• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-26 09:07:57    
6வது சீன மொழிப் பாலம்

cri
6வது சீன மொழிப் பாலம் என்ற சர்வதேச பல்கலைக்கழக மாணவர்களின் சீன மொழி போட்டி கடந்த ஆகஸ்ட் திங்கள் சீனாவின் வடகிழக்கு நகரான சான் சுனில் நடைபெற்றது. 52 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவராலும் சீன மொழியை அழகாகப் பேச முடியும். இவர்கள், சீனாவின் வரலாற்றுப் பண்பாடு, புகழ்பெற்ற மலைகள், இயற்கை காட்சி தளங்கள் ஆகியவை பற்றி அதிக அறிவு கொண்டவர்கள். இது மட்டுமல்ல, சீனப் பாரம்பரிய இசை கருவிகளையும் இசைக்க கூடியவர்கள். சீனப் பண்டை கால கவிதைகளைப் பாட, குங் பு விளையாட அவர்களால் முடியும்.
நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, 6வது சீன மொழி பாலம் என்ற போட்டியின் போது பதிவு செய்யப்பட்ட ஒலியாகும்.
liu de hua என்பவர் லாவோஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞராவரார். இந்தப் பெயர் சீன ஹாங்காங்கில் ஒரு மிகவும் புகழ்பெற்ற திரைப்பட நடிகர்மற்றும் பாடகரின் பெயருக்குச் சமமாகும். இது பற்றி இந்த இளைஞர் கூறியதாவது


என் தாயார் எனக்கு இந்த பெயரை வழங்கினார். ஏனென்றால், liu de hua அரங்கேற்றிய திரைப்பட கதாபாத்திரங்களையும், பாடிய பாடல்களையும் அவருக்கு மிகவும் பிடிக்கும். இது தான், சீன மொழியைக் கற்றுக்கொள்ள என்னை தூண்டியதற்கான காரணமாகும் என்றார் அவர்.
குழந்தைகாப்பகக் காலம் முதல், சீன மொழியைக் கற்றுக்கொள்ள liu de hua அனுப்பப்பட்டார். குழந்தை காலம் பற்றி குறிப்பிடும் போது, அவர் ஒரு சீன சிறுமி பற்றி குறிப்பிட்டார். அவர்கூறியதாவது


ஒரு நாள், ஒரு சீனச் சிறுமி எனது வகுப்பில் சேர்ந்தார். அவள் மிகவும் அழகானவர். ஆனால், அவரால் லாவோஸ் மொழி பேச முடியவில்லை. எனக்கு தெரிந்த சீன மொழியைக் கொண்டு, அவளுடன் தவறாக பேசினால், வெட்கமாகிப் போகும் என்று நினைத்தேன். ஆகையால், மிகவும் முயற்சியுடன் சீன மொழியைக் கற்றுக்கொள்ளத் துவங்கினேன். அந்த அழகான சிறுமியுடன் பேசுவது தான் அப்போதைய எனது நோக்கமாகும் என்றார் அவர்.
பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பின், அவர் தயக்கமின்றி சீன மொழி துறையைத் தேர்ந்தெடுத்தார். சீன மொழி திறனைக் கைப்பற்றுவது அவருக்கு மிகவும் பயனுள்ளது என்று அவர் கருதுகின்றார். அவர் கூறியதாவது
தற்போது பல்வேறு நாடுகளில் சீனர்கள் இருக்கின்றனர். லாவோஸிலும் அதிக சீன மக்கள் வாழ்கின்றனர். சீன மொழியில் பேச முடிந்தால், சீனர்களுடன் வணிகம் செய்யலாம். சீன மொழிபெயர்ப்பாளராகவும் பணி புரியலாம். வருமானம் அதிகமாக கிடைக்கலாம் என்றார் அவர்.
உண்மையில், தற்போது உலகில் 3 கோடிக்கு அதிகமான மக்கள் சீன மொழியைக் கற்றுக்கொள்கின்றனர். அவர்களில், சீனாவை ஒட்டிய லாவோஸ், வியட்நாம், தாய்லாந்து, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் மக்கள் அதிகம். ஏனென்றால், இந்த நாடுகளின் பண்பாடு சீன பண்பாட்டுடன் நெருக்கமானவை. அதேவேளையில், இந்த நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையிலான பரிமாற்றமும் அதிகம். ஆகையால், சீன மொழியைக் கற்றுக்கொள்வது இந்த நாடுகளில் பரவலாகியுள்ளது.
வேலை வாய்ப்பு காரணத்தைத் தவிர, பலர் சீன மொழி, சீனப் பண்பாடு, சீன வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டதினால், சீன மொழியைக் கற்றுக்கொள்கின்றனர். ஜப்பானிய மாணவி TANIGUCHI HARUNA கூறியதாவது


சீன மொழியைக் கேட்ட முதல் முறையே, மொழி உச்சரிப்பு மிக அருமையானது. இந்த அருமையான மொழியில் பேச விரும்பினேன் என்றார் அவர்.
சீன மொழி பாலம் என்ற போட்டியின் இறுதி கட்டத்தில், தேசிய ஆடை அணிந்த TANIGUCHI HARUNA, ஒரே உலகில் ஒரே கனவு என்ற தலைப்பில் சீன மொழியில் 3 நிமிட சொற்பொழிவு ஆற்றினார். அவருடைய அழகான உச்சரிப்பை கேட்டு, ரசிகர்கள் வியப்படைந்தனர். அவர் பாடிய பனி பூ என்ற சீன பாடலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இறுதியில் TANIGUCHI HARUNA தலைசிறந்த மொழிபேச்சுத் திறனுடன் வெற்றி பெற்று, சீனாவில் குறுகிய ஆய்வுபுலமை பரிசு பெற்றார்.
தற்போது, ஜப்பானில் மக்கள் சீன மொழியைக் கற்கும் ஆர்வம் அதிகமாகியுள்ளது. பல இடைநிலைப்பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் சீன மொழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
ஜப்பான் மட்டுமல்ல, தென் கொரியாவில் சுமார் 200 பல்கலைக்கழகங்களில் சீன மொழி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் தேர்வில் சீன மொழி தேர்வு துறையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. வியட்நாமில், ஆங்கில மொழியை அடுத்து சீன மொழி 2வது பெரிய அந்நிய மொழியாக மாறியுள்ளது.
சீனாவின் வெளிநாட்டுத் திறப்பு மேலும் விரிவாகியதுடனும் பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சியுடனும், சீனாவுக்கும் உலகிற்கும் இடையிலான பரிமாற்றமும் தொடர்பும் நாளுக்கு நாள் பரவலாக ஆழமாகி வருகின்றன. சீனா பற்றி அறிந்து கொள்வதற்கான முக்கிய கருவியான சீன மொழி, வட்டாரத்தின் கட்டுப்பாட்டைத் தாண்டி மென்மேலும் அதிகமான ஐரோப்பிய அமெரிக்க, ஏன் ஆப்பிரிக்க நாட்டு மக்கள் கற்றுக்கொள்ள விரும்பும் மொழியாக மாறியுள்ளது.