• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-26 09:39:48    
வசந்த விழா கொண்டாட்டம் பற்றிய கருத்து

cri
கலை பிரியமான நேயர்களின் கடித தொடர்புகளை அனைவருக்கும் பறைசாற்றும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
தமிழன்பன் இன்றைய நிகழ்ச்சியின் முதலில் தென்பொன்முடி தெ.நா. மணிகண்டன் எழுதிய கடிதம். கேவை மாவட்ட தலைமை சீன வானொலி நேயர் மன்றத்தின் 2008 ஆம் ஆண்டின் முதலாவது கலந்தாய்வு கூட்டம் மன்றத்தலைவர் தெ.நா. மணிகண்டன் அவர்களின் இல்லத்தில் 2008 ஜனவரி திங்கள் 20 மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. மன்ற ஒருங்கிணைப்பாளர், செயலாளர், மகளிர் பிரிவு தலைவி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சீன வானொலி தமிழ் பிரிவு பணியாளர்களுக்கும் மன்ற உறுப்பினர்களுக்கும் சீன புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பதிவு செய்யப்பட்டது. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்காக கோவை மாவட்ட தலைமை சீன வானொலி நேயர் மன்றத்தின் சார்பாக 12 ஆயிரம் விடைத்தாள்கள் வினியோனிக்கப்பட்டதோடு, அவைகளை குறித்த காலத்திற்கு முன்பாகவே அனுப்பவும், தமிழ் ஒலி இதழுக்காக கவிதைகள், கட்டுரைகள் அனுப்பவும், புதிய பல கிளை மன்றங்கள் தொடங்கவும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டடன.
கலை அடுத்ததாக உத்திரக்குடி சு. கலைவாணன் ராதிகா எழுதிய கடிதம் மக்கள் சீனத்தில் எரியாற்றல் சிக்கனம், பசுமை நிலக்கரி திட்டம், பசுங்கூட வாயு வெளியேற்ற குறைப்பை அரசு மற்றும் பிற தொழில நிறுவனங்கள் நிறைவேற்றுவது என்ற சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முறைகளை அறிந்து மகிழ்ச்சியடைந்தோம். இன்ப பயணம் நிகழ்ச்சியில் சீனாவிலான சிறப்பு மிக்க பாரம்பரிய இடங்கள் பற்றிய தகவல் சீனா பண்பாட்டை வளர்க்கும் நிலைமைகள் பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது.
தமிழன்பன் அடுத்தாக நலவாழ்வு பாதுகாப்பு பற்றி சேந்தமங்கலம் தி. கார்த்திக் எழுதிய கடிதம். சீன காய்கறிகளுக்கான பூச்சி மருந்துகளை பற்றி கற்றுதேர்ந்த சாவ்சாங் பற்றி அறிந்தேன். தக்காளி சாகுபடியில் தோல்வியடைந்த அவர் பின்னர் விவசாயிகளுக்கு ஆலோசனை கூறும் அளவுக்கு வளர்ந்தது பற்றி ஆச்சரியபட்ட்டேன். கடின உழைப்பால் வளர்ந்தோர் பட்டியலில் இவரை கண்டிப்பாக சேர்க்கலாம்.
கலை தொடர்வது விளையாட்டு செய்திகள் பற்றிய பி. சந்திர சேகரன் ஏழுதிய கடிதம். நடைபெறவுள்ள பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு செய்யப்படும் விரிவான ஏற்பாடுகளை அறிந்தோம். இதுவரை கண்டிராத அளவிலான ஒலிம்பிக் போட்டியை உலகமே வியக்கும் வண்ணம் நடத்திக்காட்டுவதோடு, போட்டியை காணவரும் மக்களை உபசரிப்பதற்கு முன்னேற்பாடாக பல்வேறு திட்டங்களை மேற்கொள்வதை பாராட்டுகின்றோம். வெளிநாடுகளின் சீன மொழி மற்றும் பண்பாட்டை பரப்பும் சீன கன்பியுஸியஸ் கழகம் கழகத்தின் வளர்ச்சி பற்றி செய்தி தொகுப்பு மூலம் அறிய முடிந்தது. உலகிலேயே அதிமான மக்களால் பேசப்படும் மொழியான சீன மொழி உலகிலுள்ள அனைவராலும் கற்றுக்கொள்ளப்பட வேண்டும். உலகின் மூலைமுடுக்குகளில் எல்லாம் சீன மொழி பரவ வாழ்த்துக்கள்.
தமிழன்பன் அடுத்து சென்னை, தியாகராயநகர் என். ராஜேந்திரன் சீன உணவு அரங்கம் பற்றி எழுதிய கடிதம். சீன வானொலியை கேட்டு பன்றி இறச்சியை தயார் செய்தேன். அதன் மணம் பக்கத்து வீட்டாருக்கு பரவி நீ எப்படி இறைச்சி தயாரித்தாய் என கேட்க தொடங்கி விட்டார்கள். சீன வானொலி இவ்வளவு அழகாக உணவு தயாரிப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறதா? என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
கலை சேந்தமங்கலம் நேயர் சிவானந்தன் எழுதிய கடிதம். அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் வயது முதிர்ந்தாலும் நிகைவாற்றலை வளர்ப்பது எப்படி என அறிந்து கொண்டேன். வெளிநாட்டு மொழிகளை கற்பது, தேவையான உடற்பயிற்ச்சிகள், நினைவாற்றல் சக்திகளை அதிகரிக்கும் உத்திகளை வளர்பது போன்றவை பற்றி அதன் மூலம் அறிய முடிந்தது.
தமிழன்பன் அடுத்து மறைமலைநகர் மல்லிகா தேவி எழுதிய கடிதம். செய்தி தொகுப்பில் சீன அரசு வறுமை ஒழிப்பு திட்டத்தில் வெற்றி பெற்றுள்ளதையும், பல்வேறு உலக நாடுகளுக்கு வறுமை ஒழிப்பில் உதவியளிப்பதையும் அறிந்து பெருமையடைந்தேன். வறுமை ஒழிப்பில் உலக கவனத்தை பெறுவதோடு சீனாவின் பல அனுபவங்கள் பல்வேறு நாடுகளால் பின்பற்றப்படும் என்பது உறுதி. சீனக்கதை நிகழ்ச்சியில் இடம்பெற்ற புறாக்கதை நல்ல கருத்துக்களை விதைப்பதாக அமைந்திருந்தது. சீனப் பண்பாட்டு நிகழ்ச்சியில் தேயிலைக்கு பாதை, குதிரைப்பாதை ஆகிய முற்கால சீனப்பண்பாட்டின் சிறப்பை அறிய முடிந்தது.
மின்னஞ்சல் பகுதி
வளவனூர் புதுப்பாளையம், எஸ்.செல்வம்
பிப்ரவரித் திங்கள் 8 ஆம் நாள் இடம்பெற்ற செய்திகளைக் கேட்டு மகிழ்ந்தேன். தற்போதைய இயற்கைச் சீற்றத்தை சமாளிக்கவும், அதை எதிர்கொள்ளவும் சீனாவின் பல்வேறு வாரியங்கள் முழுமூச்சுடன் பாடுபட்டு வருகின்றன என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். வசந்த விழா நாட்களில் தன் குடும்பத்தினருடன் விழாவைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் சீன அரசுத் தலைவர் கூசின்தாவ் மற்றும் தலைமை அமைச்சர் வென்சாபாவ் ஆகியோர் பெரிதும் போற்றுதற்க்குரியவர்கள். இவர்கள் இதுபோன்ற செயல்களின் மூலம் உலகிற்கே முன்மாதிரியான தலைவர்களாக மாறியிருக்கிறார்கள். தலைவர்களின் வழிகாட்டுதல்களுடன், சீனா விரைவில் இப்பிரச்னையிலிருந்து மீளும் என நம்புகின்றேன்.
திண்டுக்கல் மாவட்டம் கே.வேலுச்சாமி
மக்கள் சீனம் நிகழ்ச்சியில் கலையரசி அவர்கள் சீனாவின் எலிப்புத்தாண்டை முன்னிட்டு எலிபொம்மைகள் அங்காடியில் எவ்வாறு விற்பனையாகின்றது என்பதை அனைத்து நேயர்களும் எளிதாக புரிந்துகொள்ளும்படி அருமையாக தொகுத்தளித்தார் அவர்களுக்கு எனது பாராட்டுகள். சந்திர நாள்காட்டியின்படி எலிப்புத்தாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் சீனர்களுக்கும் தமிழ்பிரிவின் அனைத்து பணியாளர்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
சிறுநாயக்கன்பட்டி,கே.வேலுச்சாமி
வாணி அவர்கள் தொகுத்து வழங்கிய அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு என்ற நிகழ்ச்சியினை கேட்டேன்.
இன்றைய மருத்துவ உலகில் பக்கவிளைவுகள் அற்ற மருத்துவ முறையாக விளங்கும் "அக்குபஞ்சர்" மருத்துவ சிகிச்சையினை உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் ரஷியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த தீராத நோயாளிகளும் சீனாவின் "சைய்யா" நகரை நாடி தேடிவந்து சிகிச்சை பெற்று முழு உடல் நலம் பெறுவதை அறியும் போது இன்றைய மருத்துவ உலகில் அதிகமாக மேற்கொள்ளப்படும் ஆங்கில சிகிச்சை முறையினை விட சீனாவின் அக்குப்பஞ்சர் மருத்துவ முறை சாலச் சிறந்ததாகும்.
விழுப்புரம், முத்துசிவக்குமரன்
வசந்த விழாவினை வரவேற்று உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் சீன மக்கள் கொண்டாடியதை நமது இணைய தளத்தினில் புகைப்படத்துடன் கூடிய செய்தியினை படித்ததும், நானே அந்த விழாவினில் கலந்து கொண்டு பரவசம் அடைந்தது போல் இருந்தது.
சீனப் பண்பாடு பகுதியில் வசந்த விழா பற்றிய கூடுதல் தகவல்களை திரு. கிளிட்டஸ் அவர்கள் வழங்கியது சிறப்பாகவும், புதிய செய்திகளை அறியும் படியாகவும் இருந்தது. தமிழர்களின் தைப்பொங்கலுக்கு ஒப்பான இந்த அறுவடை நாள் வசந்தவிழாவின் பண்டைய கால வரலாறு 1643 முதல் 1911 வரையிலான காலகட்டம் வரை எப்படியெல்லாம் மக்கள் குதூகலத்துடன் கொண்டாடினார்கள் என்ற தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமாகவே இருந்தது. அதிலும் களிமண் உருண்டையால் அடிக்கும் பழக்கம் வேடிக்கையாகவும், நமது நாட்டில் உள்ளது போல் கட்டைக்கால் கூத்து நடனமும் உண்டு என்பதும் இவர்களும் நம்மாளுங்க தான் என்ற பாசப் பிணைப்பை உருவாக்குகிறது.