பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுத் திடல்கள் மற்றும் அரங்குகளின் கட்டுமானப்பணி பெய்சிங் நகரின் ஒட்டுமொத்த திட்டத்தின் கோரிக்கையைப் பொருந்தியதாக விளங்கி, அதன் நனவாக்கத்தை விரைவுபடுத்தியுள்ளது என்று பெய்சிங் கட்டிட ஆணையத்தின் துணைத் தலைவர் Zhang Jiaming 19ம் நாள் கூறினார். தற்போது இருக்கும் மூலவளத்தை முழுமையாக பயன்படுத்துவது, நிலத்தைச் சிக்கனப்படுத்துவது, குடிமக்களின் இடம்பெயர்வை குறைப்பது முதலியவை பெய்சிங்
ஒலிம்பிக் விளையாட்டுத் திடல்கள் மற்றும் அரங்குகளின் இடத்தெரிவின் சிறப்பியல்பாகும் என்று Zhang Jiaming கூறினார். தற்போது, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுத் திடல்கள் மற்றும் அரங்குகளின் கட்டுமானப்பணி அடிப்படையாக நிறைவேற்றப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சந்தை வளர்ச்சி மூலம் பெறும் வருமானம், அதனை ஏற்பாடு செய்யும் தேவையை நிறைவு செய்ய முடியும் என்று பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழு சந்தை வளர்ச்சி பிரிவின் தலைவர் yuan bin அம்மையார் 20ம் நாள் தெரிவித்தார்.
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் உலக ஒத்துழைப்பு கூட்டாளி, தொலைக்காட்சி அஞ்சல் நிறுவனங்கள், பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் சந்தை வளர்ச்சி ஆகிய திட்டங்கள், பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் ஏற்பாட்டு, பணிகளுக்கு, அதிக நிதி, வசதிகள், தொழில் நுட்பம், சேவை ஆகியவற்றை திரட்டியுள்ளன என்று yuan bin அம்மையார் தெரிவித்தார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஏற்பாட்டு தொகை, அதை நடத்துவதுடன் நேரடி தொடர்புடைய நிதியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை விண்ணப்பித்த போது, வரவு செலவு திட்டப்படி, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வருமானம் 162 கோடியே 50 இலட்சம் அமெரிக்க டாலராகும். லாபத் தொகை ஒரு கோடியே 60 லட்சம் பெறப்பட கூடும். இந்த
குறிகோள், நனவாக்குவதில் பிரச்சினை ஏது இல்லை என்று இதற்கு முன் பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழு தெரிவித்தது. 49வது உலக மேசைபந்து விளையாட்டின் குழுப் போட்டிகள், 23ம் நாள் சீனாவின் guang zhou நகரில் நடைபெற்றது 100க்கு மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த ஆடவர் அணிகளும் 72 மகளிர் அணிகளும், இப்போட்டியில் கலந்துகொண்டன. முதல் சுற்றுப் போட்டியில் சீன மகளிர் அணி, 3-0 என்ற ஆட்ட கணக்கில் ரஷிய அணியை தோற்கடித்தது. அடுத்து அது வடகொரியாவை சந்திக்கவுள்ளது.
|