• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-25 09:50:21    
கத்தார் டென்னிஸ் போட்டி

cri
25 இலட்சம் அமெரிக்க டாலர் பரிசு பெறும் WTA கத்தார் டென்னிஸ் போட்டி, 18ம் நாள் துவங்கியது.
முதல் சுற்று போட்டிகளில், சீன வீராங்கனை yan zi 2-1 என்ற ஆட்ட கணக்கில் ரஷியாவின் வீராங்கனை Dushevinaவை தோற்கடித்து, அடுத்த சுற்றில் நுழைந்துள்ளார்.
சீனாவின் இதர வீராங்கனைகளான zheng jie, sun tian tian, இருவரும் முதல் சுற்று போட்டியில் தோல்வியடைந்தனர்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முதல் தங்க பதக்கம், எந்த போட்டியில் உருவாக்குவது என்பது இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்று பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழு விளையாட்டு பகுதியின் தலைவர் zhang ji long இன்று பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
தற்போதைய போட்டி நிகழ்ச்சி நிரல் படி, மகளிர் 10 மீட்டர் துப்பாக்கிச்சூடு, மகளிர் 48 கிலோகிராம் நிலையான பளுத் தூக்கல் ஆகிய போட்டிகளின் இறுதிப்போட்டிகள், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முதல் நாளான ஆக்ஸ்ட் 9ம் நாள் காலையில் நடைபெறும். பல்வேறு போட்டிகளுக்கான பெயர் பதிவு பணி இன்னும் முடிவடையாது நிலையில், போட்டியில் கலந்துகொள்ளும் வீராங்கனைகளின் எண்ணிக்கை மூலம், போட்டிகள் முடிவடையும் நேரத்தை மதிப்பீடு செய்ய முடியாது. எனவே முதல் தங்க பதக்கம் எந்த போட்டியில் உருவாக்கப்படுவது என்பதை உறுதிப்படுத்த முடியாது என்று zhang ji long தெரிவித்தார்.
திட்டப்படி, 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் மரத்தான் ஓட்டப்போட்டி பெய்சிங்கில் நடைபெறும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு அமைப்புக் குழுவின் விளையாட்டு பிரிவின் துணைத் தலைவர் Liu Wenbin வானிலை மற்றும் காற்று மாசுபாடு காரணமாக பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் மரத்தான் ஓட்டப்போட்டி இதர நகரில் நடைபெறுவது பற்றிய செய்தி குறித்து 19ம் நாள் இவ்வாறு தெரிவித்தார்.
சீனாவுக்கு விளையாட்டில் திறமைசாலிகளைப் பயிற்றுவிப்பதனை நோக்கமாக கொண்டு, சீனர்கள் 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 28 வகை போட்டிகளின் தலைவராகிறனர் என்று பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழு விளையாட்டு பகுதியின் தலைவர் zhang ji long 19ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
வெளிநாட்டவர், 2000ம் ஆண்டு சிட்னி மற்றும் 2004ம் ஆண்டு Athens ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் ஆட்டங்களின் தலைவர்களில் பங்கெடுத்தனர். ஆனால், இந்நிலைமை, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மாறும் என்று அவர் கூறினார்.