• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-20 08:47:43    
புகழுரை

cri
ஒரு நாள் பணக்காரன் ஒருவனும் ஏழை ஒருவனும் பேசிக்கொண்டிருந்தனர். பணக்காரன் ஏழையை பார்த்து
" என்னிடம் 100 பொற்காசுகள் உள்ளன. உனக்கு அதில் 20தை தருகிறேன். தந்தால் என்னை புகழ்ந்து பேசுவாயா?" என்று கேட்டான்.
அதற்கு ஏழை நீ 20 பொற்காசுகளை தருவதால் என்ன லாபம், நமது ஏற்றத்தாழ்வு குறையவா போகிறது? பிறகு எதற்கு உன்னை புகழ்வது" என்று கேட்டான்.
பணக்காரன், சரி ஒருவேளை நான் என்னிடம் ஒருக்கும் 100 பொற்காசுகளில் பாதியை உனக்கு தந்தால்? அப்போது நீ என்னை புகழுவாயா?" என்று கேட்டான்.
அதற்கு ஏழை நீயும் நானும்தான் சரி நிகராகி விடுவோமே? பிறகு எப்படி நான் உன்னை புகழ்வேன் என்று கூற, பணக்காரன் "சரி, என்னிடமுள்ள அனைத்து பொற்காசுகளையும் உனக்கே தந்து விடுகிறேன். அப்போதாவது என்னை புகழ்ந்து பேசுவாயா?" என்று கேட்டானாம். அதற்கு அந்த ஏழை புன்முறுவலுடன் " எனக்கே அனைத்து பொற்காசுகளும் சொந்தமாகிவிட்டால், உன்னை ஏன் நான் புகழவேண்டும்? அதற்கு தேவைதான் என்ன? என்றானாம்.