• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-29 10:53:32    
சீனாவின் காவ்ஷான் இனம்

cri

காவ்ஷான் இனம் என்பது, சீன தைவான் மாநிலத்திலான அனைத்து சிறுபான்மை தேசிய இனங்களின் பொது பெயராகும். இதில், பு நுங், லூகை, பெய்வான், பெய்நான், ஷோ, தையா, யாமெய், ச்சோ, அமெய், செய்சியா ஆகிய 10 பழங்குடிகள் அடங்குகின்றன.

1945ஆம் ஆண்டு ஐப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற பின்பு தான், தைவானிலான சிறுபான்மை தேசிய இனங்கள் காவ்ஷான் என்று அழைக்கப்பட்டன. வரலாற்றில் இந்த பெயர் நிலவவில்லை. அவர்கள் முக்கியமாக சீன பெருநிலப்பகுதியின் தெற்கிழக்கு கடலோரத்தின் gu yue மக்களின் ஒரு கிளையாகும். ஹன் இன மக்கள் தைவானில் குடியேறிய பின், அங்குள்ள மக்கள் இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டனர். சிலர், சமவெளிகளில் ஹன் இன மக்களுடன் கலந்து வாழ்கின்றனர். பிறர், ஹன் இன மக்களால் அதிகமாக பாதிக்கப்படவில்லை.

இதுவரை அவைகளின் பாரம்பரிய மொழி, பழக்க வழக்கம் முதலிய சிறப்பியல்புகள் பரவியுள்ளன. காவ்ஷான் மக்கள்இன் இந்த இரண்டாவது வகையான மக்களை தான் இங்கு குறிப்பிடுகிறோம். அவர்கள் முக்கியமாக மத்திய மலைத் தொடரிலும், தென்கிழக்கு பகுதியிலான தீவுகளிலும் வாழ்கின்றனர். சிலர் fujian, ஷாங்காய், பெய்ஜிங் முதலிய இடங்களில் சிதறி கிடக்கின்றனர். இதன் மொத்த மக்கள் தொகை 4 இலட்சமாகும்.

காவ்ஷான் மக்களுக்குச் சொந்த மொழி உண்டு. இது, தென்கிழக்கு தீவு என்ற மொழி குடும்பத்தின் இந்தோனேஷிய கிளையைச் சேர்ந்தது. இந்த இனங்களின் 10 பழங்குடிகளின் மொழிகளும் பெரிதும் வேறுபடுகின்றன. தைவானில் வாழ்கின்றவர்களுக்கு சிறப்பு வாய்ந்த பண்பாடும் கலையும் உண்டு. அவர்களுக்கு வாய் வழி பரவிய இலக்கியம் மிக அதிகம். புராணக் கதைகள், செவிவழிக் கதைகள், பாடல் முதலியவை இதில் அடங்குகின்றன.

காவ்ஷான் இன மக்களில் பெரும்பாலோர் வேளாண்துறையில் ஈடுபடுகின்றனர். சிலர் மீன் பிடிப்பதையும் வேட்டையாடுதலையும் செய்கின்றனர். இவர்களிடம் சிற்பங்களும் பின்னல் வேலைப்பாடுகளும் இருக்கின்றன.

நீண்டகாலமாக, காவ்ஷான் இன மக்கள், ஹன் மக்களுடன் இணைந்து வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளரை எதிர்த்து, கூட்டாக தைவானை வளர்த்தனர். குறிப்பாக, ஜப்பானிய ஆக்கிராமிப்பாளர் தைவானைக் கைப்பற்றிய 50 ஆண்டுகளில் அவர்கள் வன்மையாக எதிர்த்து போராடினர்.