• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-21 16:17:27    
சௌசினின் மது தயாரிப்பு துறை

cri
தமிழன்பன்.........நிலா விழா நாளில் மஞ்சள் மது குடிக்கும் போது சௌசின் மது பற்றி நினைவு கூர்வது இயல்பு.
கலை......இது வட சீனாவிலும் தென் சீனாவிலும் வாழ்கின்ற மக்களின் பொது உணர்வாகும்.
தமிழன்பன்.......கலை. ஒரு கேள்வி? மஞ்சள் மதுவில் பல மது வகைகள் உள்ளன. இவற்றில் மிக புகழ் பெற்றது சௌசின் மது அல்லது சௌசின் மஞ்சள் மது அப்படிதானே.
கலை......ஆமாம். சௌசின் மது தயாரிப்பு வரலாறு 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு கொண்டது.
தமிழன்பன்.......அப்போது சீனாவில் எந்த வம்சகால ஆட்சி நடைபெற்றது?
கலை......அப்போது சீனா நான்சுன் வம்சகாலத்தில் இருந்தது. சௌசின், நின்-சௌ ning chao புல்வெளியின் மையத்தில் அமைந்தது. சௌசின் வளர்ச்சி சௌசின் மது தயாரிப்பு துறையின் வளர்ச்சியுடன் இணைந்தது.
தமிழன்பன்.......அப்படியிருந்தால் சௌசின் இடத்தில் இந்த மதுவுடன் தொடர்புடைய பண்பாடு உள்ளது.
கலை........ஆமாம். அபோது சௌசின் நான்சு வம்சகாலத்தின் மஞ்சள் மது தயாரிப்பு ஊராக அழைக்கப்பட்டது. அங்கே உள்ள இடங்களுக்கு மதுவுடன் கூடிய பெயர் சூடப்பட்டது.
தமிழன்பன்.......இது பற்றி சற்று விபரமாகவே எடுத்து கூறுங்கள்.
கலை......சௌசின் உள்ளூர் உச்சரிப்புடன் இணைக்கப்பட்ட இடங்களில் பத்து பாலங்களுக்கு மதுவுடன் தொடர்புடைய பெயர் சூடப்பட்டது.


தமிழன்பன்......இந்த பத்து பாலங்களின் பெயர்களை பற்றி கொஞ்சம் அதிகமாக குறிப்பிடலாமா?
கலை.....மகிழ்ச்சி. சௌசின் உள்ளூர் மொழியின் உச்சரிப்புக்கு இணங்க, வளர்ச்சி மற்றும் செழுமையுடன் தொடர்பு உடையதாகும்.. சீன மொழியில் பாஃ என்றால் நல்ல வியாபாரம் செய்வது என்று பொருள்படுகின்றது.
தமிழன்பன்.......அப்படியா? அப்போது பாலங்களின் பெயர் அனைத்தும் பாஃவுடன் தொடர்புடையது.
கலை.....ஆமாம். மது தயாரிப்பு வளர்ச்சி அப்போது மிக விறு விறுப்பானது. மது தயாரிப்பு மற்றும் விற்பனை முறை அறிவியல் ரீதியில் வைக்கப்பட்டது.
தமிழன்பன்.......சிறந்த நிர்வாகத்தில் இருந்ததால் இந்த துறை வளர்ச்சியடைந்தது அப்படிதானே.
கலை......ஆமாம். அப்போது சௌசின் நகரில் மது தயாரிப்புக்கு தேவையான தானிய கிடங்குகள் ஒரே இடத்தில் கட்டியமைக்கப்பட்டன. மது தயாரிப்பு இடமும், வாங்கி மற்றும் விற்பனை செய்முறையும் தனித்தனியாக பிரித்து நிர்வாகிக்கப்பட்டன. இந்த நிர்வாகத்தை வலுப்படுத்தும் வகையில் உள்ளூர் அரசும் மது விற்பனை நிர்வாகமும், சிற்றபான நிர்வாக வாரியத்தை நிறுவின.


தமிழன்பன்.......அப்போதைய நிர்வாக வாரியத்தின் கடப்பாடு என்ன?
கலை......வரி வசூலிப்பு மட்டுமல்லாது, மதுவின் தரத்தை உத்தரவாதம் செய்யும் வகையில் மதுவின் சுவையை ஆய்ந்து உறுதி செய்யும் அதிகாரி நியமிக்கப்பட்டார். அவரின் கடமை தயாரிக்கப்பட்ட மதுவை சுவைத்து ஆய்ந்தளிவதாகும். நல்ல தரமுடைய மதுவென அவரால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் தான் விற்பனை சந்தையில் அது அனுப்பப்படலாம்.
தமிழன்பன்........பிரமாதம். 2500 ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு அறிவியல் ரீதியாக கண்டிப்பான முறையில் மது தயாரிப்பு முறை செயல்ப்படுத்தப்பட்டுள்ளது. சௌசின் மது வகைகள் இந்த அளவு வளர்வதற்கு உறுதியான அடிப்படை காரணம் இதுதானே.
கலை......ஆமாம். அப்போது முதல் மது தயாரிப்பு துறையில் உற்பத்தி, விற்பனை இரண்டும் கண்டிப்பான முறையில் பிரிக்கப்பட்டு நிர்வாகிப்பட்டமை சீன முதியோர் வியாபாரம் நடத்துவதில் காட்டிய விவேகமாகும்.
தமிழன்பன்.......ஆமாம். எந்தவாரு துறைக்கும் சிறந்த நிர்வாகம் தேவை. இஅது இல்லாவிட்டால் அதன் துறையை வளர்ச்சியடைய செய்ய முடியாது.
கலை.......ஆமாம். சௌசின் மது இவ்வளவு வளர்ந்த பின்னர் சாதாரண மதுவுக்கு பதிலாக உடல் ஆரோக்கியதற்காக மக்கள் இந்த மதுவை குடிக்கிறார்கள்.


தமிழன்பன்........ஆகவே சௌசின் மது 2500 ஆண்டுகளாக வளர்ந்து ஆயுளை நீட்டிக்கும் மதுவாக இன்றும் அதிக மக்களால் அருந்தப்படுகின்றது.
கலை.....அனைவரும் நாள்தோறும் சிறிய கோப்பை அளவிலான சொசின் மது குடித்தால் உடலுக்கு நன்மை தரும்.
தமிழன்பன்.......அளவுக்கு மீறி குடித்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது குறிப்பிடப்படவேண்டி விடயம்.
கலை.......நண்பர்களே, நிலா விழா, அதனுடன் தொடர்புடைய மஞ்சள் மது சௌசின் மது ஆகியவை பற்றி விளக்கி கூறினோம்.


தமிழன்பன்.......சீனா பற்றியும் இதர விடயங்கள் பற்றியும் கூடுதலாக அறிந்து கொள்ள வேண்டுமாயின் எங்களிடம் கேள்விகள் எழும்புங்கள்.
கலை......நாங்கள் முடிந்த அளவில் உங்களுக்கு பதில் அளிப்போம்.
தமிழன்பன்.......எங்கள் பணிக்கு ஆதரவளிப்பதற்கு மிக்க நன்றி.