இன்று, ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் தங்க பதக்கங்களை பெற்றவருக்கு பரிசு அளிக்கும் பெண்மணி ஒருவரை அறிமுகப்படு்த்துக்கிறோம். பெய்சிங்கின் Changping தொழில் பயிற்சி பள்ளியின் ஒரு அறையில், 40 இளைய உயிராற்றலுடன் கூடிய சிறந்த சிகையலங்கார பாணியும் மிகமான முகப்பூச்சும் கொண்ட பெண்கள் நடந்து செல்கின்றனர். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான. உபசரிப்பு பெண்களுக்கான பயிற்சியிலும், தேர்விலும் கலந்துகொள்ள விரும்பும் பெண்களை பொறுத்த வரை, இது அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு குறிப்பிடத்தக்க பயிற்சி வகுப்பாகும். இது உடல் பாவனை பயிற்சியாகும்.
17வயதான சாங் மியௌமியௌ, அவர்களில் ஒருவராவார். தனது வயதை ஒத்த மற்ற பெண்களை போல, அவருக்கு சிரியும் பாடல்களை பாடுவதும் மிகவும் பிடிக்கும். ஆனால், தன்வயதான பெண்களை காட்டிலும் அவர் வேறுபட்டவர். அவருடைய மனதில் 2008ம் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பற்றிய ஒரு கனவு இருக்கிறது. அவர் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான உபசரிப்பு பெண் ஒருவராக மாற விரும்புகிறார். Changping தொழில் பயிற்சி பளளியில், அவர் விமான சேவை என்ற சிறப்புத்துறையை கற்றுக்கொள்கிறார். அவர் போல பெரும்பாலான பெண்கள்,கல்வி முடித்த பின் பல்வேறு விமான கூட்டு நிறுவனங்களில் நுழைந்து விமான பணிப்பெண்களாக மாறுகின்றனர். ஆனால், 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியால், இவர்கள் புதிய ஒரு வாய்ப்பை பெற்று
ள்ளனர். அதாவது, ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கென் சில உபசரிப்பு பெண்கள், அவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். 2006ம் ஆண்டின் குளிர்காலத்தில் இத்தகவல் கிடைத்ததுடன், ஒலிம்பிக் உபசரிப்பு பெண்களில் ஒருவராக மாற வேண்டும் என்று சாங் மியௌமியௌ தனக்குள் உறுதி பூண்டார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் தங்க பதக்கம் பொறுபவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என்பது அவரது கனவும் விருப்பமும்.. கடந்த ஆண்டின் துவக்கம் முதல், அவர் தொடர்புடைய கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். உடல் பாவணை பயிற்சி பற்றி பேசுகையில், அவர் கூறியதாவது உண்மையாக, அனைத்து செயல்களும் சாதாரணமாகுவே பார்க்கப்படுகின்றன. ஆனால், அவற்றை நன்றாக செய்வது என்பது மிகவும் கடினமானது. நாம் பலமுறை பயிற்சி செய்து இறுதியில் பழக்கிக்கொண்டுள்ளோம் என்றார் அவர்.
இது வரை, ஒரு ஆண்டுக்கு மேலாக அவர் ஒலிம்பிக் உபசரிப்பு பயிற்சியை பெற்று வருகிறார். துவக்கத்தில் பெற்றோரை பிரிந்திருப்பதால் அழுத சிறிய பெண் குழந்தையாக இருந்த மியௌமியௌ,இப்போது அப்படி இல்லை ஒலிம்பிக் உபசரிப்பு பெண்கள் குறித்து, அவர் சொந்த புரிந்துணர்வை கொள்கிறார், பலரின் கருத்தில், ஒலிம்பிக் உபசரிப்பு பெண்கள், அழகிகள் தான். ஆனால், அழகிய வெளிப்புறத்தோற்றம், முக்கியம் அல்ல. உபசரிப்பு பெண்களை பொறுத்த வரை, அழகு உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் முழுமையாக காணப்பட வேண்டு்ம். நல் பண்பு தன்னம்பிக்கை ஆகியவற்றின் மூலம், தனக்கு அருகிலுள்ள மக்கள் மீது செல்வாக்கு ஏற்படுத்த முடியும் என்று மியௌமியௌ கருதினார்.
தொண்டர்களின் புன்னகை பெய்சிங்கின் தலைசிறந்த அட்டை என்பது, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான தொண்டர்களின் வாசகமாகும். ஆனால், இந்த எளிதான புன்னகைக்கென, மியௌமியௌ ஆயிரகணக்கான முறை பயிற்சி செய்துள்ளார். புன்னகை செய்யும் போது, 8 பற்கள் காணப்பட்டு, வாயின் இருபக்க மூனையும், மேல் நோக்கி செல்ல வேண்டும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், ஆசிரியர்கள், எமது புன்னகையை பார்த்து திருத்தங்களை சொல்வார்கள். படிப்படியாக , எங்களுக்கு சுய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மியௌமியௌவை பொறுத்தவரை இப்படி தான். அவர், இப்போது முன்பை விட, மிக சுறுசுறுப்பாக ஆங்கில மொழியை கற்றுக்கொள்கிறார். ஒரு தரமான ஒலிம்பிக் உபசரிப்பு பெண்ணாக மாறும் வகையில், மியௌமியௌ கடந்த ஆண்டின் கோடைக்கால விடுமுறையை கைவிட்டு, சொந்த செலவில் இரண்டு திங்கள் காலம்
ஆங்கில மொழியை கற்றுக்கொண்டுள்ளார். கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற அதிர்ஷிடம் பெய்சிங் என்ற தேர்வு போட்டியின் போது, அவருடைய ஆங்கில மொழியில் தெளிவான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இது, அன்னிய விளையாட்டு போட்டி வீரர்களுக்கு சேவை வழங்கும் போது, பெரிய பங்காற்றும். ஒலிம்பிக் உபசரிப்புபெண்ணாக மாற விரும்பியதால், அவருக்கு ஏந்தாவது பெரிய மேம்பாடு இருக்கிறதா என்று நாம் அவரிடம் கேட்டோம். அவர் இனிய குரலில் கூறியதாவது பொறுமை என்னுடைய மேம்பாடாகும் என்று அவர் பதிலளித்தார். இவ்வாண்டு வசந்த காலத்தில், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான உபசரிப்பு பெண்கள் தேர்வுப் பணி அடிப்படையாக நிறைவேற்றப்பட வேண்டும். மியௌமியௌ, தமது கனவை நிறைவேற்றுவாரா இல்லையா என்பது பற்றி நாம் கவனிக்கிறோம். ஆனால், அவர் தேர்தெடுக்கப்படுமா இல்லையா என்பது, மிக முக்கியமானது இல்லை என்றும் இப்பயிற்சியின் மூலமான அனுபவம், தனது மனதில் ஆழப்பதிந்திருக்கும் எளிதில் நீங்காது என்று மியௌமியௌ கூறினார். இறுதியாக, அவருடைய இனிய கனவு உண்மையாக மாற வாழ்த்துத் தெரிவிக்கிறோம்.
|