உயிரினச் சுற்றுச்சூழல் நாகரிகத்தைக் கட்டிக்காத்து, திபெத் பீடபூமியிலுள்ள பசுமையான நீரையும் நீலமான வானையும் பாதுகாப்பது என்பது வருங்கால திபெத்தின் முக்கியமான பணிகளாகும் என்று சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியகத்தின் தலைவர் Zhang Yongze அண்மையில் தெரிவித்தார்.
சீனா, நீண்டகாலமாக, திபெத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. தற்போதைய ஒதுக்கீட்டுத் தொகை, 1000 கோடி யுவானைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டது. அவற்றில், இயற்கை மேய்ச்சல் நிலத்துக்கான பாதுகாப்பு, காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கான பாதுகாப்பு, மணற்காற்று, மண் அரிப்பு, நிலவியல் சீற்றம் ஆகியவற்றின் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, உயிரினச் சுற்றுச்சூழல் கண்காணிப்பு முதலிய 10க்கு மேற்பட்ட திட்டங்கள் உள்ளன என்று Zhang Yongze அறிமுகப்படுத்தினார்.
|