhejiang மாநிலத்தின் jingning, guangdong மாநிலம், jiangxi மாநிலம் முதலிய இடங்களில், ஹான் இன மக்களுடன் கலந்து வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகை 6 இலட்சத்து 30 ஆயிரமாகும்.

ஷே இன மக்கள் முக்கியமாக வேளாண்துறையில் ஈடுபடுகின்றனர். நெல், கோதுமை, புகையிலை ஆகியவை, அவர்களின் முக்கிய வேளாண் உற்பத்திப் பொருட்களாகும். அவர்கள் வாழ்கின்ற மலை பிரதேசங்களில் வன மூலவளங்களும் மூங்கிலும் மிக அதிகம். அங்குள்ள தேயிலை, உள்நாட்டு வெளிநாட்டு மற்றும் சந்தைகளில் புகழ் பெற்றது.

ஷே இனத்துக்கு சொந்தமான மொழி உண்டு. ஆனால் அவர்களுக்கு.சொந்த எழுத்துக்கள் இல்லை. பொதுவாக சீன மொழியின் ke jia என்ற வட்டார மொழியைப் பேசுவதோடு, சீன எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர்.

ஷே இன மக்களின் பாரம்பரிய பண்பாடு மிக உயர்ந்தது. பாடல்களைப் பாடுவதை அவர்கள் மிகவும் விரும்புகின்றனர். ஷே இனத் தனிச்சிறப்பு வாய்ந்த பாடல்கள், அவ்வினத்தின் பண்பாட்டிலான முக்கியத்துவம் வாய்ந்த குறிப்பிடத்தக்கது. வழிபாட்டடின் போதும், விருந்து அளிக்கின்ற போதும், திருவிழாக்களிலும், அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பேச்சுக்குப் பதிலாக, பாடல்களைப் இசைக்கின்றனர்.

ஷே இன மக்கள், பாரம்பரிய விழாக்களுக்கும் மூதாதையார் வழிபாடுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டின் பிப்ரவரி, ஜீலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று திங்களின் 15ம் நாட்களில், அவர்கள் தங்கள் மூதாதையர்களை வழிபடுவது வழக்கம். விழாவின் போது, இன்றியமையாத மதுபானமும் இறைச்சியும் தவிர, zi ba என்ற அரிசியாலான உணவை சமைக்க வேண்டும். வயது வந்தோர் தங்கள் பிறந்த நாளைக் கொண்டாடும் போதும், இதை சமைக்கின்றனர்.

ஷே இன மக்களின் ஆடையின் சிறப்பு, மகளிரின் ஆடை மூலம் வெளிப்படுகிறது. சட்டையிலான பூ வேலைப்பாடுகள் மிக அதிகம் என்பது இதன் பொது சிறப்பாகும். ஆண்களின் ஆடைகள் ஹான் இன மக்களின் ஆடைகளை போலவே காணப்படுகின்றன.