• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-28 17:14:55    
ஒலிம்பிக் பார்க்க பெய்ஜிங் வரவேற்பு

cri
கலை....... 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு அதரவையும் தயாரிப்பையும் சிறப்பாக உருவாக்கும் விதமாக நாள்தோறும் 5 நிமிட ஒலிம்பிக் சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்ப ஏற்பாடு செய்யலாம் என தீர்மானித்தோம்.
தமிழன்பன்.......... ஆமாம். ஆனால் நிகழ்ச்சி ஒலிபரப்பபட்ட பின் வளவனுர் புது பாளையம் எஸ் செல்வம் அவர்கள் ஒரு கேள்வி எழுப்பி முன்மொழிவு தந்துள்ளார்.
கலை......அவர் அப்படி என்ன கேட்டுள்ளார்?


தமிழன்பன்.......பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெற சரியாக 100 நாட்கள் இருக்கும் போது இந்த சிறப்பு நிகழ்ச்சியை துவக்கலாமே என்று அவர் முன்மொழிந்துள்ளார்.
கலை......இது நல்ல யோசனை தான். உண்மையில் நாங்கள் ஏற்கனவே விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சியில் ஒலிம்பிக் விளையாட்டு ஆயத்தப் பணி பற்றி செய்திகளை அறிவித்துக் கொண்டிருக்கிறோம்.
தமிழன்பன்.......உண்மைதான் நானும் கவனித்து வருகின்றேன்.


கலை.......தப்போது விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சியின் முதல் பகுதியில் விளையாட்டு அரங்குகளின் கட்டுமானப் பணி நிறைவு பயிற்சியரங்கு பணிகள் நிறைவு, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை கண்டு ரசிக்கும் நுழைவுச் சீட்டு விற்பனை போன்ற தகவல்களை நீங்கள் அனைவரும் கேட்டிருக்கலாம்.
தமிழன்பன்...........தற்போது பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு பற்றிய செய்திகளை வாரத்திற்கு ஒருமுறை புதன் கிழமை இடம் பெறும் விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சியில் கேளுங்கள்.
கலை..... 2008ம் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு பற்றிய பின்னணிகள் முன்கூட்டிய ஆயத்தப் பணிகள் போன்ற தகவல் வெளியிடப்படும் வேளையில் சரியாக 100 நாட்கள் இருக்கின்ற போது நாங்கள் இது பற்றிய சிறப்பு நிகழ்ச்சியை தொடங்குவோம்.


தமிழன்பன்........இப்படி செயல்பட்டால் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மீதான நேயர்களின் ஆர்வத்தை அதிகமாக நிறைவேற்றலாம்.
கலை......2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெறும் போது தமிழ் பிரிவு நேரடியாக செய்திகளை ஒலிபரப்பு செய்யுமா என்று பேளுக்குறிச்சி க. செந்தில் கேட்டுள்ளார்ர்.
தமிழன்பன்..........அது பற்றி நேரடியாக ஒலிபரப்பும் வாய்ப்பு கிடைக்காது என்றே கருதுகின்றேன். ஏனென்றால் தமிழ் ஒலிபரப்பு நேரம் இந்திய நேரம் இரவு 730 முதல் 830 வரை முதல் ஒலிபரப்பு செய்யப்படுகின்றது.


கலை.......அடுத்த நாள் காலை 730 முதல் 830 வரை மீண்டும் அதேநிகழ்ச்சி மறு ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில் விளையாட்டுப் போட்டிகளின் முடிவுகளை நேரடியாக வெளியிட வாய்ப்பில்லை ஆகவே நேரடியாக செய்திகளை அறிவிக்கும் வாய்ப்பு தமிழ் பிரிவுக்கு கிடைக்காது.
தமிழன்பன்.........ஆனால் அப்போது எங்கள் அனைத்து உழைப்பாற்றல்களையும் ஒருங்கிணைத்து முடிந்த அளவில் விளையாட்டு போட்டி பற்றிய செய்திகளை உடனுக்குடன் நமது இணையதளத்தில் வெளியிடுவோம்.
கலை.........ஆகவே. ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மீது ஆர்வம் கொண்ட நேயர் நண்பர்களே இப்போது எங்கள் இணைய முகவரியை கவனியுங்களேன்.