• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-15 09:31:42    
சீனாவில் புகழ்பெற்ற பாடகியான த்த்மா

cri
அவருடைய ஊர் உள் மங்கோலியா, அவர் மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர். இவ்வாண்டு 61 வயதான த்த்மா, சீனாவின் உள் மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்தின் அலாசான் மாவட்டத்தில் ஒரு ஆயர் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய பெற்றோரும், உள்ளூர் பிரதேசத்தில் மிகப் புகழ்பெற்ற புல்வெளி பாடகியும் பாடகர்களாவர்.

பரந்த புல்வெளியும், அழகான கால்நடைகளும், த்த்மாவுக்கு இசை திறமையை வழங்கின. 13வயதான போது, அவர், உள்ளூர் கலை குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு சிறிய அரங்கேற்ற கலைஞராக மாறினார். இரண்டு ஆண்டுகளுக்கு பின், அவர் உள் மங்கோலிய கலை பள்ளியில் நுழைந்து இசையை கற்றுக்கொள்ள துவங்கினார். 1964ம் ஆண்டு, சீனாவின் முதலாவது தொகுதி சிறுபான்மை தேசிய இன மாணவராக, சீன இசை கல்லூரிக்கு அனுப்பப்பட்டு, அமைப்பு முறையாக, தேசிய இன இசை கற்றுக்கொண்டார். கல்வி முடிந்த பின், த்த்மா, தமது ஊருக்கு திரும்பி, பாடல் துறையில் ஈடுபட துவங்கினார்.

கல்வி முடித்ததற்குப் பிந்திய 10 ஆண்டுகளில், உள்ளூர் பிரதேசத்தில் அவர் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தவில்லை. ஆனால், அவருக்கு 31 வயதான போது, சீனாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள குவாங்சோ நகரில் அரங்கேற்றம் செய்த போது, அழகிய புல்வெளி, என்னுடைய ஊர் என்ற பாடலால், அனைத்து ரசிகர்களின் கைதட்டலை பெற்றார். அவருடைய தன்னுடைய ஆழமான தனித்தன்மை வாய்ந்த இனிமையான குரலுடனும், உண்மையான உணர்வுடனும் இப்பாடலைப் பாடினார். இதனால், அவர் புகழ்பெற துவங்கினார்.


1982ம் ஆண்டு, த்த்மா, பெய்சிங்கிற்கு வந்து, மத்திய தேசிய ஆடல் பாடல் குழுவில் சேர்ந்தார். ஒரு தனி பாடகியாக மாறினார். இங்கே, அவருடைய பாடல் பாடும் தொழில் நுட்பம், நாளுக்கு நாள் மேம்பட்டது. மேலை நாட்டுப் பாடல் பாடும் முறையையும் மங்கோலிய பாடல் பாடும் முறையையும் அவர் இணைத்து பாட துவங்கினார். தேசிய இன தனிச்சிறப்பை நிலைநிறுத்தும் அடிப்படையில், இடைவிடாமல் மேம்படுத்தி, தனது தனிச்சிறப்புடைய கலை பாணியை உருவாக்கினார். அவர் பாடுகின்ற பல மங்கோலிய இன பாடல்கள், சீனாவில் பெருமளவில் பரவலாகியுள்ளன.
இந்த வளர்ச்சி அனுபவத்தை பற்றி பேசுகையில், அதிகமான தலைசிறந்த கலைஞர்களால் உருவாக்கப்பட்ட சீன மத்திய தேசிய ஆடல் பாடல் குழுவில் நுழைந்து பணி புரிவது, அவரை பொறுத்த வரை, மிக அரிதான அனுபவமாகும். அவர் கூறியதாவது

சீன மத்திய தேசிய ஆடல் பாடல் குழுவில், பல தேசிய இனத்தை சேர்ந்தோர் உள்ளனர். நீங்கள், உள் மங்கோலியாவை பிரதிநிதித்துவப்படுத்தி, இக்குழுவில் இடம்பெற விரும்பினால், மங்கோலிய இனத்தின் இசை துறையினர் மற்றும் ரசிகர்களின் அனுமதியையும் ஆதரவையும் பெற வேண்டும். பெய்சிங்கை வந்த பின், நான் இந்த வாய்ப்பை மதிப்புள்ள முறையில் பயன்படுத்தினேன். பெய்சிங்கில், கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்., இருபதற்கு அதிகமான ஆண்டுகளில், நான் பெற்றுள்ள சாதனை, ஆசிரியர்களுடன் தொடர்புடையது என்றார் அவர்.
ஹூ மொழியிலும் பாடும் காற்று என்ற பாடல் மங்கோலிய இனத்தின் ஒரு பாரம்பரிய நாட்டுபுற பாடலாகும். கடந்த 90ம் ஆண்டுகளில், த்த்மா, இப்பாடலை புதிய பாணியில் பாடினார். வாழ்க்கை மீது மங்கோலிய இன மக்களின் ஆக்கபூர்வமான மனப்பாங்கை இப்பாடல் வெளிக்கொணர்ந்தது.

இப்பாடலை அவர் பாடிய பின், பல ரசிகர்கள் அவர் பாடலில் ஈர்க்கப்பட்டனர். இதனால், அவர் அடிக்கடி இப்பாடலை பாடுகிறார்.
அவர் பாடல் துறையில் முழுமையாக ஈடுபட்ட போது, துர அதிர்ஷ்டம், அவரை நாடிச் சென்றது. 1998ம் ஆண்டு, அழைப்பை ஏற்று, அவர் ஜப்பானுக்குச் சென்று பாடல் பாடினார். அங்கே இரண்டாவது பாடலைப் பாடிய போது, அவருடை நாவு கட்டுப்படுத்தப்பட முடியாமல், வலது கை திடீரென ஆற்றல் இழந்தது. அரங்கை விலகியதுடனே, அவர் மயக்கமடைந்தார். அவர் கண் விழித்த போது, மூளை சன்னியால் ஏற்பட்ட வாதத்தால், அவருடைய வலது பக்க உடல் முழுவதும் அசைக்க முடியாமல் போனது. ஆனால், அவர் உறுதியான எழுச்சியுடன், நீ்ண்டகாலம் நோயை கடினமாக எதிர்த்து போராடினார். அப்போதைய காட்சியை மீளாய்வு செய்து அவர் கூறியதாவது
நான், முன் நோக்கி செல்ல வேண்டும். உலகில் அனைத்து வழிகளும், மனிதர் செல்வதற்கே என்றார் அவர்,

9 திங்கள் கால சிகிச்சையின் மூலம், 1999ம் ஆண்டின் அக்டோபர் திங்கள், த்த்மா, பாடல் அரங்கிற்கு மீண்டும் திரும்பினார். உயிர் இழக்கும் தருவாயில் சில பரிசோதனைகளின் மூலம், அவருக்கு வாழ்க்கையின் மீது புதிய கருத்து ஏற்பட்டது. நோயிலிருந்து விலகிய அவர், பல பத்து ஆண்டுகளாக ஈடுபட்ட பாடல் துறையை மேலும் அதிகமாக விரும்புகிறார். 2001ம் ஆண்டு, அவர், ஆயர் என்ற தனது மூன்றாவது ஒலி நாடாவை வெளியிட்டார். இதற்கு பிந்திய ஒரு ஆண்டில், த்த்மாவின் செங்குடை என்ற மற்றொரு பாடல் ஒலிநாடாவை வெளியானது.
இப்போது, த்த்மா, சீன தேசிய இன இசைக்கான அரங்கில் மீண்டும் உலா வருகின்றார். பல்வேறு பெரிய ரக பண்பாட்டு மற்றும் கலை நடவடிக்கைகளிலும் பொது நலனுடன் கூடிய அரங்கேற்றங்களிலும் அவர் அடிக்கடி கலந்துக்கொள்கிறார். 2007ம் ஆண்டு, அவர் பெய்சிங்கில் தனியார் வாய்ப்பாட்டு அரங்கேற்றத்தை நடத்தினார். பாடல் துறையிலான பசுமையா3ன மரத்தின் ஈர்ப்பு ஆற்றலை ரசிகர்கள் மீண்டும் உணர்ந்தனர்.