பெல்ஜியம் டென்னிஸ் போட்டி
cri
பெல்ஜியம் மகளிர் டென்னிஸ் போட்டியின் முதல் நாள் போட்டி முடிவடைந்தது. சீனாவின் வீராங்கனை li na 2வது சுற்றில் நுழைந்துள்ளார். அவர் முதல் எதிராளியான, ரஷியாவின் Likhovtsevaவை அவர் 2-0 என்ற ஆட்ட கணக்கில் வென்று, அடுத்த சுற்றில் நுழைந்தார். சீனாவின் இதர வீராங்கனை peng shuai 0-2 என்ற ஆட்ட கணக்கில் பெல்ஜிய வீராங்கனை Wickmayerரிடம் தோல்வியடைந்தார்.
 Riyadh நகர் உள்ளிட்ட மேலும் அதிகமான அரபு நகரங்கள், 2016 2020ம் ஆண்டுகளிலான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று சௌதி அரேபியாவின் தலைநகர் Riyadhதில் பயணம் மேற்கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் Rogge விருப்பம் தெரிவித்தார். கத்தாரின் தோஹா நகர், 2016ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கென விண்ணப்பம் செய்துள்ளது. இது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக Rogge தெரிவித்தார். தற்போது, Riyadhதுக்கு குறிப்பிட்ட அளவில் விளையாட்டரங்கு மற்றும் விளையாட்டு வசதிகள் இருக்கின்றன. பெருமளவிலான சர்வதேச விளையாட்டுப் போட்டியை நடத்தும் ஆற்றலுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். Riyadh முதலிய அரபு நகரங்கள், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான விண்ணப்பம் செய்யும் முயற்சியில் சேர வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி காலத்தில் பெய்ஜிங்கின் காற்று தரத்தை உத்தரவாதம் செய்யும் வகையில், பெய்ஜிங், tian jin, hu bei, shan xi, nei meng gu, shan dong ஆகிய 6 மாநிலங்கள், ஒத்துழைத்து, பிரதேச கூட்டு கட்டுப்பாட்டு அமைப்பு முறையை மேம்படுத்தி, உத்தரவாத நடவடிக்கைகளை நடைமுறைபடுத்தும். அண்மையில் சீனத் தேசிய சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆணையம் இவ்வாறு தெரிவித்தது. அண்மையில், சீன சுற்றுச் சூழல் பாதுகாப்பு வாரியம், காற்றுத் தரத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை வகுத்துள்ளது. மிகவும் சாதகமற்ற வானிலையில், பெய்ஜிங் அரசு, முன்னெச்சரிக்கை திட்டத்தை மேற்கொள்ளும்.
 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டிக்கான மொழித் துறையிலுள்ள தன்னார்வத் தொண்டர்களுக்கான தேர்வு மற்றும் சோதனை பணி, நடைபெற்று வருகிறது. தற்போதைய பெயர் பதிவு நிலைமை பார்த்தால், 55 மொழி தன்னார்வ சேவை தேவையானவை. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டிக்கு, சுமார் மொழித் துறையிலான 1000 தன்னார்வத் தொண்டர்கள் தேவைம். ஓய்வு பெற்றுள்ள நிபுணர்கள், பெய்ஜிங்கிலுள்ள அன்னிய மாணவர்கள் முதலியோர் பெயர் பதிவு செய்துள்ளனர்.
|
|