இன்று வாணி, க்ளீட்டஸ் இருவரும் தங்களுக்கு இன்னொரு சுவையான சீன உணவு வகையை அறிமுகப்படுத்துகின்றோம். க்ளீட்டஸ் – வணக்கம். வாணி, இன்று எந்த வகை உணவு பற்றி கூறுகின்றோம்? வாணி – கடந்த சில நிகழ்ச்சிகளில் ஆட்டிறைச்சி இடம்பெறும் உணவு வகைகளை அறிமுகப்படுத்தினோம். இன்று இன்னொருவகை ஆட்டிறைச்சி வறுவல் பற்றி கூறுகின்றோம். க்ளீட்டஸ் – அப்படியா? நேயர்களே, ஆட்டிறைச்சியில் ஊட்டச்சத்துகள் அதிகம். ஆனால், இதில் கொழுப்புச்சத்து பன்றியிறைச்சியில் இருப்பதை விட பாதி அளவு தான். மேலும், 500 கிராம் எடையுடைய ஆட்டிறைச்சி, 64 கிலோ joule வழங்கலாம் அல்லது 15 கிலோ கலோரி சத்தை வழங்கலாம். வாணி – நல்ல விளக்கம். அடுத்து, இன்று தேவையான பொருட்களைக் கூறுகின்றேன்.
ஆட்டின் பின்கால் இறைச்சி 200 கிராம் சோயா சாஸ் 5 கிராம் அவரை மாவு குழைவு 10 கிராம் ரப்பர் அரிசி 100 கிராம் மிளகாய் தூள் 3 கிராம் கொத்த மல்லி 5 கிராம் வெங்காயம் சிறிதளவு பூண்டு சிறிதளவு அரைக்கப்பட்ட இஞ்சி சிறிதளவு சமையல் எண்ணெய் 20 கிராம் சிறிய சிவப்பு மிளகாய் 5 கிராம்
வாணி – அடுத்து செய்முறை. முதலில், ஆட்டிறைச்சியை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதை 3 சென்டி மீட்டர் அளவுடைய பொடியாக நறுக்கவும். பிறகு, சோயா சாஸ், உப்பு, அவரை மாவு குழைவு, மிளகாய் தூள், அரைக்கப்பட்ட இஞ்சி ஆகியவற்றை இதனுடன் நன்றாக கலக்க வேண்டும். சுமார் 30 நிமிடமாக அப்படியே இருக்கவிட வேண்டும்.
க்ளீட்டஸ் – கொத்த மல்லி, சிறிய சிவப்பு மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றையும் சுத்தம் செய்யவும். பூண்டை சிறிய துண்டுகளாக நறுக்கவும். வேறு பொருட்களை 0.5 செண்டி மீட்டர் அளவுடைய பொடியாக நறுக்க வேண்டும். வாணி – ரப்பர் அரிசி வாணலியில் போட்டு, வதக்கவும். இதன் நிறம் கொஞ்சம் பொன் நிறமாகிய போது, இதை வெளியே எடுக்க வேண்டும். சூடு இறங்கிய பின், அரவை இயந்திரம் மூலம் இதனை நன்றாக மாவாக்க வேண்டும்.
க்ளீட்டஸ் – அரிசி மாவு, இறைச்சி ஆகியவற்றைச் சேர்க்கவும். இறைச்சி துண்டுகளின் இரு பக்கங்களிலும் அரிசி மாவைச் சேர்க்க வேண்டும். வாணி – ஆட்டிறைச்சி துண்டுகளை பெரிய சூட்டில் சுமார் 30 நிமிடமாக சூடுபடுத்த வேண்டும். க்ளீட்டஸ் – எண்ணெயை வாணலியில் ஊற்றி கொதிக்க விடுங்கள். வாணி – சூடுபடுத்தப்பட்ட ஆட்டிறைச்சியின் மீது கொத்த மல்லி, பூண்டு, வெங்காயம், மிளகாய் ஆகியவை இடைபெறும் கலவையைப் போட்டு, வேகவிட்ட எண்ணெயை ஊற்றவும்.
க்ளீட்டஸ் – அன்பு நேயர்களே, சுவையான ஆட்டிறைச்சி வறுவல் தயார். வாணி – இன்று தயாரித்த உணவு வகையில் அரவை மாவு குழைவு என்பது இடம்பெறுகின்றது. இது சீன சி சுவான் மாநிலத்தில் தனிச்சிறப்புடைய உணவு வகையாகும். பெரிய கடல் நண்டு சாஸ், அவரை மாவு குழைவு முதலியவற்றினால் தயாரிக்கப்பட்ட இந்த உணவு வகைக்கு சிறப்பான சுவை உண்டு. க்ளீட்டஸ் – நேயர்களே நீங்களும் வீட்டில் இந்த ஆட்டிறைச்சி உணவு வகையைத் தயாரித்து ருசிப்பார்க்கவும்.
|