• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-18 08:43:37    
ஜிம்னாஸ்டிக் புகழ் மண்டபம்

cri
12வது ஜிம்னாஸ்டிக் புகழ் மண்டபம் உள்ளூர் நேரப்படி 9ம் நாள் அமெரிக்க Oklahoma நகரில் நடத்தி விழாவில், சீனாவின் முதல் மகளிர் ஜிம்னாஸ்டிக் உலக சாம்பியனியரும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சாம்பியனியருமான ma yan hong உள்ளிட்ட 5 பேரை, இம்மண்டபத்தில் இணைத்து பெருமைப்படுத்துவது அறிவிக்கப்பட்டது. Li ningனை அடுத்து, ஜிம்னாஸ்டிக் புகழ் மண்டபத்தில் சேர்க்கப்பட்டு பெருமைப்படுத்தப்படும் சீனர், இவராவார்.

1979ம் ஆண்டு உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்பட்ட போட்டியின் சமனற்றகம்பிகள் போட்டியில் அவர் சாம்பியன் பட்டம் பெற்றார். சீனாவின் முதல் ஜிம்னாஸ்டிக் உலக சாம்பியனாகவும் அவர் மாறினார். 1984ம் ஆண்டு Los Angeles ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சமனற்றகம்பிகள் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றார். ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் தங்க பதக்கம் பெற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக ma yan hong மாறினார்.
சர்வதேச ஒலிம்பிக் குழு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான இணைப்புக் குழுவின் தலைவர் Verbruggen, 6ம் நாள் 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்த பணியை உயர்வாக பாராட்டினார். உலகத்துக்கு சிறந்ததொரு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை சீனா நடத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

6 திங்களுக்கு பின், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. உலகம், சீனா மற்றும் பெய்ஜிங்கின் மீது மாபெரும் எதிர்பார்பை கொண்டுள்ளது. 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, எல்லா நண்பர்களின் எதிர்பார்ப்பையும் நிராசைப்படுத்தாது. பெய்ஜிங்கின் தேசிய அரங்களை பறவை கூடு, நீர் கன சதுரம் முதலிய விளையாட்டரங்குகளை போன்று, அது, வெற்றிகரமான சீரான விளையாட்டுப் போட்டியாக மாறும். ஸ்விட்சர்லாந்து Lausanne நகரிலுள்ள ஒலிம்பிக் அருங்காட்சியகத்தில், பெய்ஜிங் 2008 பன்பாட்டு நடவடிக்கைகளின் துவக்க விழாவில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பேட்டி காணப்பட்டபோது, அவர் செய்தியாளரிடம் பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் ஆயத்தப் பணியை பாராட்டினார். இத்துடன், அனைத்து திட்டப்பணிகளும் சீராக நடைபெற்று வருகிறன என்று அவர் தெரிவித்தார்.
பெய்ஜிங் மற்றும் சீனாவை அதிகமாகவே அறிக்கும் வாய்ப்பை, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி உலகத்துக்கு வழங்கும் என்று அவர் கூறினார்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி காலத்தில் பெய்ஜிங்கின் காற்று தரத்தை உத்தரவாதம் செய்யும் வகையில், பெய்ஜிங், tian jin, hu bei, shan xi, nei meng gu, shan dong ஆகிய 6 மாநிலங்கள், ஒத்துழைத்து, பிரதேச கூட்டு கட்டுப்பாட்டு அமைப்பு முறையை மேம்படுத்தி, உத்தரவாத நடவடிக்கைகளை நடைமுறைபடுத்தும். அண்மையில் சீனத் தேசிய சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆணையம் இவ்வாறு தெரிவித்தது.
அண்மையில், சீன சுற்றுச் சூழல் பாதுகாப்பு வாரியம், காற்றுத் தரத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை வகுத்துள்ளது.
மிகவும் சாதகமற்ற வானிலையில், பெய்ஜிங் அரசு, முன்னெச்சரிக்கை திட்டத்தை மேற்கொள்ளும்.