• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-22 13:03:24    
உருமுச்சி நகரில், சிறுபான்மை தேசிய இன மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குதல்

cri
வட மேற்கு சீனாவின் சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில், மிகப் பல சிறுபான்மை தேசிய இனங்கள் வாழ்கின்றன. தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் உருமுச்சியில் மட்டும் 46 சிறுபான்மை தேசிய இனங்கள் வாழ்கின்றன. பல காரணங்களால், அவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் பற்றாக்குறையான நிலை காணப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, இப்பிரச்சினையைத் தீர்க்க, உருமுச்சி நகர அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க பயன் பெறப்பட்டுள்ளது.
உருமுச்சி நகர அரசின் நேரடி ஆட்சியின் கீழுள்ள Tian Shan பிரதேசத்தில் வாழ்கின்ற சிறுபான்மை தேசிய இன மக்கள் தொகை, இந்நகரின் மொத்த சிறுபான்மை தேசிய இன மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியாகும். மொழித் தடை உள்ளிட்ட காரணிகளால், இச்சிறுபான்மை தேசிய இன மக்கள் வேலை வாய்ப்பைப் பெறுவது கடினமாகவுள்ளது. Tian Shan பிரதேசத்தின் வேலை வாய்ப்பு மற்றும் மறு வேலை வாய்ப்பு வழங்குதல் தொடர்பான நிர்வாக மற்றும் சேவை மையத்தின் தலைவர் Wang Long கூறியதாவது:


"ஹான் இனத்தவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சிறுபான்மை தேசிய இன மக்கள் வேலை வாய்ப்பு பெறுவது மேலும் கடினமாக இருக்கின்றது. ஏனெனில், ஒரு புறம், அவர்களுக்கு பிறருடன் தொடர்பு கொள்ளும் போது மொழி ரீதியிலான தடை ஏற்பட்டுள்ளது. தற்போது, உருமுச்சி நகரின் பொருளாதார வளர்ச்சி நிலைமைக்கிணங்க, ஹான், உய்கூர், கசாக் உள்ளிட்ட தேசிய இனங்களுக்கென சீன மொழி பொதுவாக பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், அவர்களில் பெரும்பாலானோர், தத்தமது தேசிய இன மொழி மட்டுமே பேச முடியும். மறு புறம், அவர்களில் ஒரு பகுதியினர், கல்வி பெறவில்லை" என்றார், அவர்.
இதனால், Tian Shan பிரதேச அரசின் தொடர்புடைய வாரியம், சிறுபான்மை தேசிய இன மக்களுக்கு வேலை வாய்ப்பை சாதகமாக வழங்குவதோடு, தொழில் திறன் பயிற்சியை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் தந்துள்ளது. பல்வேறு தேசிய இனங்களின் வெவ்வேறான நிலைமைக்கிணங்க, வெவ்வேறான துறைகளில், இத்தேசிய இனத்தவர்களுக்குப் பயிற்சி வழங்கியுள்ளது. புள்ளி விபரங்களின் படி, இந்நடவடிக்கை மூலம், கடந்த ஆண்டின் முதல் 11 திங்களில் மட்டும் சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரத்து 100 பேர் வேலை வாய்ப்பு பெற்றனர். 2005, 2006 ஆகிய இரண்டு ஆண்டுகளில் இருந்ததை விட, வேலை வாய்ப்பு பெறும் விகிதம், 20-30 விழுக்காடு அதிகரித்துள்ளது. அவர்களில், சுமார் 1900 பேர், தொழில் திறன் பயிற்சி பெற்றப் பிறகு, வேலை வாய்ப்பு பெற்றனர். உய்கூர் இன மங்கை Hasiyeti அவர்களில் ஒருவராவார்.

 
Hasiyeti, Tian Shan பிரதேசத்தில் வாழ்கின்றார். ஜூனியர் பள்ளியிலிருந்து பட்டம் பெற்ற பிந்திய சில ஆண்டுகளில், அவருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வில்லை. பின்னர், ஆர்வத்தின் பேரில், 6 திங்கள் நீடித்த ஆடைத் தையல் தொடர்பான பயிற்சி வகுப்பில் அவர் சேர்ந்தார். கடந்த ஆண்டின் துவக்கத்தில், தொழிலாளர் நலன் மற்றும் சமூக காப்புறுதி அலுவலகத்தின் உதவியுடன், ஆடைத் தையல் பணி அவருக்கு வழங்கப்பட்டது. இப்பணியில் ஈடுபட்டப் பின், அவரைப் பொறுத்த வரை, அரசின் உதவித்தொகையை சார்ந்திருக்கத் தேவையில்லை. தற்போது, திங்களுக்கு 500 யுவானை தாம் ஈட்டலாம் என்று அவர் கூறினார்.
தவிர, பல்வேறு தேசிய இனங்களின் வெவ்வேறான நிலைமைக்கிணங்க, பயிற்சி மையம், வெவ்வேறான வழிமுறையை மேற்கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, கசாக் இன மக்கள் வாழும் Wu La Bo கிராமத்திலும், Wu La Bo மேய்ச்சல் நிலங்களிலும், Tian Shan பிரதேச அரசு, "Nong Jia Le" என்னும் சுற்றுலா பயிற்சியை வழங்கியுள்ளது. "Nong Jia Le" என்பது, பிரதேசத்தின் தனித்தன்மைக்கிணங்க, பயணிகளை ஈர்க்கும் குடும்பச் சுற்றுலா வடிவமாகும். Tian Shan பிரதேச வேலை வாய்ப்பு மற்றும் மறு வேலை வாய்ப்பு வழங்குதல் தொடர்பான நிர்வாக மற்றும் சேவை மையத்தின் தலைவர் Wang Long கூறியதாவது:


"கசாக் இன மக்கள் வாழும் பிரதேசத்தின் தனித்தன்மையினால், இத்தேசிய இன மக்கள் குடும்பச் சுற்றுலா நடத்தலாம். பயிற்சி வழங்கும் பள்ளியுடன் தொடர்பு கொண்டோம். இப்பள்ளியின் ஆசிரியர்கள், இத்தேசிய இன மக்கள் வாழும் பிரதேசத்துக்குச் சென்று, அவர்களை பயிற்றுவித்தனர். குடும்பச் சுற்றுலா நடத்த, சமையல், நச்சு நீக்குதல் பற்றிய அறிவு, சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு பற்றிய அறிவு ஆகியவற்றைக் கிரகித்துக்கொள்ள வேண்டும்" என்றார், அவர்.
Tian Shan பிரதேச அரசு, பத்துக்கு மேலான தொழில் திறன் பயிற்சிகளை வழங்கியுள்ளது. சமையல், ஆடைத் தையல் ஆகிய வகுப்புகளைத் தவிர, சந்தை தேவைக்கிணங்க, ஓட்டுநர் பயிற்சி, கணிணி, கணக்கிடுதல் தொடர்பான பல வகுப்புகளைத் திறந்து வைத்துள்ளது.
பயிற்சி நிறைவடைந்த பிந்திய மூன்று திங்களுக்குள், பயிற்சி அளிக்கப்பட்டவருக்கு குடியிருப்புப் பிரதேச அமைப்புகள் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வேலை வாய்ப்பு மற்றும் மறு வேலை வாய்ப்பு வழங்குதல் தொடர்பான நிர்வாக மற்றும் சேவை மையத்தின் தலைவர் Wang Long தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:


"தத்தமது விருப்பம் மற்றும் ஆர்வத்துக்கிணங்க, பயிற்சி வகுப்புகளில் தொடர்புடைய தொழில் திறனைக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு ஏற்பாடு செய்கின்றோம். பணியை நாடுவதற்கான பதிவு அட்டையை அவர்கள் பயன்படு்த்தி, ஒரு பகுதி கட்டண விலக்கு பெறலாம். வகுப்புக்கு பின், குடியிருப்புப் பிரதேச அமைப்புகள் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பரிந்துரை செய்கின்றன" என்றார், அவர்.
தவிர, உருமுச்சி நகர தொழிலாளர் நலன் மற்றும் சமூகக் காப்புறுதி அலுவலகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, சிறுபான்மை தேசிய இன மக்களுக்கு உதவி அளித்துள்ளது. எடுத்துக்காட்டாக, புதிய பணிகளை உருவாக்கி, குறிப்பிட்ட விகிதாசாரத்துடன் புதிய பணிகளை சிறுபான்மை தேசிய இனத்தவர்களுக்கு இந்த அலுவலகம் வழங்குகிறது. இவ்வலுவலகத்தின் தலைவர் Zhu Wen Zhi அம்மையார் கூறியதாவது:

"சிறுபான்மை தேசிய இனப் பொருளாதாரத்தை வளர்ப்பது, சிறுபான்மை தேசிய இனங்களின் வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கான மிக நேரடியான வழிமுறையாகும். சிறுபான்மை தேசிய இனப் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப, வெளியூர் பயணிகளை ஈர்க்கும் சுற்றுலா தலங்களிலும், கடைவீதி போன்ற நுகர்வு இடங்களிலும், சிறுபான்மை தேசிய இன மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். அதிக பொருளாதாரப் பயனை ஏற்படுத்துவதோடு, இந்நகரில் உள்ள சிறுபான்மை தேசிய இன உழைப்பாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை இது வழங்கியுள்ளது" என்றார், அவர்.
இந்நடவடிக்கைகளின் மூலம், 2001ஆம் ஆண்டு முதல், கடந்த ஆண்டின் நவம்பர் திங்கள் இறுதி வரை, உருமுச்சி நகரில், சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்த சுமார் 72 ஆயிரம் பேர், வேலை பெற்றனர். இந்நகரில் வேலை வாய்ப்பு பெறுபவரில், அவர்கள் 23 விழுக்காடு வகிக்கின்றனர். உருமுச்சி நகர அரசின் இந்த கொள்கைகள், சிறுபான்மை தேசிய இனத்தைச் சேர்ந்த வேலையற்ற மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன.