• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-22 09:47:36    
லாவ்ரியஸ் விருது

cri
உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு லாவ்ரியஸ் விருது வழங்கப்படும் நிகழ்ச்சி 18ம் நாள் ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது. ஸ்விட்சர்லாந்தின் புகழ் பெற்ற டென்னிஸ் வீரர் Roger Federer 4வது முறையாக 2007ம் ஆண்டுக்கான தலைசிறந்த வீரர் விருதைப் பெற்றார். உலக புகழ் பெற்ற டென்னிஸ் வீராங்கனை Justine Henin 2007ம் ஆண்டுக்கான தலைசிறந்த வீராங்கனை விருதைப் பெற்றார். இவ்வாண்டின் லாவ்ரியஸ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் டென்னிஸ் விளையாட்டு மகத்தான இடம் பெற்றது.
தவிர, பிரிட்டன் ரக்ஃபி அணி 2007ம் ஆண்டுக்கான தலைசிறந்தக் குழுவுக்கான விருதைப் பெற்றுள்ளது.
பிரிட்டன், உக்ரைன், கனடா, அமெரிக்கா முதலிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் வீராங்கனைகளும் இதர 7 விருதுகளைப் பெற்றுள்ளனர் என்று அறியப்படுகின்றது.
உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் விருதான லாவ்ரியஸ் விருது பன்நோக்க விளையாட்டு விருதாகும். பல்வேறு விளையாட்டு போட்டிகளில், தலைசிறந்த சாதனைகளை பெற்ற வீரர்களும் வீராங்கனைகளும் இதன் மூலம் புகழ்ந்து போற்றப்படுகின்றனர்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை. புகழ் பெற்ற தடகள வீரர் Edwin Moses உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு லாவ்ரியஸ் விருது வழங்கப்படும் முன் இவ்வாறு தெரிவித்தார்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் அரசியலுடன் சம்பந்தப்படுத்த முடியாது. வீரர்கள் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ளும் நோக்கம் விளையாட்டாகும் என்று Moses கூறினார்.
உலகத் தரவரிசையில் மகளிர் பிரிவில் முதலிடத்திலுள்ள hymning, புகழ் பெற்ற தடகள வீரர் Boulter, ஐரோப்பிய ஒன்றியத்தின் நடப்புத் தலைவர் பதவிவகிக்கும் ஸ்லோவாக்கியாவின் விளையாட்டு ஆணையத்தின் தலைவர் Milan zver, பிரிட்டன் ஒலிம்பிக் விவகார அமைச்சர் tessa Jowell ஆகியோர் அண்மையில் விளையாட்டை அரசியல் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
திட்டப்படி, 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் மரத்தான் ஓட்டப்போட்டி பெய்சிங்கில் நடைபெறும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு அமைப்புக் குழுவின் விளையாட்டு பிரிவின் துணைத் தலைவர் Liu Wenbin வானிலை மற்றும் காற்று மாசுபாடு காரணமாக பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் மரத்தான் ஓட்டப்போட்டி இதர நகரில் நடைபெறுவது பற்றிய செய்தி குறித்து 19ம் நாள் இவ்வாறு தெரிவித்தார்.
சீனாவுக்கு விளையாட்டில் திறமைசாலிகளைப் பயிற்றுவிப்பதனை நோக்கமாக கொண்டு, சீனர்கள் 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 28 வகை போட்டிகளின் தலைவராகிறனர் என்று பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழு விளையாட்டு பகுதியின் தலைவர் zhang ji long 19ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
வெளிநாட்டவர், 2000ம் ஆண்டு சிட்னி மற்றும் 2004ம் ஆண்டு Athens ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் ஆட்டங்களின் தலைவர்களில் பங்கெடுத்தனர். ஆனால், இந்நிலைமை, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மாறும் என்று அவர் கூறினார்.