• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-19 09:50:21    
ச்சொங் சான் பூங்கா

cri

ச்சொங் சான் பூங்கா, பெய்ஜிங் மாநகரத்தின் நடுவிலுள்ள அரண்மனை அருங்காட்சியகத்தின் தெற்காகவும், தியான் ஆன் மென் சதுக்கத்தின் மேற்காகவும் அமைந்து இருக்கிறது. இப்பூங்காவின் பரப்பளவு, 2 இலட்சத்து 30 ஆயிரம் சதுர மீட்டராகும். இது, ஒரு பழைய கோயில் தோட்டமாகும்.

இது, 1421ம் ஆண்டு கட்டியமைக்கப்பட்டது. மிங் மற்றும் சிங் வம்சகாலங்களில் கொண்டாட்ட இடமாக பயன்படுத்தப்பட்டது. சிங் வம்சகாலத்தின் பேரரசர் பதவியிலிருந்து விலகிய பின், மேலாண்மை குறைவால், இத்தோட்டத்தின் காவலர்கள் இதில் ஆடுகளையும் பன்றிகளையும் வளர்த்து, பல இடங்களில் தீவனத்தை பயிரிட்டனர்.

1914ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 10ம் நாள், இத்தோட்டம், பொது மக்களுக்கு திறந்து வைக்கப்பட்டு, மத்திய பூங்கா என அழைக்கப்பட்டது. இதன் மூலம், பெய்ஜிங்கில் மிக முன்னதாகவே, பூங்காவாக மாறிய அரசக் குடும்பத் தோட்டங்களில் இது ஒன்றாகும். இப்பூங்கா திறந்து வைக்கப்படும் முன், பெருமளவில் பழுதுபார்க்கப்பட்டது. Chang an வீதியை நோக்கியிருக்கும் முக்கிய வாயில் கட்டியமைக்கப்பட்டு, கிழக்குப் பகுதியிலுள்ள சுவரில் பிறை வடிவ வாசல் திறக்கப்பட்டது.

1915ம் ஆண்டுக்குப் பின், இப்பூங்காவில், பல கட்டிடங்கள் கட்டியமைக்கப்பட்டன. 1925ம் ஆண்டு, சன் யட் சானின் பூதவுடன், பூங்காவிலுள்ள வணங்கும் மண்டபத்தில் புதைக்கப்பட்டது. 1928ம் ஆண்டு, இது ச்சொங் சான் பூங்கா என பெயர் மாற்றப்பட்டது. பின்னர், Songbaijiaocui, Geyan, Huifang விதான மண்டபங்கள் முதலிய காட்சிகள் அமைக்கப்பட்டன. அதே வேளையில், Xili விதான மண்டபம், Lan விதான மண்டபம், Bazhu விதான மண்டபம் முதலியவை, இப்பூங்காவில் குடியமைக்கப்பட்டன. பல சிங் வம்சகால அரண்மனைகளிலுள்ள புகழ்பெற்ற கற்கள் அங்கு, இடமாற்றப்பட்டன.

1988ம் ஆண்டு, ச்சொங் சான் பூங்கா, சீன அரசவையால், நாட்டின் முக்கிய தொல்பொருள் பாதுகாப்பு இடமாகக் உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது, இது, உலகப் பண்பாட்டு மரபு செல்வமாக உயர்த்த விண்ணப்பிக்கப்படயுள்ளது.