• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-25 12:54:24    
சீனப் பொருளாதாரத்தின் சாதனைகள்  

cri
2007ம் ஆண்டின் இறுதி வரை, சீனப் பொருளாதாரம் மகிழ்ச்சியூட்டும் சாதனைகளைப் பெற்றுள்ளது. 2007ம் ஆண்டின் முதல் 9 திங்களில், சீனப் பொருளாதாரம் நிதானமான, விரைவான அதிகரிப்பை நிலைநிறுத்தி வருகிறது. நகரம் மற்றும் கிராமப்புற மக்களின் வருமானங்கள் தெளிவாக மேம்படுத்தப்பட்டுள்ளன. எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் பணி, புதிய முன்னேற்றமடைந்துள்ளது. இத்தகைய சாதனைகள் அனைத்தும், சர்வதேசச் சமூகத்தால் கவனிக்கப்பட்டுள்ளன.
2007ம் ஆண்டின் முதல் 9 திங்கள், சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 16 லட்சம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. 2006ம் ஆண்டின் இருந்ததை விட, 11.5 விழுக்காடு அதிகமாகும். விரைவாக வளர்ந்து வரும் சீனப் பொருளாதாரத்தை சீனாவிலுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிக் குழுவின் துணைத் தலைவர் FRANZ JESSEN வெகுவாகப் பாராட்டினார். அவர் கூறியதாவது:

அடுத்த 10 ஆண்டுகளில், மொத்த உள் நாட்டு உற்பத்தி ஒரு மடங்கு அதிகரிக்கும் நோக்கத்தை சீன அரசு 2000ம் ஆண்டில் முன்வைத்துள்ளது. இத்தகைய வளர்ச்சி வேகப்படி, 11வது 5 ஆண்டு திட்டம் வகுத்த பல்வேறு நோக்கங்களை சீன அரசு
நனவாக்க முடியும் என்பது திண்ணம் என்று நான் நம்புகிறேன் என்றார் அவர்.
கடந்த 9 திங்களில், சீன நகரவாசிகளின் நுகர்வு விரைவான வேகத்தில் உயர்ந்து வருகிறது. பொருளாதார அதிகரிப்பு பங்காற்றும் விகிதத்தில் இது 37 விழுக்காட்டை வகித்துள்ளது.
புள்ளிவிபரப்படி, 2007ம் ஆண்டின் முதல் 9 திங்கள், சீன நகரவாசிகளின் சராசிரி வருமானம் 13.2 விழுக்காடாகவும், கிராமப்புற வாசிகளின் வருமானம் 14.8 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளது.


தவிரவும், 2007ம் ஆண்டு, சீன சமூகக் காப்புறுதியின் கட்டுக்கோப்பு மேன்மேலும் விரிவாக்கியுள்ளது. முதுமைக் கால காப்புறுதி, மருத்துவ சிக்கிச்சை காப்புறுதி, வேலை பெறாத காப்புறுதி போன்ற பல்வேறு சமூகக் காப்புறுதிகளில் கலந்துகொண்ட மக்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சமூக லட்சியத்தில், மேலதிக முதலீட்டை மத்திய நிதி துறை ஒதுக்குவது என்பது இதன் காரணமாகும். சீனாவிலுள்ள சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதி அலுவலகத் தலைமைப் பிரதிநிதி VIVEK ARORA இதை வெகுவாகப் பாராட்டினார். அவர் கூறியதாவது:


2007ம் ஆண்டு, சீனாவில் ஒரு ஊக்கம் தரும் வெளிப்பாடு நிலவியது. சில சமூகத் துறைகளில் முதலீட்டை சீன அரசு தெளிவாக உயர்த்தியுள்ளது. எடுத்துக்காட்டாக, கல்வி மற்றும் மருத்துச் சிகிச்சைத் துறைகள் மேலதிக நிதி ஒத்துக்கிவைக்கப்பட்டன. மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படுவதற்கு இது துணை புரியும். ஒட்டுமொத்தமாக ரீதியில், பொருளாதார வளர்ச்சியை சமநிலைபடுத்துவதற்கும் இது நன்மை பயக்கும் என்றார் அவர்.
2006ம் ஆண்டு முதல், மேலதிக கடன் வழங்குவது, அளவுக்கு மீறிய வெளி வர்த்தக சாதகசம நிலை மற்றும் முதலீடு செய்யும் போக்கு நிலவுவது, விலைவாசி பெரிய அளவில் அதிகரிப்பது ஆகிய புதிய பிரச்சினைகள் உள்ளன. பொருளாதாரம் நிதானமாக வளர்வதை உத்தரவாதம் செய்யுமாறு, ஒட்டுமொத்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சீன அரசு தொடர்ந்து செழிப்பாகியது. நாணயக்கொள்கையை மேன்மேலும் பயன்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை சீன அரசு சரிப்படுத்தியது. இது வரை, 2007ம் ஆண்டுக்குள், 5 முறைகளில் வட்டியை உயர்த்தி, கையிருப்பு தொகை விகிதத்தை சீன மத்திய வங்கி 10 முறைகளாக அதிகரித்துள்ளது.
நாணயக்கொள்கையைத் தவிர, எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது, இன்னொரு முக்கிய நடவடிக்கையாக மாறியுள்ளது. 2007ம் ஆண்டு, மாசுபாடு மற்றும் எரியாற்றல் செலவு அதிகம் கொண்ட, மூல வள ரகம் வாய்ந்த சுமார் 500 உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி வரியைத் திருப்பிக் கொடுப்பதை சீனா நீக்கியுள்ளது. எரியாற்றல் செலவு மற்றும் மாசுபாடு மிக்க தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதை, வங்கி உள்ளிட்ட நாணய நிறுவனங்கள் குறைத்து நிலைநிறுத்தியுள்ளன.
ஐ.நாவின் காலநிலை மாற்றக் கூட்டத்தில், ஐ.நாவின் காலநிலை மாற்றம் பற்றிய அரசாங்கங்களிடை குழுவின் தலைவர் RAJENDRA PACHAURI சீனா பெற்றுள்ள சாதனைகளை உறுதிப்படுத்தினார். அவர் கூறியதாவது:


சூரிய வெப்ப ஆற்றல், காற்று ஆற்றல் மற்றும் பிற புதுப்பிக்க வல்ல எரியாற்றல்களையும் பயன்படுத்த சீனா பாடுபட்டு வருகிறது. எரியாற்றலைப் பயன்படுத்தும் விகிதத்தை அதிகரி்க்கவும், வெப்ப காற்று வெளியேற்றத்தைக் குறைக்கவும் சீனா முயற்சி செய்து வருகிறது என்றார் அவர்.
சீனப் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சி, உலகத்துக்கு மாபெரும் பங்காற்றியுள்ளது என்பது குறிப்பிடதக்கததாக வெளிநாட்டுப் பொருளியலாளர்கள் கருத்து தெரிவித்தனர். இத்தகைய கருத்து, சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் முதலாவது முறையில் தோன்றியது என்று இந்நிதியத்தின் ஆராய்ச்சி அலுவலகத் தலைவர் SIMON JOHNSON தெரிவித்தார். அவர் கூறியதாவது:

2007ம் ஆண்டு, வேறுபட்ட நாட்டு வணிகப் பொருட்களின் விலை விகிதம் மூலம் கணக்கிடினால், உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு மிக்க பங்காற்றும் நாடாக சீனா மாறும். சர்வதேச நாணய நிதியத்தின் புள்ளிவிபரப்படி, இத்தகைய நிலைமை அவ்வறிக்கையில் முதலாக தோன்றியது என்றார் அவர்.
2007ம் ஆண்டு, சீனப் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்ற போதிலும், சில பிரச்சினைகள் அலட்சியம் செய்யப்படக் கூடாது. தற்போது, சீனாவின் சில பிரதேசங்களில் முதலீடு ஆக்கப்பூர்வமாகச் செய்யப்பட்டு வருகிறது. கடன்களின் நிர்ப்பந்தம் இன்னும் நிலவி, விலைவாசி வலிமையாக அதிகரித்து வருகிறது.
அடுத்த ஆண்டு சீனப் பொருளாதாரம் மீது உலக வங்கியின் சீனப் பணியகத் தலைவர் dudawei அதிக நம்பிக்கை வைக்கிறார். அவர் கூறியதாவது:


2008ம் ஆண்டு சீனப் பொருளாதாரம் மீது நான் நம்பிக்கை ஆர்வம் கொள்கிறேன். உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போதிலும், சீனாவில் சில ஒட்டுமொத்தச் சரிப்படுத்தல்கள் காணப்படுகின்றன. உலகப் பொருளாதாரம் பெருமளவில் குறைந்தால், சீனப் பொருளாதாரம் சீராகச் செயல்படுத்துவதை சீனாவின் நிதிக் கொள்கைகள் நிலைநிறுத்தலாம் என்றார் அவர்.