
பழைய பைன், சைப்பிறஸ் மரங்கள் உடைய, துயிலும் புத்தர் ஆலயம், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்தது. அங்கு 5 மீட்டர் நீளமுள்ள துயிலும் புத்தர் சிலை ஒன்று இருக்கிறது. சிவப்பு அரக்குப் படுக்கையில் படுத்திருக்கும் அவரது ஒரு கை, தலையைத் தாங்க, மறு கை, உடல் மேல் உள்ளது. அதன் நிகர எடை குறைவு என்றாலும், அப்புத்தர் சிலையை வார்ப்பதற்கு 250 டன் செம்பு பயன்படுத்தப் பட்டது என்று பதிவேடுகள் கூறுகின்றன. வண்ண முலாம் பூசப்பட்ட புத்தரின் 12 சீடர்கள் அவரைச் சூழ் மரத்தின் கீழ் நின்று அவரது நோயை கவனிக்கின்றனர். இந்தப் பிரமாண்ட சிற்பத்திலிருந்து பழைய காலங்களில் வார்ப்புத் தொழில் நுட்பம் எந்த நிலையில் இருந்தது என்பதை ஒருவாறு ஊகிக்க முடியும்.
இப்புத்தர் ஆலயத்துக்குப் பின்னே, இளம் காதலர்கள் ஒதுங்கிக் கொள்ளும் ஓர் அமைதி மூலையாக, செரி பள்ளத்தாக்கு இருக்கிறது. இந்த இனிமையான இடத்தை, அருவிகள் ஓடும் பசு மரத் திரட்டலும் மூங்கில் தோப்புகளும் அழகு செய்கின்றன. பாறை வெடிப்புகளிலிருந்து பாயும் பளிங்கு போன்ற ஊற்றுகள், குளுமையும் உற்சாகமும் ஊட்டுகின்றன.
|