
பெய்ஜிங் மாநகரத்தில் 8 ஆண்டு காலம் நீடித்து வரும் தொல் பொருட்களின் பாதுகாப்புத் திட்டப்பணி, அண்மையில் வெற்றிகரமாக நிறைவேற்றியது. கடந்த 8 ஆண்டுகளில், தொல் பொருட்களைத் திருத்தியமைத்துப் பாதுகாக்கும் வகையில், பெய்ஜிங் மாநகராட்சி 93 கோடி யுவான் மதிப்புள்ள ஒதுக்கீடு செய்து, குறிப்பிடத்தக்க கனிகளைப் பெற்றுள்ளது.

பெய்ஜிங் மாநகரம் கட்டியமைக்கப்பட்ட வரலாறு ஏறக்குறைய 3 ஆயிரம் ஆண்ட்டைத் தாண்டியுள்ளது. மிக அதிகமான தொல் பொருட்களைக் கொள்ளும் இம்மாநகரம், உலகில் புகழ் பெற்ற வரலாற்று பண்பாட்டு நகரமும் அழைக்கப்படுகிறது. அரண் மனை அருங்காட்சியகம், சொர்க்கத்தின் ஆலையம், பெருஞ்சுவர் உள்ளிட்ட உலக மரபு செல்வங்கள் தவிர, பல ராயல் தோட்டக் கலைகள், மதக் கட்டிடம், பொது மக்களின் வசிப்பிடங்கள் முதலியா பல வகை நடமாடப்பட்டாத தொல் பொருட்களின் எண்ணிக்கை 3500 ஆகும்.

பெய்ஜிங்கின் நெடுநோக்கு வளர்ச்சியைப் பொறுத்த வரை, தொல் பொருட்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. சீனப் பழங்கால நகரங்கள் மிக நீண்டகாலமான வரலாற்றைக் கொண்டு, சீனாவின் நாகரிகப் பிறப்புடன் சேர்ந்து ஒரே நேரத்தில் வளர்ந்துள்ளன. சீனாவின் பண்டைகால நகரங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. தனிச்சிறப்பு வாய்ந்த மாதிரி மற்றும் வளர்ச்சிக் கட்டடங்கள், இந்நகரங்களின் வளர்ச்சிப் போக்கில் காணப்பட்டு, ஐரோப்பியத்திலிருந்து வேறுபாடுகள் நிலவுகின்றன. தற்போதைய பெய்ஜிங் மாநகரத்தின் தொண்மையான பகுதி, yuan,ming,qing ஆகிய மூன்று வம்சங்களில் உருவாக்கப்பட்டது. இது, சீனப் பண்டைகால நகரங்களின் தலைசிறந்த, பாரம்பரிய வளர்ச்சிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சீன நாகரிகத்தின் பாதிக்கு மேலான பகுதி, பண்டைகால நகரங்களில் நிலவியது. ஏனென்றால், சீனப் பண்டைகால நகரங்கள், சீனாவின் மிக முக்கியமான வரலாற்றுப் பண்பாட்டு மரபுச் செல்வமாகும் என்று சீனாவில் புகழ் பெற்ற தொல் பொருள் நிபுணர் தெரிவித்தார்.

நண்பர்களே, தொல் பொருட்களின் பாதுகாப்பு என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.
|