• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-19 15:26:47    
குடும்பங்கள்

cri
சமூகத்தின் ஒரு சிறிய பதிப்பு, குடும்பமாகும். வரலாற்றை புரட்டி பார்த்தால், பண்டைய பேரரசுகள் மற்றும் வம்சங்களின் தலைவர்கள் எல்லோரும் தங்களது குடும்பங்களின் நிலைத்தன்மை மற்றும் நீள்ச்சியில் மிகவும் கவனம் செலுத்தினர். காரணம் இது சமூகத்தின் நிலைத்தன்மை மற்றும் அந்தத் தலைவனின் ஆட்சிமுறையில் செல்வாக்கு வாய்ந்த அம்சம் என்பதே. வாரிசு ஆட்சி பற்றி நமக்கு தெரியாதா என்ன. சரி இனி சீனக் குடும்பங்களை பற்றிய பல சுவையான தகவல்களை அறிந்துகொள்வோம்.
பண்டைய கால சீனக் குடும்பங்கள்
ச்சிங் வம்சக்காலத்தில் எழுதப்பட்ட ஹுங் லொவ் மெங் அதாவது கல்லின் கதை என்ற திரட்டில், சீனக் குடும்பமானது, நீண்டகால வரலாற்று வளர்ச்சியின் விளைவான கனியாகக் கூறப்படுகிறது. இதில் முக்கிய அம்சங்களாவன:
தந்தைவழிச் சமூக பாரம்பரிய வளர்ச்சி மற்றும் குடும்பங்களுக்கு புறத்தேயான திருமணங்கள் பற்றிய அடிப்படை விதிகள்.


மூதாதயர்களுக்கான வணக்கம் மற்றும் மரியாதை, பலிகொடுத்தல்.
பெற்றோரை மதித்து கவனிப்பது பற்றிய நன்னெறி மதிப்பீடு.
இவையெல்லாம் ஷௌ வம்சக்காலத்தின் இறுதி வாக்கிலேயே மக்களிடையில் சமூக விழுமியங்களாக, மதிப்பான அம்சங்களாக ஊடுருவியிருந்தன.
சீன மொழியில் குடும்பம் என்பதை "ச்சியா" என்று கூறுவர். இந்த ச்சியா என்பது மூல குடும்பத் தொகுதியை குறிக்கும். அதாவது இரத்தத்தால், திருமணத்தால், ஒன்றாய் வாழ்ந்து,ஒன்றாய் செல்வம், பொருளாதாரத்தை நிர்வகிப்பதால், அல்லது தத்துமூலம் இணைந்ததால் உறவாகிய அனைவரும் ஒரு குடும்பம், ச்சியா என்று கூறப்படுகின்றனர். இந்த ச்சியா என்ற குடும்பத்தில் ஆண் உறுப்பினர்கள் எல்லாம், தந்தைவழி / ஆண்வழியால் உறவினர்களானவர்களாக இருப்பர். மகன்கள் தந்தைமாருடன் வசிப்பர். அவர்களது மனைவிமார் தங்கள் தந்தை இல்லத்திலிருந்து திருமணத்துக்கு பின் கணவனின் தந்தை இல்லம் வந்து சேர்வர். (எல்லாம் நம்மூரில் இருப்பது போலத்தான்.)


பொதுவாகவே பெண்களுக்கு திருமண வயதானவுடன், அவர்களை வேற்று குடும்பத்துடன், வேறு ச்சியாவுக்கு திருமணம் செய்து கொடுத்து அனுப்ப, அவர்கள் வேறு குடும்பத்தின் உறுப்பினர்களாகின்றனர். திருமணச் சடங்கோடு தந்தைவழி தொடர்பு முறிந்து, புதிய குடும்பத்தில் உறுப்பினராகி, அக்குடும்பத்தின் மூதாதையர் உள்ளிட்ட அனைவருக்கும் சேவை புரிய அவர்கள் இணங்குகின்றனர். ஒரு குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் அக்குடும்பத்தின் நிரந்தர உறுப்பினர்களாக, பெண்கள் எப்போதும் பிறந்த குடும்பத்தை விட்டு வேறு குடும்பத்துக்கு செல்லக்கூடியவர்களாக இருக்கின்றனர். ஆக ஆண்வழிச்சமூகத்தின் குடும்ப வரலாற்றில், பெண்களுக்கு அவர்களது கணவனின் குடும்பத்திலேயே இடம் உறுதியானது, அதுவும் அவர்கள் ஒரு ஆண் மகவை ஈன்றெடுக்கும் போது.
ஒரு பிள்ளை என் சொந்தம், ஒரு பிள்ளை ஊராருக்கு சொந்தம் என்று ஒரு மகனையும், ஒரு மகளையும் சொல்லும் வழமை நம்மூரில் இருப்பது போல், சீனாவிலும் பண்டைய காலந்தொட்டே வாரிசு, குடும்ப வம்சாவழி ஆகியவற்றில் ஆணும் பெண்ணும் பெறும் இடம் ஒன்றுபோல் காணப்படுகிறது.


பொதுவாக ஒரு ச்சியா, ஒரு குடும்பம், வாழ்விடத்தையும், வருமானத்தையும் பகிர்ந்துகொண்டதாக அமைந்திருந்தது. குடும்பத்தில் மூத்த ஆண் உறுப்பினர்தான் எல்லாவற்றுக்கும் தலை. அவரது முடிவே எப்போதும் இறுதியானது. நம் நாட்டு கூட்டுக்குடும்பம் போல், சீனாவிலும் அக்காலத்தில் இரண்டு மூன்று தலைமுறைகள் ஒன்றாக, ஒரே கூரையின் கீழ் வாழ்ந்து வந்துள்ளனர்.

மகன்கள் தங்கள் தந்தைமாரின் அனுமதியும், ஆலோசனையும் பெற்றே, தங்களது வேலை, மனைவி என எதையும் முடிவுசெய்வர். இத்தகைய குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒரே இலக்கிற்காகத்தான் ஒன்றுகூடி உழைப்பர். குடும்ப செல்வத்தையும், தகுநிலையையும் உயர்த்துவதே அந்த இலக்கு. இத்தகைய பெரிய, நன்றாக கிளைவிட்டு தழைத்த கூட்டுக்குடும்பங்களில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் வீடே ஒரு உலகம். அவர்கள் நாள் தொடங்கி முடியும் வரை வீட்டின் சுவர்களுக்குள்ளேயே சுழன்றுகொண்டிருப்பர். இருப்பினும், ஒரு குடும்பத்தின் செல்வம், மதிப்பு, தகுநிலை எல்லாமே வீட்டிற்கு வெளியே சென்று பொருள் சேர்க்கும் ஆண்களின் வெற்றி தோல்வியை சார்ந்தே அமைந்தது.