அடுத்து, "துணி துவைக்கும் மங்கை" என்னும் பாடலைக் கேட்டு மகிழுங்கள். Gui Zhou மாநிலத்தில் பரவலாகி வரும் Ge Lao இனப் பாடல் இதுவாகும். Ge Lao இனத்தின் மக்கள் தொகை குறைவு. ஆனால், இவ்வினத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் பாடுவதை விரும்புகின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலும் பாடல் வரிகள் கொண்ட கையெழுத்து பிரதிகள் உண்டு. ஒவ்வொரு கிராமத்திலும் தலைசிறந்த பாடகர்கள் இருக்கின்றனர். நதிக்கரையில், விளையாடும் மங்கை ஒருத்தியும், இளைஞர் ஒருவரும் காதலிப்பது இப்பாடலில் வர்ணிக்கப்படுகின்றது.
|