• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-26 09:06:59    
குடும்பங்கள் 2

cri
சரி பாரம்பரிய சீனக் குடும்பத்தில் காணப்பட்ட சில முக்கிய அம்சங்களை இப்போது அறிவோம்:


• ஆண்வழி/தந்தைவழி சமூகம். குடும்பப்பெயர், உடைமை, சமூகத்தகுநிலை எல்லாமே தந்தையிடமிருந்து மகனுக்கும், மகனிடமிருந்து, பேரனுக்குமாய் சேர்ந்தது.
• மூதாதயருக்கான வணக்கம் மற்றும் மரியாதை, பலிகொடுத்தல். பொதுவாக குடும்பத்தின் மூத்த ஆண் உறுப்பினர், மூதாதையரின் பலகைகளையும், மூதாதயருக்கான மரியாதை செலுத்தும் சடங்குகளையும் பொறுப்பேற்று, பாதுகாப்பார்.
• சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட பலதார முறை. ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் அக்காலத்தில் பொதுவில் அதிகம் காணப்பட்டதே.
• திருமணமான சகோதரர்கள் பெரிய குடும்பமாக ஒன்றாய் வசிப்பது.
• மூதாதயர் வழிபாடு, பலிச்சடங்கை தொடர, ஆண் வாரிசு தேவை என்பதிலான நிலைப்பாடு.
• பொதுவான ஆண் மூதாதையரைக் கொண்டவர்களின் உறவினர் தொகுதி.
பொதுவாக பாரம்பரிய குடும்பங்கள் ஒரு கூட்டு நிறுவனம் போல் செயல்பட்டன.


குடும்பத்தின் நிலம், குடும்பத்தினர் அனைவரின் உடைமையாக, பொதுவான சொத்தாக இருந்தது. குடும்பத்தின் மூத்த ஆண் உறுப்பினர், அதாவது குடும்பத்தின் தலையாய நபர், இந்த நிலத்தை குடும்பத்துக்காக நிர்வகித்தார்.
திருமணங்கள் தனிப்பட்ட நபரின் நன்மையை கருதிய அதேவேளை, குடும்பம் என்ற ஒட்டுமொத்த குழுவின் மேம்பாட்டையும், வளர்ச்சியையும் கருத்தில் கொண்டதாக ஏற்பாடு செய்யப்பட்டது.
குடும்பத்தில் தந்தை இறந்துவிட்டால், மகன்களுக்கு சொத்து பிரித்தளிக்கப்பட்டது. இதில் மூத்த மகன், மூதாதையர் வணக்கம், வழிபாடு ஆகியவற்றுக்கு பொறுப்பேற்க நேர்வதால், அவருக்கு கொஞ்சம் கூடுதலாக பங்கு கிடைக்கும்.
நவீன அல்லது நவகால சீனக் குடும்பம்.


அண்மை மதிப்பீடுகள் சீனாவில் மொத்தம் 34 கோடி குடும்பங்கள் இருப்பதாக கூறுகிறது. சராசரியாக ஒரு குடும்பத்தில் 3.63 பேர் இருப்பதாக இந்த எண்ணிக்கை பொருள்படும். பொதுவாக, குடும்பம் என்பது கணவன், மனைவி மற்றும் குழந்தைகளை உள்ளடக்கியது. ஆனால் இன்றளவும் இரண்டு மூன்று தலைமுறையினர் ஒன்றாக உள்ள பெரிய குடும்பங்களை சீனாவில் காணமுடிகிறது. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை சிரத்தையுடன் மேற்கொண்டு, வெற்றி பெற்ற சீனாவில் இன்னமும் இப்படி பெரிய குடும்பங்கள் இருப்பதை காண முடிகிறது. இருப்பினும், தன்னிச்சையாக, சுதந்திரமாக வாழவேண்டும் என்ற எண்ணமும், நேரடிச் சொந்தங்களாக அமையும் உறுப்பினர்கள் அதாவது கணவன், மனைவி, பிள்ளை (கள்) மட்டுமே கொண்ட குடும்பத்தின் மீதான நாட்டமும் தற்போது அதிகமாக சீனாவில் காணமுடிகிறது.


முன்பொரு காலத்தில், கூட்டாக வழ்ந்த குடும்பத்தில் மூத்த ஆண் உறுப்பினரே எல்லா முடிவையும் எடுத்தார். இப்போது குடும்பத்தில், பொதுவாக கணவனும், மனைவியும் சேர்ந்து அல்லது, குடும்பத்தின் இதர உறுப்பினர்களுடன் அவர்களோடு கலந்தாலோசித்து முடிவு செய்யும் நிலை காணப்படுகிறது. மேலும், தற்போது குடும்பத்தில் கடமைகளை அனைவரும் பகிர்ந்து செய்யும் தன்மை காணப்படுகிறது. வீட்டு வேலையிலும், அலுவலகத்திலான வேலையிலும் கூட கணவன் மனைவியிடையே பரஸ்பரம் உதவும் மனோபாவம் வளர்ந்துள்ளது.


சீன மக்களிடையே வயதில் மூத்தவர்களுக்கு மரியாதையும், இளையோருக்கு பாசமும் காட்டும் வழமை நீண்ட நெடுங்காலமாய் தொடர்ந்து வருகிறது. ஆக, பெற்றோருடன் சேர்ந்து வாழாத போதிலும், தனியாக ஒரு குடும்பமாக இருக்கும் நிலையிலும், பெற்றோருடன் நெருக்கமான தொடர்புகொள்வதை பிள்ளைகள் உறுதியாக பின்பற்றுகின்றனர். பெற்றோர், குழந்தைகள், சகோதர சகோதரிகள், அத்தை, மாமி, மாமாக்கள் உள்ளிட்ட உறவுகளை பேணவும் தவறுவதில்லை.