• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-28 17:07:43    
வசந்த விழா கொண்டாட

cri
வசந்த விழா கொண்டாட
அண்மையில் சீனாவின் தென்பகுதியிலான பல பிரதேசங்கள் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டன. விமான மற்றும் நெடுஞ்சாலை சேவைகள் நிறுத்தப்பட்டன. வசந்த விழாவை உறவினரோடு கொண்டாட விடுமுறை காலங்களில் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய இருந்த நேரத்தில் இந்த பனிச்சீற்றம் ஏற்பட்டதால் பலருக்கு ஊர் செல்ல முடியாதோ என்ற கவலை ஏற்பட தொடங்கி விட்டது. பலர் நேரிடையான பாதைகளை தவிர்த்து வேறு விதங்களில் சென்றடைய முயற்சித்தனர். தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல் தங்க வைக்கப்பட்டவர்கள் பலர் எங்கு தங்கியிருந்தனரோ அங்கு சிறப்பு வசந்த விழாவை கொண்டாடினர்.
Yichang – Wuhan நெடுஞ்சாலையில் அமைந்துள்ள Jingzhou நகரிலுள்ள Changjiang கல்லூரி மாணவர் ஒருவருக்கு அற்புதமான யோசனை தோன்றியது. தனது ஊருக்கு வசந்த விழாவை கொண்டாட எப்படியாவது செல்ல வேண்டுமென அவர் முடிவு செய்தார். பாதைகள் முழுவதும் பனியால் முடிவிட்டதால் பனி சறுக்கு கருவிகளை இரவல் வாங்கிய அவர் பனியில் சறுக்கி வீட்டிற்கு செல்ல தொடங்கினார். உணவுப் பொருட்களையும், குடிநீரையும் கொண்டு நெடுஞ்சாலையில் சறுக்கி வரும் கல்லூரி மாணவனை பார்த்த ரோந்து சென்றக் காவலர் ஒருவர் விசாரித்த போது 200 கிலோ மீட்டர் அப்பாலுள்ள தனது சொந்த ஊருக்கு செல்வதை அவர் கூறியிருக்கிறார். வசந்த விழாவை தனது குடும்பத்தோடு கொண்டாட வேண்டும் என்ற அந்த இளைஞரின் ஆர்வத்தை கண்ட காவலர் பனிப்பொழிவில்லாத பகுதியிலான நெடுஞ்சாலை வழியாக அவன் பேருந்து மூலம் செல்ல உதவி செய்துள்ளர். வசந்தவிழா கொண்டாட்ட தாகம் எத்தகைய இடர்களையும் தாண்டி செல்லும் சக்தியை கொடுக்கும் என்பதையும் சீன மக்கள் அவ்விழாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் இந்த இளைஞனின் செயல் வெள்ளிடமலையாக காட்டுகிறதல்வா..


திருமண இணைப்பை காட்ட மரபணு பரிசு
திருமணங்களுக்கு சென்றால் விருந்து சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு திரும்பும் போது மணமக்களின் உறவினரோ, நண்பரோ அல்லது அவர்கள் வீட்டினரோ புதுமண தம்பதியரை வாழ்த்தி பிரசுரங்கள், படங்கள் கொடுப்பார்கள். வசதியானவர்களாக இருந்தால் நாள்காட்டிகள் அல்லது பரிசுப் பொருட்கள் வைத்த பை கொடுப்பார்கள். இவ்வாறு செய்ய வேண்டுமென்ற கட்டாயமில்லை என்றாலும் தங்களது மகிழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இதனை வழங்குகிறார்கள். கிழக்கு சீனா ஜியாங்சு மாநிலத்தின் நான்ஜிங்கில் குவாதெங் உணவக அரங்கில் நடைபெற்ற திருமணத்தில் அம்மணமக்கள் வழங்கிய பரிசு அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. மணமக்களான Xiao Dan, Liu Wen அறிவியல் ரீதியான பரிசுப்பொருள் மூலம் தங்கள் திருமண இணைப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அவ்வாறு ஆச்சரியமடைய வைக்கும் பரிசுப்பொருள் என்ன தெரியுமா? தங்கள் இருவரின மரபணுக்கள் கலந்த ஒரு மில்லி நீரை சோதனைக் குழாயில் அடைத்து அனைவருக்கும் பரிசாக கொடுத்துள்ளனர். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் பிரமாணிக்கமாய் இருப்போம் என்று மணமக்கள் திருமணத்தின் போது வாக்குறுதி அளிப்பார்கள். இந்த மணமக்கள் அந்த வாக்குறுதியோடு, தங்கள் மரபணுக்கள் கலந்த நீரை பரிசாக கொடுத்து அதனை தங்களுடைய இல்லற இணைப்பின் அடையாளமாகவும் காட்டியுள்ளனர். மணம் புரிந்துகொண்ட இவருவரும் பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் மரபணு சார்ந்த துறையில் மருத்துவ பட்டப்படிப்பு மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.


தேன் பொறி, கவனம்
பொறி மற்றும் கண்ணி ஆகியவை பற்றி கேள்விப்பட்டிருப்போம். விலங்குகளுக்கு பொறி வைப்பார்கள். கண்ணியை கவனிக்காமல் அவை பொறியில் மாட்டிக்கொள்ளும். கண்ணி வெடியை மிதித்தால் வெடித்து சிதறி சேதங்களை உண்டாக்கும் என கேள்வி பட்டடிருக்கிறோம். அதெல்லாம் சரி, தேன் பொறியின்ன என்னனென்னு கேட்குறீங்களா? மனிதர்களுக்கு வைக்கப்பட்டுள்ள பொறி தான் அது. மாட்டிக்கொண்டால் அதோ கதி தான். தேன் பொறிக்குழு பிரிட்டனில் தற்போது வளர்ந்து வரும் புலனாய்வு குழுவினராவர். குற்றவியல் வழக்குகளை புலனாய்வு செய்வது இவர்களுடைய பணி என்று நினைத்து விடாதீர்கள். கணவனோ அல்லது மனைவியோ, காதலனோ அல்லது காதலியோ தங்களுடைய கணவரோ, மனைவியோ, காதலனோ, காதலியோ பிரமாணிக்கமாய் இருக்கிறார்களா என்பதை புலனாய்வு செய்ய வேண்டுமென்றால் இவர்களை அணுகினால் போதும். இலவசமாக இல்லீங்க. 588 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். தாங்கள் பின் தொடரும் நபர், பெண்கள் அல்லது ஆண்களோடு உறவாடி உல்லாசமாக இருப்பதை ஒலி, ஒளி பதிவுகள் செய்து இவர்கள் நிரூபிக்கிறார்கள். அப்படி புலனாய்வு செய்ய அவர்களை அணுகுவதற்கு எல்லாம் திட்டவட்டமான நெறிகள் வகுக்கப்பட்டிருக்கிறது. விளைவு என்ன தெரியுமா? தங்களிடம் பிரமாணிக்கம் இல்லாத தன்மையை கண்டுபிடித்த உறவுகளில் பல முறிந்து விடுகிறது. சிலர் விவாதம் செய்து எளிதாக தடம்புரளும் பாதைகளை மாற்றிக்கொள்ள வேண்டுவதாக தெரிகிறது. தேன் பொறி, கவனங்க.


கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. சிறு அளவு உப்பு, சுவையில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும். சிலருடைய சிறிய செயல்கள் கூட இமாலைய சாதனைகளை கொண்டுவரும். 84 சென்டிமீட்டர் உயரமான 9 கிலோகிராம் எடைகூட இல்லாத இந்தியாவின் ஆதித்திய ரோமியோ தேவ் உலகிலேயே குள்ளமான புஜபல பயிற்சி செய்பராக மாறி, செந்த ஊரிலும், சர்வதேச அளவிலும் பெயரெடுத்துள்ளார். தனது உருவத்தையும் உயரத்தையும் நினைத்து தாழ்வுமனப்பான்மை கொள்ளாமல் எல்லோரையும் போல தானும் இயல்பாக செயல்பட முடியும் என்பதை அவர் நிரூபித்துள்ளார். உள்ளுரிலான பயிற்சியரங்கில் அவர் பயிற்சியில் ஈடுபடுவதை பார்வையிட மக்கள் பெருங்கூட்டமாக கூடுகின்றனர். அவருக்காகவே செய்யப்பட்ட புஜபல பயிற்சிக்கருவிகளை அவர் கையாளும் விதங்கள் சிறியது அழகானது என்பதை சுட்டுகின்றது. புஜபல பயிற்சியோடு நடன பயிற்சியையும் அவர் மேற்கொண்டு வருகிறார். கின்னஸ் புத்தகத்தில் 2006 ஆம் ஆண்டில் மூன்று மாத கடுமையான தொடர் உடற்பயிற்சி செய்தவராக பதிவு பெற்றுள்ளார். இவரது உலக அங்கீகாரம் நிச்சயமாக உடல் சாவல் கொண்டுள்ள பலரின் உள்ளார்ந்த உணர்வுகனை தட்டி எழுப்பி, ஆழமான நம்பிக்கை உணர்வை வழங்கும் என்பதில் ஐயமில்லை.