• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-25 09:17:15    
தொல் பொருட்களின் பாதுகாப்பு பணியில் சீனா பெற்றுள்ள கனிகள்

cri

2000ம் ஆண்டு முதல், பெய்ஜிங் மாநகரத்திலான அனைத்து நிலை தொல் பொருட்களும் இம்மாநகரத்தால் சீர்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 2002ம் ஆண்டு, பெய்ஜிங்கின் பழைய பகுதியில் 25 ஆண்டுகால வரலாற்றுப் பண்பாட்டு மண்டலத்தின் பாதுகாப்பு குறித்த விதிகளையும், புகழ் பெற்ற பெய்ஜிங் வரலாற்றுப் பண்பாட்டு நகரின் பாதுகாப்பு பற்றிய விதிகளையும் பெய்ஜிங் மாநகரம் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதற்குப் பின், நூற்றுக்கணக்கான தொன்மை வாய்ந்த கட்டிடங்களை பெய்ஜிங் சீரமைத்தது. 2003ம் ஆண்டு முதல், குறிப்பிடத்தக்க சாதனைகள் பெறப்பட்டன. இதற்குப் பின், 5 ஆண்டுகாலத்துக்கான மனித முதன்மை ஒலிம்பிக் தொல் பொருட்களின் பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், பெய்ஜிங் மாநகரம் 60 கோடி யுவான் ஒதுக்கீடு செய்தது. இதன் மூலம், கன்ஃபியூசியஸ் கோயில் உள்ளிட்ட பல பழைய வாயில் கோபுரங்கள், கோயில்கள், அரசகால கட்டிடங்கள் முதலியவை சீரமைக்கப்பட்டுள்ளன.

கன்ஃபியூசியஸ் கோயில் முதலிய பழைய கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டப் பின், பொது மக்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளன. சீனப் பண்டைகாலக் கல்வி மற்றும் கல்வியியலின் ஆராய்ச்சி வரலாற்றை பொது மக்கள் அறிந்துகொள்வதற்கு இது துணை புரியும் என்று பெய்ஜிங் மாநகரத்தின் தொல் பொருள் பணியகத்தின் அதிகாரி wangyuwei தெரிவித்தார்.

இது வரை, 8 ஆண்டுகாலம் நீடித்த தொல் பொருட்களின் பாதுகாப்புப் பணி அடிப்படையில் நிறைவேறியுள்ளது. ஆனால், இது ஒரு காலக்கட்டப் பணி மட்டுமே. இனிமேல், பண்டைக்கால நகரமாக விளங்கும் பெய்ஜிங் மாநகரம், தொல் பொருட்களின் பாதுகாப்புப் பணியைத் தொடர்ந்தும் முன்னேற்ற வேண்டும் என்று பெய்ஜிங் தொல் பொருள் பணியகத்தின் தலைவர் kongfanzhi தெரிவித்தார்.

நண்பர்களே, தொல் பொருட்களின் பாதுகாப்புப் பணியில் சீனா பெற்றுள்ள கனிகள் பற்றிய தகவல்களைப் படித்த பின், உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். இவை உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.