• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-15 09:47:29    
கசாக் இன ஆயர் Adelhanனின் குடியேற்றம்

cri
வட மேற்கு சீனாவின் சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் வட பகுதியில், நாடோடி வாழ்க்கை நடத்தும் கசாக் இனத்தோர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் கரடுமுரடான கூடாரம் கசாக் இன ஆயர்களின் நாடோடி வாழ்க்கையின் உதாரணமாக இருந்தது. ஆனால், தற்போது அவர்களில் சிலர் செங்கற்களாலான புதிய வீடுகளில் வசிக்கின்றனர். "குடியிருப்பு", இவ்வினத்தவர்களிடையே பரவலாக பரவியுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில், ஒரு கசாக் இனக் குடும்பத்தின் குடியேற்றக் கதை பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.
Adelhan என்னும் முதியோர், கசாக் இனத்தைச் சேர்ந்தவர். இப்போது, அவர், தனது மனைவி Zuran, நான்கு குழந்தைகள் ஆகியோருடன் Altai பிரதேசத்தின் Fu Hai மாவட்டத்தில் உள்ள Sakru கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். குடும்பத்தினர் 6 பேரும், 116 சதுர மீட்டர் பரப்பளவுடைய செங்கற்களாலான வீட்டில் அமைதியாக வாழ்கின்றனர். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன், இக்குடும்பத்தின் வாழ்க்கை வேறுபட்டிருந்தது. இது குறித்து Adelhan கூறியதாவது:

 
"அப்போது ஆண்டுதோறும் கோடைக்காலத்தில், Altai மலையின் மேய்ச்சல் நிலத்துக்கு வந்தோம். குளிர்காலத்தில், Sha Wu Er மலைக்கு குடிபெயர்ந்தோம். இவ்விரு இடங்களுக்கிடை தொலைவு அதிகம். நிறைய கால்நடைகளை வளர்த்தோம். குழந்தைகள் அப்போது வளர்ந்தவர்களாக இருக்கவில்லை. குடும்பத்தில் உழைப்பு ஆற்றல் வாய்ந்தவர்கள் பற்றாக்குறை. அப்போது எங்கள் வாழ்க்கை மிகவும் இன்னலுடன் இருந்தது. Huo Siயில் வசித்தோம். மின் விளக்கு இல்லை. மண்ணெண்ணெய் அடுப்பு மட்டுமே பயன்படுத்தினோம்" என்றார், அவர்.
"Huo Si" என்பது, கசாக் இனத்தின் பாரம்பரிய எளிமையான கூடாரமாகும். இதன் பரப்பு பெரியதாக இல்லை. குளிர் பாதுகாப்பு வசதிகள் குறைவு. குளிர்காலத்தில், Huo Siயில், Adelhanனும் அவருடைய குடும்பத்தினரும் இன்னலுடன் வாழ்ந்தனர்.
2005ஆம் ஆண்டு, ஆயர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க, Fu Hai மாவட்ட அரசு, ஆயர்களுக்கான தரமிக்க குடியிருப்புத் திட்டப்பணியை நடைமுறைப்படுத்தத் துவங்கியது. ஓராண்டுக்குப் பின், உள்ளூர் அரசு, 2 கோடியே 30 லட்சம் யுவானை ஒதுக்கீடு செய்து, புதிய குடியிருப்பு கிராமத்தை அமைத்தது. இந்த கிராமத்தில், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து வசதி, தொலைபேசி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன. மருத்துவ நிலையம், கடை, பள்ளி, பொழுதுபோக்கு மையம் ஆகியவை காணப்படுகின்றன. இதற்கு அருகில், சிறப்பான மேய்ச்சல் நிலமும், விளை நிலங்களும் இருக்கின்றன.
குடியிருப்பு கிராமம் கட்டியமைக்கப்பட்டப் பின், அதில் வந்து வசிக்குமாறு ஆயர்களை அணிதிரட்டும் பணி கடினமானது. ஏனெனில், நாடோடி வாழ்க்கை என்ற கருத்தில் கசாக் இன மக்கள் நீண்டகாலமாக உறுதியாக நிற்கின்றனர். அப்போது அணிதிரட்டும் பணியில் ஈடுபட்ட கிராம ஊழியர் Jiger கூறியதாவது:

 
"அப்போது சிதறி வாழ்ந்து, அலைந்து திரியும் நாடோடி வாழ்க்கைக்கு ஆயர்கள் பழக்கமாகியிருந்தனர். குழுமி வாழ்வதை ஆயர்கள் ஏற்றுக்கொள்வது மிகவும் சிரமம். குடியிருப்பினால் ஏற்படக்கூடிய நன்மையைப் பிரச்சாரம் செய்யும் வகையில், கிராமத்தில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. ஆனால் ஆயர்கள் இதற்கு தக்க மறுமொழி அளிக்கவில்லை. இதனால், ஒவ்வொரு குடும்பத்துக்கும் சென்று, பிரச்சாரம் செய்து, சுயவிருப்பத்துடன் குடிபெயருமாறு ஆயர்களை வலியுறுத்தினோம்" என்றார், அவர். அப்போது, Adelhan, மிகப் பல கசாக் இன ஆயர்களைப் போல், மகிழ்ச்சியடைந்ததோடு, கவலையும்பட்டார். இம்மனோநிலையுடன் இக்குடும்பம் குடிபெயரப் பதிவு செய்ததாக Adelhanவின் மனைவி கூறினார்.
புதிய வீட்டில் குடிபெயர்ந்தப் பின், இங்குள்ள நிலைமை முன்பு தாம் நினைத்ததிலிருந்து வேறுபட்டது என்று Adelhanனின் குடும்பத்தினர் கண்டறி்ந்தனர். இங்கு குடிநீர் மற்றும் மின்சாரத்தைத் தவிர, தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி உண்டு. தவிர, அரசிலிருந்து அதிக உதவித்தொகையை பெறலாம். கால்நடை வளர்ப்பு விவகாரத்துக்குப் பொறுப்பான Fu Hai மாவட்டத்தின் துணைத் தலைவர் Jia Lin செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:


"ஒரு வீட்டைக் கட்டுவதில், ஓர் ஆயர் குடும்பத்துக்கு 10 ஆயிரம் யுவான் உதவித்தொகையை வழங்குகின்றோம். கால்நடை தொழுவம் கட்டுவதில் 10 ஆயிரம் யுவானை வழங்குகின்றோம். இவ்வாறு ஆயர் குடும்பம் ஒன்றுக்கு குறைந்தது 20 ஆயிரம் யுவான் உதவித்தொகையை மாவட்ட அரசு வழங்குகின்றது. பல்வேறு வட்டங்கள் தத்தமது நிலைமைக்கிணங்க, வேறு 5 ஆயிரம் யுவான் உதவித்தொகையை வழங்குகின்றன. ஆக மொத்தம் ஓர் ஆயர் குடும்பம் 25 ஆயிரம் யுவானைப் பெறலாம்" என்றார், அவர்.
Adelhanனும் அவருடைய குடும்பத்தினரும், அகலமான, வசதியான வீட்டில் வசிக்கின்றனர். இது மட்டுமல்ல, கால்நடைகள் குளிர்காலத்தைக் கழிக்க, 80 சதுர மீட்டர் பரப்புடைய தொழுவத்தைக் கட்டியமைத்தனர். தற்போது பெரும் பனியினால் ஏற்படக்கூடிய சீற்றங்களை பற்றி கவலைபடத் தேவையில்லை. 6 ஹெக்டர் மேய்ச்சல் நிலத்தையும், புற்களை வளர்க்க, 4 ஹெக்டர் பரப்பு நிலத்தையும் இக்குடும்பம் பெற்றுள்ளது.
இக்கிராமத்தின் ஏற்பாட்டிலான அறிவியல் ரீதியான வளர்ப்பு மற்றும் பயிரிடுதல் தொடர்பான பல்வகை பயிற்சியில் Adelhan கலந்து கொண்டுள்ளார். அறிவியல் ரீதியான உற்பத்தி வழிமுறைகளைப் பயன்படுத்தி, முன்பு ஓராண்டுக்காலத்தில் பெற்ற பயனை, தற்போது சில மாதங்களில் பெற முடியும் என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது:

"வகுப்புகளில், வளர்ப்பு மற்றும் பயிரிடுதல் பற்றிய அறிவுகளைக் கற்றுக்கொண்டேன். தற்போது தரமிக்க கறவை மாடுகளையும், ஆடுகளையும் வளர்க்கின்றேன். புற்கள் வளரும் அளவும், பால் மற்றும் செம்மறி ஆட்டு உரோம அளவும் பெருமளவில் அதிகரித்துள்ளன. எனது குடும்பத்தின் ஆண்டு வருமானம், முந்தைய சில ஆயிரம் யுவானிலிருந்து, 50 ஆயிரம் யுவானுக்கு மேல் வரை அதிகரித்துள்ளது" என்றார், அவர்.
குடும்ப வருமானம் அதிகரித்துள்ளது. இது மட்டுமல்ல, இங்கு மருத்துவ மனை, பள்ளி, பண்பாட்டு பொழுதுபோக்கு மையம் உள்ளிட்ட வசதிகள் காணப்படுகின்றன. இவை, Adelhanனின் குடும்பத்துக்கு மேலதிக வசதிகளைத் தந்துள்ளன.
தற்போது, Adelhanனின் வீட்டிலிருந்து, கிராமத்தின் மருத்துவ நிலையம் 100 மீட்டர் தொலைவில் உள்ளது. கிராமத்தின் மருத்துவ நிலையத்தில் மருத்துவர் ஒருவரும், செவிலியர் ஒருவரும் இருக்கின்றனர். பொதுவாக பயன்படுத்தப்படும் மருந்துகளும், அடிப்படை மருத்துவ வசதிகளும் முழுமையாக இங்குள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு முன், கூட்டுறவு மருத்துவ சிகிச்சை அமைப்பு முறையில் Adelhanனின் குடும்பம் பங்கெடுக்கத் துவங்கியது. தற்போது, மருத்துவ சிகிச்சை பெறும் போது, இக்குடும்பம் ஒரு பகுதி மருத்துவ கட்டணத்தைத் திருப்பிப் பெற முடியும்.
Adelhan குடும்பத்தின் குடியிருப்பு வாழ்க்கையைக் கண்டு, மேலதிக ஆயர்கள் இங்கு குடிபெயர விரும்புகின்றனர். 2006ஆம் ஆண்டு, Sai Ke Lu கிராமத்துக்கு 30 ஆயர் குடும்பங்கள் மட்டுமே சுயவிருப்பத்துடன் வந்தன. 2007ஆம் ஆண்டு, 60 ஆயர் குடும்பங்கள் இங்கு குடிபெயர்ந்துள்ளன. Altai பிரதேசம் முழுவதிலும், 8 ஆயிரத்துக்கு அதிகமான ஆயர் குடும்பங்கள் குடியிருப்பு இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளன. குடியேற்ற விகிதம், 30 விழுக்காட்டை எட்டியுள்ளது.
அண்மையில், Altai பிரதேசத்தில், ஆயர்களின் குடியேற்றம், உள்ளூர் சமூகப் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான மூன்று முக்கிய பணிகளில் ஒன்றாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வரும் சில ஆண்டுகளில், ஆயர்களின் குடியேற்றத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இப்பிரதேச அரசு மேலும் அதிகரிக்கும். இப்பிரதேசத்தின் கால்நடை வளர்ப்பு அலுவலகத் தலைவர் Ren Zhen Ping கூறியதாவது:

"ஆயர்களின் குடியேற்றப் பணியை, உற்பத்தி வழிமுறையையும், உயிரின வாழ்க்கை சூழலையும் மேம்படுத்தி, ஆயர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டப்பணியாகக் கொண்டு, இதை உறுதியாக செயல்படுத்த வேண்டும் என்று முன்வைத்துள்ளோம்" என்றார், அவர்.
Adelhanனின் வீட்டிலிருந்து வெளியேறிய போது, இரண்டாம் தரமாக வாங்கப்பட்ட ஜீப்பை எங்களிடம் இம்முதியோர் காட்டினார். அவர் கூறியதாவது: 
"2006ஆம் ஆண்டு, 20 ஆயிரம் யுவானைச் செலவிட்டு, இந்த ஜீப் வாங்கினேன். தற்போது, சாலைகளில் தடையில்லை. ஜீப்பில் தீ வனங்களை வாங்கி கொண்டு வருவது வசதியாகவுள்ளது. வாழ்க்கை மேலும் மேம்பட்டுள்ளது" என்றார், அவர்.