• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-26 09:13:19    
கொங் பேரரசரின் மாளிகை

cri

கொங் பேரரசரின் மாளிகை, பெய்ஜிங்கின் Xi Cheng மாவட்டத்தின் Qian Hai மேற்கு வீதியில் அமைந்துள்ளது. இது, பேரரசர்களின் மாளிகைகளில், மிக பெரிய ஒன்றாகும். அத்துடன், மிக நன்றாகப் பாதுகாக்கப்பட்டது.

கொங் பேரரசர், சிங் வம்சகால பேரரசரின் 6வது மகன் ஆவர். இது அவரது வசிப்பிடமாகும். முன்பு, இது, அதிகாரி ஹே சானின் வசிப்பிடம் இருந்தது. 1799ம் ஆண்டு, ஹே சான் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அரசு, இடத்தை தள்ளுபடி செய்துள்ளது. Jia Qing பேரரசர், இவ்வில்லத்தின் ஒரு பகுதியை தன் தம்பி Qing Xi பேரரசருக்கு, Qing பேரரசரின் மாளிகையாக வழங்கினார். பின்னர், Xian Feng பேரரசர், இதை தன் தம்பி Yi Yiக்கு கொங் பேரரசரின் மாளிகையாக வழங்கினார். Xian Feng மற்றும் Tong Zhi பேரரசர்களின் ஆட்சிக்காலங்களில், இது செப்பணிக்கப்பட்டு, பின் புற, தோட்டமாக கட்டியமைக்கப்பட்டது.

கொங் பேரரசரின் மாளிகை கட்டிடங்கள், வீடு மற்றும் தோட்டம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்படலாம். வீட்டு பரப்பளவு, 3.1 ஹெக்டராகும். இது, நடு, கிழக்கு, மேற்கு ஆகிய மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும், நாலு பக்க வீடுகளும் நடுவில் முற்றமும் கொண்ட இரண்டு மாடி கட்டிடங்களாக உருவாகியுள்ளது. வீட்டின் பின்புறம், தோட்டம். அதன் பரப்பளவு, சுமார் 2.57 ஹெக்டராகும். தோட்டத்துக்குள், மூன்று பகுதிகளாகக் காணப்படுகிறது. இதில், செயற்கை மலைகள், தாழ்வாரம், விதான மண்டபம், குளம் முதலியவை இடம்பெறுகின்றன.

மாளிகையின் நடு பகுதியில், 3 அறை கதவுகள் பரப்பு கொண்ட பெரிய வாசலும், 5 அரை கதவுகள் பரப்பு கொண்ட வாடலும் காணப்படுகின்றன. அவற்றின் முன்புறம், Jia Letang மண்டபமும், கிழக்குப் பகுதியில், நாலு பக்க வீடுகளும் நடுவில் முற்றமும் கொண்ட 3 கட்டடங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அவை, கொங் பேரரசர் Yi Yi வசிப்பிட அறைகளாகும். மேற்குப் பகுதியிலுள்ள தோட்டம், Xi Jinzhai என அழைக்கப்பட்டது. இது, பெரிதாகவும் அலங்காரமாகவும் காணப்படுகிறது.

இந்த மூன்று பகுதிகளின் பின்புறத்தில், கிழக்கில், Zhan Wu மாளிகையும், மேற்கில் Bao Yue மாளிகையும் உள்ளன. மாளிகைகளின் பின்புறத்தில், Ping Jin தோட்டம் இருக்கிறது. அதன் பரப்பளவு, 28 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும்.