• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-20 10:47:10    
ஒருங்கிணைந்த வளர்ச்சியை முன்னேற்றி வரும் LANG FANG நகரம்

cri
பெய்ஜிங் மற்றும் தியன் ஜின் மாநகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள LANG FANG நகரம், புதிதாக வளர்ச்சி அடைந்த நகரமாகும். 2005ஆம் ஆண்டு தொடங்கி, இந்நகரம் பொது நிதிக் கொள்கையை கிராமப்புறத்துக்கு சாய்ந்து வைத்து, குடி நீர், மருத்துவ சிகிச்சை, சமூகக் காப்புறுதி உள்ளிட்ட விவசாயிகளின் அக்கறையுள்ள முக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, பொது மக்களின் நலனுக்கான திட்டப்பணியை மேற்கொண்டு வருகிறது. நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையிலான ஒருங்கிணைந்த வளர்ச்சி இதன் மூலம் முன்னேற்றப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில், LANG FANG நகரத்தின் AN CI பிரதேசத்திலுள்ள DONG DE SHENG கிராமத்தில் வாழும் 98 குடும்பங்கள், தலைமுறை தலைமுறையாக கிணற்றிலிருந்து உப்பு நீரை எடுத்து குடிக்கும் வரலாற்றை மாற்றின. கிராமம் முழுவதிலும் உள்ள அனைவரும் தூய்மையாக்கப்பட்ட குழாய் நீரை மகிழ்ச்சியுடன் பயன்படுத்தத் துவங்கினர். தூய்மையான நீரைக் குடித்து விட்டு, 81 வயதான முதியவர் XING ZHAN YING புன்னகையுடன் கூறியதாவது—


"சுவையாக உள்ளது. இந்த நீரைக் குடித்து, அனைவரும் உடலும் நலமாகியுள்ளது" என்றார் அவர்.
கிராமவாசிகள் பாதுகாப்பான நீரை நிரந்தரமாக குடிக்கச் செய்யும் வகையில், நீர் பயன்பாட்டு சங்கத்தை DONG DE SHENG கிராமம் உருவாக்கியது. கிராமவாசிகள் இச்சங்கத்துக்கு நீர் மற்றும் மின்சார பயன்பாட்டு கட்டணத்தைக் கட்ட, சாதனங்களின் இயல்பான இயக்கத்தையும் கிணற்றையும் பேணிகாப்பதற்கு இச்சங்கம் பொறுப்பேற்கிறது. இச்சங்கத்தின் தலைவர் XING LI TIAN கூறியதாவது—
"கிணற்றை செவ்வனே கட்டுப்படுத்தி, நீண்டகாலமாக பயன்படுத்த உத்தரவாதம் செய்வது என்பது, இச்சங்கத்தின் கடமை. இக்கிணற்றைத் தோண்டியது எளியானதல்ல. பல்வேறு நிலை அரசுகளின் ஆதரவுடன், பல்லாயிரம் யுவான்னை நமது கிராமம் முதலீடு செய்தது" என்றார் அவர்.


முன்னர், கிணறுகளின் ஆழம் போதுமான அளவில் இல்லாததால், LANG FANG நகரத்தின் தென் பகுதியிலுள்ள தாழ்வான பிரதேசத்திலும் வட பகுதியிலுள்ள மலைப் பிரதேசத்திலும் வாழும் விவசாயிகள் பலர், வினைவிய தனிமம் அதிகமாக உள்ள நீர் அல்லது கசப்பு உவர்ப்பு கலந்த நீரை குடித்தனர். இதனால் மஞ்சள் பல், எலும்புத் தேய்வு என நோய்வாய்ப்படும் விகிதம் அதிகமாக இருந்தது. 2005ஆம் ஆண்டின் இறுதிக்குள், விவசாயிகள் பாதுகாப்பான நீரைக் குடிப்பதற்கு உத்தரவாதம் செய்ய வேண்டும் என LANG FANG நகரம் முன்வைத்த பின், 7 கோடி யுவானுக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம், 256 கிராமங்களில் மொத்தம் 2 இலட்சத்து 10 ஆயிரம் மக்களின் குடி நீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.
குடி நீர் பிரச்சினையைத் தீர்ப்பதில் காணப்பட்ட மகிழ்ச்சி தரும் வெற்றியயைத் தவிர, 2005ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மருத்துவ சிகிச்சை பெறுவதிலான பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு, புதிய ரக கிராமப்புற கூட்டுறவு மருத்துவ சிகிச்சை பணியை LANG FANG நகரம் தொடங்கியது. விவசாயிகளின் விருப்பப்படி, செயல்பாட்டுக்கு ஏற்ற நடவடிக்கைகள் பலவற்றை வகுத்ததோடு, நிதி ஒதுக்கீட்டில் விவசாயிகளின் மருத்துவ சிகிச்சை கட்டணத்தை ஏற்கும் விகிதாசாரத்தையும் இந்நகரம் உறுதிப்படுத்தியது. இது விவசாயிகளின் வரவேற்பைப் பெற்றுள்ளது. DANG CHENG மாவட்டத்தின் ZHANG கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ZHANG JIN HUI கூறியதாவது—
"புதிய ரக கிராமப்புற கூட்டுறவு மருத்துவ சிகிச்சை முறைமை மூலம், மருத்துவ சிகிச்சை பெறுவதிலான சிரமம் நீக்கப்படுவது மட்டுமல்ல, ஒரு பகுதி கட்டணத்தையும் திரும்பப் பெற முடியும். மருத்துவ சிகிச்சை கட்டணம் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்றார் அவர்.
தொடர்பான நடவடிக்கைகளை செயல்படுத்தும் போக்கில், நகரிலும் கிராமங்களிலும் இன்னல் மிகுந்த பொது மக்கள் முன்னுரிமை கொள்கையை அனுபவிக்கச் செய்யும் பொருட்டு, வேறுபட்ட நிலையிலான மருத்துவ மனைகளை LANG FANG நகரம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம், சாதாரண நோயால் பீடிக்கப்பட்டால் கிராமத்துக்கு வெளியே போக வேண்டாம். அடிக்கடி வருகின்ற நோயால் பீடிக்கப்பட்டால், வட்டத்துக்கு வெளியே போக வேண்டாம். கடும் நோயால் பீடிக்கப்படால் மாவட்டத்துக்கு வெளியே போக வேண்டாம்.
அத்துடன், சிறு நகரங்களிலுள்ள மருத்துவ நிலையங்களின் கட்டுமானத்தையும் LANG FANG நகரம் வலுப்படுத்தி வருகிறது.


மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவது பற்றி குறிப்பிடுகையில், அமைப்பு முறை மற்றும் முறைமைகளின் உருவாக்கத்துக்கு LANG FANG நகராட்சி முக்கியத்துவம் தருகிறது என்று இந்நகராட்சித் தலைவர் WANG AI MIN பல முறை கூறியுள்ளார். ஏனென்றால், இவ்வாறு செய்தால்தான், மக்களுக்கு நன்மை தரும் நடவடிக்கையை நிரந்தரமாக மேற்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.