• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-29 09:08:42    
பூப்பந்து சர்வதேசத் தரவரிசை

cri

சர்வதேச பூப்பந்து கூட்டமைப்பு 21ம் நாள் புதிய உலக தரவரிசையை வெளியிட்டுள்ளது. சீன வீரர்களும் வீராங்கனைகளும் 5 பிரிவுகளின் முதலாவது இடத்தைச் தொடர்ந்து பெற்றுள்ளனர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில், சீன வீரர் Lin Danனும், மகளிர் ஒற்றையர் பிரிவில், சீன வீராங்கனை Xie Xingfangனும் உலகில் முதலாவது இடம் பெற்றுள்ளார். ஆடவர் இரட்டையர் பிரிவில், சீன Cai Yun Fu Haifeng இணையும், மகளிர் இரட்டையர் பிரிவில், சீன Zhang Yawen, Wei Yili இணையும் உலகிலேயே முதலாவது இடம் பெற்றுள்ளனர். Zheng Bo, Gao Ling ஆகியோர், கலப்பு இரட்டையர் பிரிவிலான முதலாவது இடத்தைப் பெற்றுள்ளனர்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை அரசியலாக்க குறிப்பிட்ட அரசு சாரா அமைப்புக்கள் திட்டமிடுவது, சர்வதேச ஒலிம்பிக் குழு மீதான நிர்ப்பந்தத்தைத் திணிக்கின்ற நடவடிக்கையாகும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், உலகிலுள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Jacque rogge தெரிவித்தார். உள்ளூர் நேரப்படிநேற்று அமெரிக்கச் செய்தி ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த போது, அவர் இவ்வாறு கூறினார்.
சர்வதேச ஒலிம்பிக் குழு, அரசியலற்ற விளையாட்டு அமைப்புகளில் ஒன்றாகும் என்று Jacque rogge சுட்டிக்காட்டினார். இதனால், உலகிலுள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. குறிப்பிட்ட அரசு சாரா அமைப்புக்கள், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் செல்வாக்கைப் பயன்படுத்தி, சொந்த ஆதாயங்களை முன்னேற்றத் திட்டமிடுக்கின்றன. இது, தவிர்க்கப் பட முடியாதது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, ஆக்கப்பூர்வமான வலிமைகளைக் கொண்டிருந்தாலும் அதன் சொந்த அளவைத் தாண்ட முடியாது என்றார் அவர்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் ஆடவர் நூறு மீட்டர் தொலை ஓட்டத்தின் சாம்பியன் பட்டத்தைப் பெற்ற பிரிட்டன் வீரர் Christieக்கு இலண்டன் நகராட்சி மன்றத் தலைவர் Livingstone அழைப்பு விடுத்துள்ளதற்கு சர்வதேச ஒலிம்பிக் குழு 21ம் நாள் அடர்ச்சியும் வருத்தமும் தெரிவித்தது.
தம் முழுவாழ்க்கையில் விளையாட்டு நடவடிக்கையில் தடுக்கப்பட்ட வீரர்கள் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பதைச் சர்வதேச ஒலிம்பிக் குழு எதிர்த்து வருகின்றது என்று சர்வதேச ஒலிம்பிக் குழுவின் செய்தித் தொடர்பாளர் Moreau அம்மையார் தெரிவித்தார்.
1992ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் ஆடவர் நூறு தொலை மீட்டர் ஓட்டத்தின் சாம்பியன் பட்டத்தை Christie பெற்றார். 1999ம் ஆண்டு, ஊக்கமருந்து பயன்படுத்தாக கண்டறிக்கப்பட்ட பின், அவர் ஓய்வு பெற்றார்.
இலண்டனிலுள்ள பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்டம் இவ்வாண்டு ஏப்ரல் 6ம் நாள் நடைபெறும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 2 தங்க பதக்கங்களைப் பெற்ற புகழ் பெற்ற பிரிட்டன் தடகள வீரர் Holmes உள்ளிட்ட 80 பேர் தீபத்தை ஏற்தும் இந்நடவடிக்கையில் கலந்துகொள்வார்கள்.