• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-20 14:10:05    
டென்னிஸ் தங்கம் பதக்கம்

cri
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் சாம்பியன் பட்டத்தை பெறுவது என்பது தமது முக்கிய இலக்குகளில் ஒன்றாகும். உலக டென்னிஸ் தரவரிசையில் மகளிர் பிரிவில் முதலிடத்திலுள்ள பெல்ஜியம் டென்னிஸ் வீராங்கனை Justine Henin உலகின் தலைசிறந்த விளையாட்டு வீராங்கனை விருதாக லாவ்ரியஸ் விருதைப் பெற்ற பின் இவ்வாறு தெரிவித்தார்.
18ம் நாள் ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் Henin தமது திட்டத்தை வெளியிட்டுள்ளார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டி மற்றும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு டென்னிஸ் போட்டியின் சாம்பியன் பட்டத்தை பெற தாம் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

இவர் 2004ம் ஆண்டு ஏதன்ஷ் ஒலிம்பிக் விளையாட்டு டென்னிஸ் போட்டியின் தங்கம் பதக்கத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
சீனாவுக்கு விளையாட்டில் திறமைசாலிகளைப் பயிற்றுவிப்பதனை நோக்கமாக கொண்டு, சீனர்கள் 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 28 வகை போட்டிகளின் தலைவராகிறனர் என்று பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழு விளையாட்டு பகுதியின் தலைவர் zhang ji long 19ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
வெளிநாட்டவர், 2000ம் ஆண்டு சிட்னி மற்றும் 2004ம் ஆண்டு Athens ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் ஆட்டங்களின் தலைவர்களில் பங்கெடுத்தனர். ஆனால், இந்நிலைமை, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மாறும் என்று அவர் கூறினார்.

12ம் நாள் வரை, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தன்னார்வ தொண்டர்களுக்காக பெயரை பதிவு செய்த மக்கள் எண்ணிக்கை, 9 இலட்சத்து 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இவ்வெண்ணிக்கை, கடந்த அனைத்து ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தன்னார்வ தொண்டர்களின் எண்ணிக்கையை தாண்டியுள்ளது.
15ம் நாள் பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவிலிருந்து இத்தகவல் பெறப்பட்டது. 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 2007ம் ஆண்டு ஜனவரி, மார்ச் ஆகிய திங்களிலும், பெய்ஜிங் மாநகர், ஒலிம்பிக் அமைப்புக் குழு பெய்ஜிங்குக்கு அப்பாலுள்ள பெருநிலப்பகுதியிலும், ஹாங்காங் மகௌ ஆகிய இடங்களிலும் தன்னார்வ தொண்டர்களை சேர்க்கின்ற பணி துவங்கியது.