• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-21 16:13:02    
பொன்விழா காணும் பின்யின் முறை

cri
பொன்விழா காணும் பின்யின் முறை


மாண்டரின் சீன மொழியை மிக இலகுவாக கற்றுக்கொள்ள உருவாக்கப்பட்ட பின்யின் முறையின் முதல் பதிப்பு 1958 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் நாள் நடைபெற்ற முதல் தேசிய மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் தொடக்கப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு கல்வியறிவை வளர்ப்பதில் பயன்படுத்தப்பட்டது. தற்போது ஒரு பில்லியன் மக்கள் பின்யின் முறையை கற்றுக்கொண்டுள்ளதோடு சீன மொழி அறிவிலும், சர்வதேச தொடர்புகளிலும் அவர்களை முக்கியமான பங்கு வகிக்க செய்துள்ளது.
பின்யின் முறையிலான சீன ப்ரெய்லி, பார்வையற்றவர்களின் மொழி, அறிவு மற்றும் திறன்களை வளர்த்துள்ளது. Zhuang, Buyi, Hani, இனங்கள் உள்பட 12 சிறுபான்மை தேசிய இன குழுக்களின் லத்தீன் வடிவங்களிலான மொழியை பின்யின் முறைப்படி கற்றுக்கொள்ள சீன அரசு உதவியுள்ளது. Friendlies என்று பெயரிடப்பட்டு பின்னர் Fuwa என பெயர் மாற்றப்பட்ட 2008 பெய்சிங் ஒலிம்பிக் சின்னத்தின் பின்யின் மொழிபெயர்ப்பிலான Fuwa என்ற பெயரை தான் பலர் ஏற்புடையதாகவும், புரிந்து கொள்ளக்கூடியதாகவும் கூறியிருக்கின்றனர்.
பள்ளிகள், செய்தித்தாள்கள், வணிக சின்னங்களின் பெயர்கள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் விளம்பரங்களில் தரமான பின்யின் பயன்பாடு என்று பல்வேறு முயற்சிகளால் சீன அரசு பின்யின் முறையை பிரபல்லியப்படுத்தி வளர்த்தது. இவ்வாண்டு பெப்ரவரி 11 ஆம் நாள் பின்யின் முறை ஏற்றுக்கொள்ளப்பட்ட 50 வது அதாவது பொன்விழா ஆண்டாகும். இன்று பின்யின் முறை சீன மக்களின் வாழ்வோடு ஒன்றி போய்விட்டது என்றே சொல்லலாம்.

மனிதமே முதன்மை, எலிகளுக்கு இடமில்லை
சீனர்களுக்கு சந்திர நாள்காட்டியின் படி 12 மாதங்கள் பிராணிகளின் பெயரில் அமைந்துள்ளதை நாமறிவோம். அவை எலி, மாடு, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, கோழி, நாய் மற்றும் பன்றி ஆகியவையாகும். இந்த நாள்காட்டியில் எலி தான் முதலாவதாக வைக்கப்பட்டுள்ளது. புராணக்கதைகளின் படி சந்திர நாள்காட்டிக்கான வரிசையை நிர்ணயம் செய்ய சொர்க்கத்தின் பேரரசரான மஞ்சள் மணிக்கல் பேரரசரால் போட்டி வைக்கப்பட்டதாம். அவ்வாறு வைக்கப்பட்ட ஆற்றை கடக்கும் போட்டியில் எலி தான் முதலாவது இடம் பெற்றதாம். இந்த பிராணிகள் அனைத்தும் சீனாவிலுள்ள பல்வேறு இன மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் உள்ளன என்று கூறுகிறார்கள்.
எலி இத்தகைய முக்கியத்துவம் பெற்றிருந்து, இவ்வாண்டு எலி ஆண்டாக இருந்தபோதிலும், பெய்சிங் ஒலிம்பிக்கை முன்னிட்டு மாசுபாடற்ற சுற்றுச்சூழலை அமைக்கும் விதமாக எலிகளை அழிக்க போவதாக பெய்சிங் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பகுதிகள் மற்றும் பயிற்சி இடங்களின் ஆயிரம் மீட்டர் சுற்றுப்புற பகுதிகளில் எலி ஒழிப்பு பிரச்சாரம் 26 ஆம் நாளிலிருந்து செயல்படுத்தப் படவுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களின் தேவைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள், ஹோட்டல்கள், உணவகங்கள் ஆகியவற்றில் எலி ஒழிப்பு நடத்தப்படுவதோடு சாதாரணமாக எலிகள் காணப்படுகின்ற ஒலிம்பிக் போட்டிப் பகுதிகளை சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகள், நிலத்தடி குழாய் வழிகள், சந்தைகள், உணவு பதனிடும் பகுதிகள் மற்றும் இறைச்சிக்கான பறவைகள் வளர்க்கப்படும் பண்ணைகள் ஆகியவற்றிற்கும் மருந்துகள் வழங்கப்படவுள்ளன. இந்த பணிகளை பெய்சிங் சுகாதாரப் பணியாளர்கள் கண்காணிப்பதோடு, இதனை செய்ய தவறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது. மாசுபாடற்ற, சுகாதாரமான சூழ்நிலையை ஒலிம்பிக் போட்டிகளுக்கு வழங்கும் நோக்கிலான இச்செயல் மனித முதன்மை ஒலிம்பிக் என்ற இலக்கை முழுமையாக நிறைவேற்றும் திட்டமல்வா!


நவீன சவப்பெட்டி தயாரிப்பு
நவீனம், புத்தாக்கம், புதுமை என புதுமையாக சிந்தித்து செயல்படும் போக்கு எல்லா துறைகளிலும் நுழைந்து விட்டது. உயர்ந்தவர்கள் வித்தியாசமான செயல்களை செய்பவர்களல்ல. அவர்கள் வழக்கமான செயல்களை வித்தியாசமாக செய்து சிறப்பு பெற்றவர்கள் என்று கூறுவார்கள். தங்களது வழக்கமான சவப்பெட்டி செய்யும் தொழிலை புதுமையாக எப்படி செய்கிறார்கள் தெரியுமா? ஆப்பிரிக்காவின் கானாவில் அக்ரா என்னுமிடத்தில் தனித்தன்மைகளுடன் கூடிய, நுகர்வோர் விரும்பும் வடிவங்களில் சவப்பெட்டிகள் செய்து கொடுக்க தயாராக இருக்கின்றனர். ஆகாய விமானம், வெள்ளரிக்காய், தக்காளி, கடல் நண்டு, காலுறை, பாம்பு, இரண்டாம் உலகப்போர் துப்பாக்கி, வெள்ளை மெர்சிடஸ் பென்ஸ் சிற்றுந்து மற்றும் கோக் புட்டி போன்ற வடிவமைப்புகள் சில எடுத்துக்காட்டுகள்.
இத்தகைய புத்தாக்கம் ஆட்டா ஓவியோ என்பவர் தனது பாட்டி விமானத்தில் பயணம் செய்யவில்லை என்பதால் அவர் இறந்தபோது ஆகாய விமான வடிவிலான சவப்பெட்டியில் அவரை அடக்கம் செய்ய விரும்பியதிலிருந்து வளர தொடங்கியதாம். "மீனவருக்கு கடல் நண்டு, காய்கறி கடைக்காரருக்கு வெள்ளரிக்காய், விமானத்துறையில் பணியாற்றியிருந்தால் ஆகாய விமானம் என்று ஒருவரின் தொழில் துறையை வைத்து சவப்பெட்டியை வடிவமைக்கலாம்" என்று அதன் மேலாளர் இம்மானுவேல் தோக்கு தெரிவிக்கிறார்.


வாழ்க வளமுடன் அல்ல, வாழ்க நலமுடன்
வாழ்க வளமுடன் என்று வாழ்த்துவது வழக்கம். நிறைவான செல்வங்களோடு மகிழ்ச்சியாக வாழத்தான் இவ்வாறு வாழ்த்து சொல்லுகிறார்கள். செல்வம் என்ற சொல் வாழ்வின் பல்வகை வளங்களை குறித்தாலும் பணம் அல்லது உடைமையாக கொள்ளும் செல்வங்களை தான் அதிகமாக பொருள் கொள்வதாக புரிந்து கொள்ளப்படுகிறது. அண்மையில் பிரிட்டன் தேசிய குலுக்கலில் 38 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை Heml Hempstead இல் உள்ள Herts என்ற இடத்தில் வாழ்கின்ற 58 வயதான ஸ்டீபன் ஸ்மித் என்பவருக்கு கிடைத்துள்ளது. அவர் மகிழ்ச்சி தான் அடைந்திருக்க வேண்டும் அப்படித்தானே. ஆனால், கல்லறைகளில் கடைகள் இல்லை. தனது மனைவி ஐடாவுடன் அதிக நாட்கள் வாழ முடியுமென்றால் இந்த பணத்தை எல்லாம் விட்டுவிட தான் தயாராக இருப்பதாக ஸ்மித் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறுவதற்கு காரணம் என்ன தெரியுமா? அவருடைய இதய தமனி குழாய் வீக்கம் பெற்றுள்ளதால் அது குறிப்பிட்ட அளவு வளரும் வரை அறுவை சிகிச்சைக்காக காத்திருக்க மருத்துவர்கள் கூறிவிட்டனர். இல்லாவிட்டால் அறுவை சிகிச்சையின் போது அது வெடித்துவிட வாய்ப்பு உள்ளததாம். "நான் பிழைக்க பத்தில் ஒரு விழுக்காடு தான் வாய்ப்பு உள்ளது. இவ்வனுபவம் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வெடிகுண்டை கட்டிக்கொண்டு நடப்பதுபோல் உள்ளது" என்கிறார் ஸ்மித். இவரிடம் வாழ்க வளமுடன் என்பதை விட வாழ்க நலமுடன் என்பது தான் பொருத்தமாக இருக்கும் அல்லவா!